Published:Updated:

வீடு Vs வேலை - வீண் பேச்சுகளை கண்டுகொள்ளாமல் விடுங்கள்!

வீடு Vs வேலை - வீண் பேச்சுகளை கண்டுகொள்ளாமல் விடுங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
வீடு Vs வேலை - வீண் பேச்சுகளை கண்டுகொள்ளாமல் விடுங்கள்!

யாழ் ஸ்ரீதேவி - ஓவியங்கள்: ராமமூர்த்தி

னைவரையும் சிநேகமாக்கிடும் மந்திரப் புன்னகைக்குச் சொந்தக்காரர் லதா. எவ்வளவு பிஸியான தருணத்திலும் பளிச் தோற்றம்... டென்ஷன் பொழுதுகளிலும் நிதானம் என வியக்கவைக்கிறார். பத்தாம் வகுப்புப் படிப்பு, நெருங்கிய உறவில் திருமணம், குழந்தைகள் என வாழ்க்கை அமைந்த பிறகும், மிகுந்த நம்பிக்கையோடு ஆசிரியர் பயிற்சி முடித்து வாழ்க்கையில் உயர்ந்திருக்கிறார் லதா. இப்போது சேலம் சிந்தி இந்து உயர்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர். கணவர் அண்ணாதுரை மெக்கானிக்கல் ஷாப் நடத்துகிறார். முதல் மகன் விக்னேஷ் பி.டெக்  படித்து விட்டுப் பணிபுரிகிறார். இரண்டாவது மகன் லிங்கேஷ் நாராயண் பத்தாம் வகுப்பு படிக்கிறார்.

வீட்டில் எல்லோரும் விரும்பும் பெண், வேலையிடத்தில் `சூப்பர் ஹெச்.எம்' என கால்பதிக்கும் இடங்களில் எல்லாம் சிக்ஸர் அடித்து  விளாசும் லதாவின் சக்சஸ் டெக்னிக்தான் என்ன?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வீடு Vs வேலை - வீண் பேச்சுகளை கண்டுகொள்ளாமல் விடுங்கள்!

• நிறையப் படிக்க ஆசைப்பட்டேன். ஆனால், நதியின் போக்கு போலத் தான் என் வாழ்க்கைப் பயணம் அமைந்தது. படிக்க முடியாத ஏமாற்றம் என்னைத் தூங்கவே விடவில்லை; என்னைப் `படி படி' எனப் புரட்டியது. நெருக்கடிகளே என்னை முயற்சியை நோக்கித் தள்ளின.

வீடு Vs வேலை - வீண் பேச்சுகளை கண்டுகொள்ளாமல் விடுங்கள்!

• படித்ததோடு, பணிக்கும் சென்றுவிடும் வேகம் எனக்குள். குழந்தை பிறந்த பின் பல சிரமங் களைச் சந்தித்தேன். ஆதரவு இல்லை என்றாலும், முயற்சிகளைத் தீவிரப் படுத்தினேன். எதிர்ப்புகளே என் வெற்றிக்கு வழி வகுத்தன.

வீடு Vs வேலை - வீண் பேச்சுகளை கண்டுகொள்ளாமல் விடுங்கள்!

• கைக்குழந்தையை வைத்துக்கொண்டே ஆசிரி யர் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து படிக்கத் தொடங்கி னேன்.  வீட்டு வேலைகளை முடித்துவிட்டு, இரவு 10 மணியிலிருந்து நள்ளிரவு 1 மணி வரை படிப்பேன்.  இப் படி எனக்கான நேரத்தை நானே உருவாக்கிக் கொண்டேன். 

வீடு Vs வேலை - வீண் பேச்சுகளை கண்டுகொள்ளாமல் விடுங்கள்!

• படிக்கும் சுவாரஸ்யமான விஷயங்களைக் குழந்தைகளுடன் பகிர்ந்துகொள்வது அவர்களையும் எனர்ஜிட்டிக்காக மாற்றும். 

வீடு Vs வேலை - வீண் பேச்சுகளை கண்டுகொள்ளாமல் விடுங்கள்!

• கூட்டுக் குடும்பத்தில் பல சிரமங்கள் இருந்தாலும் கூட, வேலை, வீடு இரண் டையும் சமாளிக்கும் பெண்களின் குழந்தை வளர்ப்புச் சுமையை அது ஓரளவு குறைக்கிறது. உறவுகளோடு கொஞ்சம் அனுசரித்துப் போனதால், குழந்தையை விட்டுவிட்டு வேலைக்கும் சென்று சமாளிக்க முடிந்தது.

வீடு Vs வேலை - வீண் பேச்சுகளை கண்டுகொள்ளாமல் விடுங்கள்!

• காலை நேர அவசரங்களைத் தவிர்க்க, இரவே சமையலுக்கான முன்தயாரிப்புகளை முடித்துவிடுவேன். அன்றாடம் முடிக்கக்கூடிய வீட்டு வேலைகளை வார விடுமுறை நாளுக்காகச் சேர்த்து வைப்பதில்லை.

வீடு Vs வேலை - வீண் பேச்சுகளை கண்டுகொள்ளாமல் விடுங்கள்!

• நம் வீட்டிலோ, வேலை பார்க்கும் இடத்திலோ நமக்குப் பிடித்த மாதிரி எல்லாமே அமையாது. எப்போதும் நமக்கு எதிராகச் செயல் படுபவர்களே நம்மை அடுத்த கட்டத்துக்கு உயர்த்துவதாக உணர்கிறேன்.

வீடு Vs வேலை - வீண் பேச்சுகளை கண்டுகொள்ளாமல் விடுங்கள்!

• விடுமுறைகளின் போது சொந்தபந்தங் களோடு ஏற்காடு, ஊட்டி, திருப்பதி என ஏதேனும் ஓர் இடத்தில் இரண்டு நாள்கள் தங்கி ரிலாக்ஸ் செய்துவிட்டு மனம் லேசாகி திரும்புவேன். 

வீடு Vs வேலை - வீண் பேச்சுகளை கண்டுகொள்ளாமல் விடுங்கள்!

• எனக்குப் புத்தகம் வாசிப்பது பிடிக்கும். ரெஸ்ட் ரூமில்கூட செய்தித்தாள், பத்திரிகை படிக்கும் ஆள் நான்! இரவு தூங்குவதற்கு முன்பு 2 மணி நேரம் புத்தகம் படிப்பதற்காக ஒதுக்குகிறேன்.

வீடு Vs வேலை - வீண் பேச்சுகளை கண்டுகொள்ளாமல் விடுங்கள்!

• பணியிடங்களில் ஆண்களின் விமர்சனங் களுக்கு நான் ஒரு போதும் சோர்ந்து போவதில்லை. பெண்கள் தங்களின் பணி களைக் குறையின்றிச் செய்வ தில் கவனம் செலுத்தினாலே போதும் என்பது என் அனுபவப்
பாடம். எனக்கு எதிரான எந்த அரசியலைப் பற்றியும் கவலைப்படுவதில்லை.

வீடு Vs வேலை - வீண் பேச்சுகளை கண்டுகொள்ளாமல் விடுங்கள்!

• விடுமுறை நாளில் வீட்டைச் சுத்தம் செய்வது போன்ற வேலைகள் இருக்கும். அவற்றை வீட்டில் இருப்பவர்களுக்கும் பிரித்துக் கொடுத்து வேலையை எளிதாக்கிக் கொள்வேன்.

வீடு Vs வேலை - வீண் பேச்சுகளை கண்டுகொள்ளாமல் விடுங்கள்!

• வீடு, வேலை இரண்டையும் சமாளிப் பதில் உள்ள பிரச்னை களை ஸ்மார்ட்டாகக் கையாண்டுவிட்டால் பெண்ணால் பொருளா தாரச் சுதந்திரத்தை எட்ட முடியும்.

• வேலையும் வீடும் எதிர் எதிர் திசைகளில் பயணிக்கும் இரட்டைக் குதிரைகள். அலு வலக டென்ஷனை ஒருநாளும் வீட்டில் வெளிப்படுத்தியதில்லை. பள்ளிக்கு வந்துவிட்டால் வீட்டை மறந்துவிடுவேன். எங்கு இருக் கிறேனோ, அங்குள்ள வேலைக்கே முக்கியத்துவம் தருவேன்.

வீடு Vs வேலை - வீண் பேச்சுகளை கண்டுகொள்ளாமல் விடுங்கள்!

• வேலை முடிந்து வீடு திரும்பியவுடன், குழந்தை களோடு முழுமையாக ஒரு மணி நேரம் செலவழிப்பதை வழக்கப்படுத்திக்கொண்டேன். காலை முதல் என்னைக் காணாத ஏக்கம் போகும் வரை குழந்தையைப் பேசவைத்துக் கேட்பேன்... விளையாடுவேன்.

• `வேலைக்குச் செல்வதால் வீட்டைக் கவனிப்பதில்லை' என்பது போன்ற ஏச்சும் பேச்சும் அவ்வப் போது கிளம்பும். அவற்றைப் பெரிது படுத்தாமல் என் வேலைகளைச் செய்து முடிப்பேன். இதுபோன்ற பேச்சுகளைக் கண்டுகொள்ளாமல் விட்டால்தான் உறவினர்களிடம் பிரச்னை வளராமல் தடுக்கலாம்.

வீடு Vs வேலை - வீண் பேச்சுகளை கண்டுகொள்ளாமல் விடுங்கள்!

• `பணியில் சேர்ந்தோம்; வேலையைப் பார்த்தோம்' என்று இல்லாமல், படிக்கச் சிரமப்படும் குழந்தைகளிடம் கூடுதல் கவனம் செலுத்தினேன். அறிவொளி இயக்கப் பணிகளிலும் ஈடுபட் டேன். கூடுதல் உழைப்பு எனக்குத் தலைமை ஆசிரியர் பதவியைப் பெற்றுக் கொடுத்தது.

• வீடு, பணியிடம் என இரண் டிலும் பல்வேறு பொறுப்புகளைக் கவனிப்பதால், குடும்பத்தினரிடம்  மனம்விட்டுப் பேச நேரம் இருக் காது. வார விடுமுறை நாள்களில் சேர்த்துவைத்துப் பேசிவிடுவேன்.

வீடு Vs வேலை - வீண் பேச்சுகளை கண்டுகொள்ளாமல் விடுங்கள்!

• பள்ளியில் இருக்கும்போது, வீட்டில் நடந்த எந்த விஷயமும் என் முகத்தில் தெரியாது. பல விமர்சனங்களைத் தாண்டியும் மற்றவர்கள் முன்பு நான் எப்போதும் ஸ்பெஷலாகத் தெரியும்படி உடுத்துவேன். இதுவே எனது அடையாள மாகவும் மாறிவிட்டது. தோற்றம்தான் நம்மைப் பற்றிய எண்ணத்தை மற்றவர்கள் மனதில் உருவாக்குகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism