Published:Updated:

அமெரிக்கப் பெண்களுக்கும் கலம்காரி புடவைகள் பிடிக்கும்!

அமெரிக்கப் பெண்களுக்கும் கலம்காரி புடவைகள் பிடிக்கும்!
பிரீமியம் ஸ்டோரி
News
அமெரிக்கப் பெண்களுக்கும் கலம்காரி புடவைகள் பிடிக்கும்!

மாத்தி யோசி வே.கிருஷ்ணவேணி - படங்கள்: சு.குமரேசன்

அமெரிக்கப் பெண்களுக்கும் கலம்காரி புடவைகள் பிடிக்கும்!

சென்னை, மயிலாப்பூரில் அமைந்துள்ளது ‘த எஸ் ஸ்டூடியோ (The S Studio)’. ஒவ்வொரு சீஸனுக்கும் பண்டிகைக்கும் என பிரத்யேகமாக டிசைன் செய்யப்பட்ட புடவைகள் மற்றும் பிளவுஸ்கள் இங்குள்ள சிறப்பு. இதன் உரிமையாளர் சுபாஷினி ஸ்ரீனிவாசன், தன் ஒவ்வொரு வேலைப்பாட்டிலும் வித்தியாசத்தைக் காட்டுகிறார்.

``என் அம்மா எம்ப்ராய்டரி வேலை, ஸ்வெட்டர் தைப்பதுன்னு எதையாச்சும் செய்துட்டே இருப்பாங்க. அதைப் பார்த்துப் பார்த்தே வளர்ந்ததால எனக்கும் டிசைனிங் மேல ஆர்வம் வந்துடுச்சு. அந்த ஆர்வத்துக்குத் தகுந்த உழைப்பைக் கொடுத்ததால, இப்போ பொட்டீக் வரை வந்திருக்கேன்.

நான் பிறந்து, வளர்ந்தது சென்னையில். கல்லூரிப் படிப்பை மட்டும் கோவையில் முடித்தேன். அஞ்சு வருஷம் ‘ராம்கோ சிஸ்ட'மில் வேலை பார்த்தேன். திருமணம், குழந்தைகள்னு ஆன பிறகு வேலையை விட்டுவிட்டு கணவரின் லெதர் பிசினஸுக்குத் துணையா இருந்தேன். ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் புடவை, சுடிதார் டிசைனிங் செய்துட்டு இருப்பேன்.

அமெரிக்கப் பெண்களுக்கும் கலம்காரி புடவைகள் பிடிக்கும்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அப்படி ஒருமுறை நான் டிசைன் செய்த புடவையை உடுத்திட்டுப் போனப்போ, ‘இது யுனிக்கா இருக்கே... எங்க வாங்கினே..?’னு எல்லோரும் கேட்டாங்க. `எல்லாம் நம்ம கைவண்ணம்தான்'னு சொன்னதும், ‘நிஜமாவா?! அப்போ எங்களுக்கும் செய்து தர முடியுமா’ன்னு கேட்க ஆரம்பிச்சுட்டாங்க. பொழுதுபோக்கா செஞ்ச விஷயத்தை தொழில்முறையில் செய்யும்போது பொறுப்பும், அதிக கவனமும் தேவைப்படுமே..! கொஞ்சம் டென்ஷன் ஆனாலும், அதையே சவாலா எடுத்துட்டு  செய்ய ஆரம்பிச்சேன். எல்லார்கிட்டயும் அசத்தலான வரவேற்பு கிடைக்க, வீட்டில் இருந்தபடியே மாதத்துக்கு 50 முதல் 100 புடவைகள் வரை டிசைன் செய்துகொடுக்கும் அளவுக்கு வாழ்க்கை சட்டுன்னு பரபரப்பா மாறிடுச்சு. என் ரெண்டு பசங்களும் கல்லூரிப் படிப்பு வரை வந்ததும், முழுநேர டிசைனரா இந்த பொட்டீக்கை ஆரம்பிச்சேன்’’ என்று சொல்லும் சுபாஷினி, தன் பொட்டீக்கில் உள்ள ‘S’ என்ற எழுத்து, saree, salwar மற்றும் அவர் பெயரின் முதல் எழுத்து ஆகியவற்றுடன் ‘yes’ என்ற பாசிட்டிவ் அர்த்தத்தையும் குறிப்பதாகக் கூறுகிறார்.

அமெரிக்கப் பெண்களுக்கும் கலம்காரி புடவைகள் பிடிக்கும்!

சுபாஷினி டிசைன் செய்யும் புடவைகளில் என்ன ஸ்பெஷல்?

‘`பொதுவா எல்லா டிசைனர்களுமே பழக்கமான சில அடிப்படைகளில்தான் எம்ப்ராய்டரி, ஆரி வேலைப்பாடுகள், கட் வொர்க்னு எல்லாம் செய்றாங்க. அதில் வித்தியாசம் காண்பிக்கணும் என்பதற்காக, நான் பிளெய்ன் சேலையை வாங்கி, அதற்குச் சாயம் ஏற்றி, பார்டரில் கட் வொர்க், எம்ப்ராய்டரி டிசைன் போன்றவற்றைச் செய்து, அதையே முழுக்க முழுக்க டிசைனர் புடவையா வடிவமைக்கிறேன். அடுத்ததா, சீஸனுக்கு ஏற்ற புடவைகள் என் ஸ்பெஷல். உதாரணமா, டிசம்பர் மாதம்னா மியூசிக் - டான்ஸ் சீஸன் என்பதால் இசைக்கருவிகள், பரதநாட்டிய முத்திரைகள் போன்றவற்றையெல்லாம் புடவையில் வேலைப்பாடாகச் செய்வேன்.  இப்படி தீபாவளி, பொங்கல்னு ஒவ்வொரு பண்டிகைக்கும் அந்தந்தக் கொண்டாட்டங் களையே டிசைன்களா மாற்றுவேன்.

அமெரிக்கப் பெண்களுக்கும் கலம்காரி புடவைகள் பிடிக்கும்!

ஒரிஜினல் காஞ்சிபுரம் பட்டுப் புடவை களை தறியில் நெய்து தரச்சொல்லி வாங்கி, அதிலும் டிசைன் செய்து தர்றேன்’’ என்று சொல்லும் சுபாஷினி, சென்னை, ஹைதராபாத், பெங்களூரு போன்ற நகரங்களில் 15-க்கும் மேற்பட்ட கண்காட்சிகளில் க்ரியேட்டிவ் வேலைப்பாடுள்ள உடைகளைக் காட்சிப் படுத்தியிருக்கிறார்.

``எல்லா இடங்கள்லயும் நல்ல  வரவேற்பு. குறிப்பா, அமெரிக்காவில் எனக்குத் தெரிஞ்சவங்க மூலமா ஸ்டால் போட்டிருந்தேன். எம்ப்ராய் டரி, கட் வொர்க், காஞ்சிபுரம் புடவைகள்னு எல்லாத்தையும் விரும்பி வாங்கினாங்க. குறிப்பா, கலம்காரி வேலைப்பாடு அவங் களுக்கு ரொம்ப பிடிச்சது. கலம்காரி புடவைகளால்தான் அமெரிக் காவிலும் எனக்கு நிறைய கஸ்டமர்கள் கிடைச்சிருக்காங்க’’ என்று மகிழ்கிற சுபாஷினி, இப்போது தன் பொட்டீக்கில் புடவை, சல்வாருடன் ஹேண்ட் பேக், பர்ஸ் போன்ற அக்ஸசரீஸையும் விற்பனை செய்கிறார்.

‘`எவ்ளோ கஷ்டப்பட்டு உருவாக்கின ஸ்பெஷல் டிசைனா இருந்தாலும், ஐந்து புடவைகளுக்கு மேல அதைப் பயன்படுத்துவது இல்லை. ஆறாவது புடவைக்கு நிச்சயமா வேற டிசைனை யோசிக்க ஆரம்பிச்சுடுவேன்'' என்கிறார் சுபாஷினி ஸ்ரீனிவாசன்.

ஆமாம்... இதுதான் வெற்றிக்குக் காரணம்!