Published:Updated:

மனுஷி - 12 - பூ வாசம் புறப்படும் பெண்ணே!

மனுஷி - 12 - பூ வாசம் புறப்படும் பெண்ணே!
பிரீமியம் ஸ்டோரி
மனுஷி - 12 - பூ வாசம் புறப்படும் பெண்ணே!

சுபா கண்ணன் - ஓவியம்: ஸ்யாம்

மனுஷி - 12 - பூ வாசம் புறப்படும் பெண்ணே!

சுபா கண்ணன் - ஓவியம்: ஸ்யாம்

Published:Updated:
மனுஷி - 12 - பூ வாசம் புறப்படும் பெண்ணே!
பிரீமியம் ஸ்டோரி
மனுஷி - 12 - பூ வாசம் புறப்படும் பெண்ணே!

ங்கே பெண்கள் வாழ்த்தப்படுகிறார் களோ, அங்கே இறைவன்மகிழ்கிறான். எங்கே பெண்கள் போற்றப்படவில்லையோ, அங்கே செய்யக்கூடிய புண்ணிய காரியங்கள்கூட பலனளிக்காமல் போய்விடும்.

(மனு 3—56)


னிதாவின் அப்பா மத்திய அரசு ஊழியர். தொடர்ந்து மாற்றல் வந்துகொண்டே இருக்கும் வேலை. ஒவ்வொரு மாநிலமாகப் பார்த்துக்கொண்டே வந்தவளின் மேல்நிலைப் பள்ளிப் படிப்பு முடித்த நிலையில், அப்பாவுக்கு டெல்லிக்கு மாற்றல் கிடைத்தது. அப்போதிலிருந்து டெல்லியிலேயே தங்கி, கல்லூரிப் படிப்பை முடித்தவள், அங்கேயே வேலையும் பார்த்துக்கொண்டு, படேல் இனத்தைச் சேர்ந்த ஜெய்யேஷைத் திருமணம் செய்துகொண்டாள். பெண் குழந்தை அஜியும் பிறந்து வளர்ந்துவிட்டாள்.

மனுஷி - 12 - பூ வாசம் புறப்படும் பெண்ணே!

ஆசை மகள் அஜி ப்ளஸ் டூ முடித்து, அவளுக்கு மருத்துவக் கல்லூரியில் இடமும் கிடைத்துவிட்டது. கல்லூரி தொடக்க நாளுக்காகக் காத்திருந்தாள். அஜியின் நுழைவுத்தேர்வு, கவுன்சலிங் போன்ற ஃபார்மாலிட்டிகளால் இந்த விடுமுறையில் ஒரு சுற்றுலாவுக்கு முன்னதாகவே திட்டமிட முடியவில்லை. இந்நிலையில்தான் டெல்லி தமிழ்ச் சங்கத்தைச் சார்ந்த தமிழர்கள் தமிழ்நாட்டுக்கு டூர் ஏற்பாடு செய்திருந்தார்கள். அனிதாவின் தோழி மீனலோசனிதான் சங்கத்தின் செயலர்.

அனிதாவை போனில் அழைத்த மீனலோசனி, ‘‘இரண்டு டிக்கெட்டுகள் கேன்சலாகிவிட்டன. நீயும் அஜியும் வர்றீங்களா? இரண்டு மணி நேரத்துல சொல்லிடு, ஜெய்யேஷ் என்ன சொல் வார்னு பார்த்துக்கோ’’ என்று சொல்லியபடியே பதிலைக்கூட எதிர்பார்க் காமல் போனை வைத்து விட்டாள்.

குழந்தைப் பருவ நினைவு களும், தமிழ் நாட்டைப் பார்க்க வேண்டும் என்கிற ஆசையும் இருந்ததால், கணவரிடம் அனுமதி கேட்டாள். அவரும் பச்சைக்கொடி காட்டிவிட்டார்.

இதோ... அனிதாவும் அஜியும் டெல்லி தமிழ்ச் சங்க மக்களும் வந்து திருச்சி ஏர்போர்ட்டில் இறங்கியிருக்கிறார்கள். 45-50 வயதில் இருப்பவர்களே இந்தக் குழுவில்  நிறைய பேர். அதனால், தேர்ந்தெடுத்த கிராமங்களில் தங்கியிருந்து, இயற்கையையும் இறைத்தலங்களையும் ரசிக்கும் ஹெரிட்டேஜ் டூராகவே இந்தப் பயணத்தை ஏற்பாடு செய்திருந்தார்கள்.

இந்தப் பயணத்தின்போது அஜிக்கு மிகுந்த ஆச்சர்யம் அளித்தது... கிராமங்களில் உள்ள பெண்கள் தங்கள் தலையில் வைத்திருந்த பூச்சரம்தான். காரணம், டெல்லியிலேயே வளர்ந்ததால், அஜியும் சரி, அந்தக் குழுவில் வந்த மற்ற பெண்களும் சரி... எல்லோரும் ஃபெதர் கட்டிங், பாய் கட்டிங் என்றே பழகி யிருந்ததுதான்.

‘‘இங்க இருக்கற பெண்கள் தலையில பூ வைப்பது கட்டாயமாம்மா?’’ என்று கேட்டாள் அஜி.

அவ்வளவுதான்... அனிதா வுக்குப் பழைய நினைவு கள் எல்லாம் மனதில் நிழற் படங்களாக விரிய, அந்த நினைவுகளை மகளிடம் பகிர்ந்துகொண்டாள்...

‘‘அப்போல்லாம் பெண் குழந்தைகளுக்குத் தலையில் முடி வளர்ந்ததுமே, குட்டி ரப்பர் வளையலை ரிப்பனில் கட்டிச் சுற்றி பூ வைத்து `கிருஷ்ணர் கொண்டை' போட்டுவிடுவார்கள். கொஞ்சம் நீளமாக முடி வளர்ந்துவிட்டால் போதும்... இரண்டு ஜடை பின்னி, இரண்டு ஜடைகளையும் இணைக்கும் பாலமாக, பூக்களை சரமாகத் தொடுத்துச் சூட்டுவார்கள்.  பத்து வயதுக்குப் பிறகு, மல்லி, முல்லை, சாமந்தி, சம்பங்கி, பாரிஜாதம், தாழம்பூ என்று பல பூக்களைக்கொண்டு ஜடை தைப்பார்கள். முழுக்க பூக்களால் தலைமுடியை கவர் செய்து, தொங்கும் குஞ்சலத்துடன் கழுத்து வலிக்க ஒரு தினுசாக வீட்டில் உலவுவதைப் பார்ப்பதற்கே பேரழகாக இருக்கும். ஒரு வாரத்துக்கு தலை வாசனையாக இருக்கும். ஹூம்... நம்ம ஊர் பரபரப்பில் தலை சீவுவதற்கே நேரம் இல்லை’’ என்று அங்கலாய்ப்புடன் முடித்தாள் அனிதா.

தொடர்ந்து, ‘‘அந்தக் காலத்துல மருதாணி, மஞ்சள், சந்தனம், வீட்டில் அரைத்த நலங்கு மாவு, சீயக்காய்ப்பொடி என்று எல்லாமே இயற்கையாகவும் ஃப்ரெஷ்ஷாகவும் இருந்தன. `நம்ம கைப்பக்குவத்தில் உருவான வாசனை!' என்று பெரியவர்களோட மனமெல்லாம் குதூகலிக்கும்’’ என்று ஊர்ப் பக்கமுள்ள பெண்களுக்கும் வாசனைக் கும் இருக்கும் தொடர்பை விவரித்தாள்.

ஆனால், அஜி இளைய தலைமுறை என்பதாலும், படித்தவள் என்பதாலும், `பெண்களிடம் வாசனைக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?' என்று அவளுடைய மனம் கேள்வியை எழுப்பியது. கம்ப்யூட்டர் யுகமல்லவா... உடனே அஜி கூகுளாண்டவரை சரணடைந்தாள். இரவு நீண்டநேரம் கூகுளாண்டவரிடம் பேசியதில் பல தகவல்களைத் தெரிந்துகொண்டாள். தான் தெரிந்து கொண்டதை உடனே அம்மாவிடமும் பகிர்ந்துகொள்ள ஆசைப்பட்டாள். விடிந்ததுமே தான் சேகரித்த விஷயங்களை அம்மாவிடம் பகிர்ந்து கொண்டாள்....

‘‘அம்மா, பெண்களுக்குச் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் சுரப்பிக்கும் வாசனைக்கும் நிறைய தொடர்பு இருக்காம். ஆதிகாலத்தில் ஒரு பெண், ஓர் ஆணிடம் இருந்து வெளிப்படும் வாசனையில் இருந்தே குழந்தை பாக்கியம் தரக்கூடிய தகுதி அவனுக்கு உள்ளதா என்பதுவரை புரிந்துகொள்ளும் சூட்சுமச் சக்தி கொண்டிருந்தாளாம். அந்த வாசனை அறியும் உணர்ச்சியைத் தக்க வைக்கவும், வாசனைகளுக்கு இடையில் உள்ள வேறுபாட்டை உணரவைக்கவும்தான், பெண்களுக்கான பல சடங்குகளிலும் பூக்கள் மற்றும் மருத்துவ குணம் நிறைந்த வாசனைப் பொருள்கள் நிறைய இடம் பெறும்படி பார்த்துக்கொண்டார்கள்.

குறிப்பாக, பெண்களின் பீரியாடிக் சைக்கிள் என்று சொல்லப்படும் மாதாந்திரச் சுழற்சியின் முதல் பாதியில் (அதாவது, 28 நாள்கள் கொண்ட ஒரு சுழற்சியில் முதல் 14 நாள்கள்) வாசனை உணரும் தன்மை அதிகமாக இருக்கிறது. கரு முட்டை உடையும் நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக வாசனை உணரும் தன்மை குறைகிறது. ஆனால், கரு விந்தணுவுடன் சேர்ந்து கருத்தரித்துவிட்ட பிறகு, ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரிப்பதன் மூலம் மெல்லிய வாசனையைக்கூட துல்லியமாக உணர்வதாலேயே வாந்தி எடுக்கும்படி நேர்கிறது.

வாசனை என்கிற உணர்வு பெண்களுடன் இணைந்த ஒன்று... ஆண்களைவிட பெண்களால் அதிகமான வாசனைகளைப் பிரித்தறிய முடியும்’’ என்று கூகுளாண்டவர் அருளால் தான் தெரிந்து கொண்ட அத்தனை தகவல் களையும் அம்மாவிடம் பகிர்ந்துகொண்டாள்.

`ஏன், எதற்கு' என்று கேள்வியே கேட்காமல், பெரியவர்களிடம் இருந்த மரியாதை கலந்த பக்தியுடன் பின்பற்றிய தனக்கும், எதையுமே ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்று கூகுளில் தேடித்தேடி தகவல்களைச் சேகரித்துச் சொல்லும் தன்னுடைய மகளுக்கும் உள்ள இடைவெளியை நினைத்து அனிதா வியந்து நின்றபோது, ‘‘இந்தா... சந்தனத்தை எடுத்துக்கோ’’ என்று அரைத்த சந்தனத்தைக் கொடுத்த மீனலோசனி, ‘‘இதுதான் ஆத்மா வரை சென்று குளிர்விக்குமாம். நேற்றுதான் ஒரு செய்தித் துணுக்கில் படித்தேன்’’ என்றாள்.

சந்தனத்தை எடுத்துக்கொண்டபடியே அனிதாவும் மகள் அஜியும் ஒருவரை ஒருவர் அர்த்தபுஷ்டியுடன் பார்த்து சிரித்துக் கொண்டனர்!

(இன்னும் உணர்வோம்)

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வாசனை!

மையல் செய்யும்போது, கொதிக்கும் சத்தம் காதுக்குக் கேட்கிறது. கொதிக்கும்போது உண்டாகும் வாசனையை நாசி உணர்கிறது. அந்த வாசனை வாயில் உமிழ்நீரைச் சுரக்கச் செய்கிறது. அந்த உமிழ்நீரே நாம் உண்ணும் உணவை நன்றாக மென்று உண்ணும்படிச் செய்கிறது. ஆக, உணவை வாய்க்கும் வயிற்றுக்குமாக மட்டுமல்லாமல் ஐம்புலன்களாலும் அனுபவிக்கச் சொல்கிறது ஆயுர்வேதம்.