Published:Updated:

ஆஸ்கர் பெண்கள்

ஆஸ்கர் பெண்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆஸ்கர் பெண்கள்

பா.ஜான்ஸன்

விருதுபெற்ற சிறந்த படத்தின் பெயரை மாற்றிச் சொன்ன குழப்பம், ட்ரம்ப்பின் நடவடிக்கையால் விழாவுக்கு வராத அஸ்கர் ஃபர்ஹாடி என இந்த வருடமும் ஆஸ்கர் விழாவில் பரபரப்புக்குப் பஞ்சம் இல்லை. கரோலின் வாட்டர்லோ, ஜோனா நடாசெகரா, அன்னா உட்வர்டி எனப் பல பெண்கள் மேடை ஏறி ஆஸ்கர் பெற்றார்கள். இவர்கள் தவிர, குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய மூன்று பெண்கள் இருக்கிறார்கள்!

ஆஸ்கர் பெண்கள்

சட்டென மாறுது பாவனை!

 எம்மா ஸ்டோன் (லா லா லேண்ட்) சிறந்த நடிகை

ரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ‘பேர்ட் மேன்’ படத்தில் நடித்ததற்காக துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதை வென்றிருக்க வேண்டியவர், இந்த முறைதான் சிறந்த நடிகையாகக் கௌரவிக்கப்பட்டிருக்கிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் இல்லாத `அமேசிங் ஸ்பைடர் மேன்' படத்தின் இரண்டு பாகங்களிலும் நடித்திருந்தாலும், ‘இர்ரேஷனல் மேன்’ படத்தில் மாணவியாக, ‘பேர்ட்மேன்’ படத்தில் போதைக்கு அடிமையானவராக அசத்தியிருக் கிறார்!

‘லா லா லேண்ட்’ படத்தில் நடிகையாக முயற்சி செய்யும் பெண்ணின் கதாபாத்திரம் எம்மாவுக்கு. படத்தில் எம்மா நடிகைக்கான ஆடிஷனில் கலந்துகொள்வது போல ஒரு காட்சி... போனில் எதிர்முனையில் இருப்ப வரிடம் சந்தோஷமாகப் பேசிக்கொண்டே, அழும்படியான காட்சியை நடித்துக்காட்ட வேண்டும். நடித்துக்கொண்டிருக்கும்போதே பின்னால் கதவைத் திறந்துகொண்டு ஒருவர் உள்ளே வருவார். சடாரென முக பாவனையை மாற்றி அந்த இடையூறுக்குத் தகுந்த மாதிரி ஒரு பார்வை பார்த்துவிட்டு மறுபடி, நடிப்பைத் தொடர்வதா, வேண்டாமா என்கிற குழப்பத் துடன் நிற்பார் எம்மா. அந்த ஒரு காட்சியே போதும்... இவர் சிறந்த நடிகை என்பதற்கு!

நடிக்க வரும்முன், மூன்று ஆண்டு காலம் பேனிக் அட்டாக் பாதிப்புக்கு உள்ளாகி இருந்தார் எம்மா. அப்போது அவருக்கு 11 வயதுதான். சிகிச்சை எடுத்துக்கொண்டே நாடகப் பயிற்சிகளையும் மேற்கொண்டார் எம்மா... அந்த அளவுக்கு நடிப்பின் மீது காதல்கொண்டவரிடம், இப்போது சென்றடைந் திருக்கிறது ஆஸ்கர்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஆஸ்கர் பெண்கள்

அந்த 528 டாலர்!

வயோலா டேவிஸ்  (ஃபென்சஸ்) சிறந்த துணை நடிகை


ப்பா குதிரைப் பயிற்சியாளர், அம்மா வீட்டு வேலைகள் செய்பவர், வறுமை சூழ்ந்திருக்கும் குடும்பம். ஓய்வு நேரத்தில்கூட சினிமா பற்றி யோசிக்க முடியாத குடும்பச் சூழல். அப்படிப்பட்ட குடும்பத்தில் ஐந்தாவது குழந்தை வயோலா டேவிஸ். அவருக்குப் பிறகு பிறந்த தங்கையையும் சேர்த்து ஆறு பேர். பண நெருக்கடியைச் சமாளிக்க முடியாமல் வயோலாவையும் அவருடைய இரு சகோதரிகளையும் பாட்டி வீட்டில் விட்டுவிடுகிறார்கள் பெற்றோர். இந்தச் சூழலில், நடிகையாகச் சாதிக்க வேண்டும் என யோசிக்க முடியுமா? வயோலாவால் முடிந்தது!

நாடகங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள ஆரம்பித்தவருக்கு, மெள்ள மெள்ள சினிமா ஆசை துளிர்விட்டது. 1996-ல் முதல் சினிமா வாய்ப்பு ‘த சப்ஸ்டன்ஸ் ஆஃப் ஃபயர்’ மூலம் கிடைக்க, உற்சாகமானார். முதல் படம், ஒரே நாள்தான் ஷூட், மிகச்சிறிய வேடம். ரத்த பாட்டிலை ஹீரோவிடம் கொடுக்கும் சின்ன வேலை. முதல் வாய்ப்பை விட்டுவிடக் கூடாது என்கிற எண்ணத்தால் ஆர்வமாக நடித்தார் வயோலா.

சோர்ந்துவிடாமல் அடுத்தடுத்த வாய்ப்புகளைத் தேடி அலைந்தவருக்கு வரிசையாகப் பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன. சில படங்கள் ஆஸ்கர், கோல்டன் க்ளோப் விருதுகளுக்கும் பரிந்துரைக்கப்பட்டன. விருது பற்றிய எந்தக் கவலையும் இல்லாமல் பயணித்துக்கொண்டிருந்தார். வயோலாவின் பெயர் இதற்கு முன் 167 முறை பல்வேறு விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. அதில் 79 விருதுகளை வென்றிருக்கிறார். இப்போது `ஃபென்சஸ்' படத்துக்காகக் கிடைத்த ஆஸ்கரையும் சேர்த்து மொத்தம் 80 விருதுகள். இத்தனைக்குப் பிறகும் அவர் பெரிய விருதாக நினைப்பது முதல் முதலாக வாங்கிய சம்பளமான 528 டாலர்கள்தானாம். லவ்லி வயோலா!

ஆஸ்கர் பெண்கள்

68 வயதிலும் சவாலே சமாளி!

காலின் அட்வுட்  (ஃபென்டாஸ்டிக் பீஸ்ட்ஸ் அண்ட் வேர் டு  ஃபைண்ட் தெம்) சிறந்த ஆடை வடிவமைப்பு


2002-ல் ‘சிகாகோ’, 2005-ல் ‘மெமரீஸ் ஆஃப் கிஷா’, 2012-ல் ‘ஆலிஸ் இன் த வொண்டர்லேண்ட்’ என முன்பே மூன்று முறை ஆஸ்கர் விருது வென்றவர் காலின் அட்வுட். நான்காவது முறையாக ‘ஃபென்டாஸ்டிக் பீஸ்ட்ஸ் அண்ட் வேர் டு ஃபைண்ட் தெம்’ படத்துக்காக விருது பெற்றிருக்கிறார்.

பெயின்ட்டிங் பயின்ற காலினுக்கு அப்போது உடை வடிவமைப்பு பற்றி எல்லாம் எண்ணம் இல்லை. அதைத்தான் பிற்காலத்தில் வேலை யாக செய்யப் போகிறோம் என்றும் தெரியாது.

17 வயதிலேயே கர்ப்பமடைகிறார்... படிப்பைத் தொடர முடியாத சூழல். குழந்தையையும், கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த கணவரையும் கவனிப்பதற்காக, கிடைக்கும் வேலைகளை எல்லாம் செய்யத் தொடங்குகிறார். அதில் பொட்டீக் ஷாப் வேலையும் உண்டு. பின்பு ஸ்காலர்ஷிப் கிடைத்து படிப்பையும் தொடர்கிறார்.

அப்போது அவரின் அம்மா செட் டிசைனராகப் பணிபுரிந்த ‘ரேக்டைம்’ படத்தின் மூலம் புரொடக்‌ஷன் டிசைனராக வாய்ப்பு கிடைக்கிறது. பிறகு துணை ஆடை வடிவமைப் பாளராக ஒரு படத்தில் பணி. நாடகங்களுக்கும் படங்களுக்கும் ஆடை வடிவமைப்பது என காலினின் பாதை சினிமாவை நோக்கி முழுதாகத் திரும்புகிறது. அந்தப் பாதை நான்கு ஆஸ்கர்களைத் தாண்டியும் நீண்டு கொண்டிருக்கிறது.

சில படங்களுக்கு எதுபோன்ற ஆடைகளை வடிவமைப்பது என முடிவுசெய்வது மிக சிரமமாக இருக்கும். காரணம் காலினின் பல படங்கள் நாவலைத் தழுவியவையே. அது நிஜ சம்பவங்களைத் தழுவியதாக இருந்தால் பிரச்னை இல்லை. கற்பனையான ஃபேன்டசி படங்களாக இருந்தாலோ, ஆடை எப்படி என்பதையும் கற்பனை மூலமே தீர்மானிக்க வேண்டியிருக்கும். ‘இன் டு த வுட்ஸ்’,‘ஆலிஸ் த்ரூ த லுக்கிங் க்ளாஸ்’, ‘ஃபென் டாஸ்டிக் பீஸ்ட்ஸ் அண்ட் வேர் டு ஃபைண்ட் தெம்’ எனப் பல படங்கள் அப்படியானவை தாம். இந்தச் சவால்களைத் தன்  கலைத் திறமையால் சாதாரணமாகக் கடந்து ஜெயித்துக் கொண்டிருக்கிறார் இந்த 68 வயது யுவதி!