னவுகளோடு காத்திருந்த நாள் நிஜமாகும் தருணமான முகூர்த்த தினத்தில், மணமகளின் வெட்கம் பூசிய கன்னங்களையும் புன்னகை தவழும் முகத்தையும் மேலும் பொலிவாக்கிடும் `பிரைடல் மேக்கப்’ எப்படி செய்வது என்று பார்ப்போமா?

பேஸிக் மேக்கப் முதல் பிரைடல் மேக்கப் வரை! - 7

பிரைடல் மேக்கப் செய்யத் தேவையானவை:

1.மாய்ஸ்ச்சரைஸர்
2.பிரைமர்
3.கன்சீலர்
4.ஃபவுண்டேஷன் (லோஷன்)
5.ட்ரான்ஸ்லுசன்ட் பவுடர்
6.ஐ ஷேடோ
7.க்ரீம் ஐ லைனர்
8.காஜல்
9.ஐப்ரோ பவுடர்
10.ஹைலைட்டர்
11.மஸ்காரா
12.பிளஷர்
13.பேஸ் லிப்ஸ்டிக்
14.லிப் லைனர் பென்சில்
15.லிப்ஸ்டிக்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பேஸிக் மேக்கப் முதல் பிரைடல் மேக்கப் வரை! - 7

மேக்கப் வழிமுறை:

1. சிறிதளவு மாய்ஸ்ச்சரைஸரை எடுத்துக்கொள்ளவும்.
2.முகம் முழுவதும் பிரஷ்ஷினால் அப்ளை செய்யவும்.
3.பிரைமரை எடுத்துக்கொள்ளவும்.
4.பிரஷ்ஷினால் தொட்டு முகத்தில் அப்ளை செய்யவும். இது சருமத்தில் உள்ள சுருக்கங்களை மறைத்து சருமத்தைச் சீராக்கும்.
5.கன்சீலரை எடுத்துக்கொள்ளவும்.
6.கன்சீலரை பிரஷ்ஷினால் தொட்டு கருவளையம் மற்றும் தழும்புகளின் மீது பூசி மறைக்கவும்.
7.சரும நிறத்துக்குப் பொருத்தமான ஃபவுண்டேஷன் லோஷனை எடுத்துக்கொள்ளவும்.
8.ஸ்பான்ச் மூலம் முகம், காது மற்றும் கழுத்து என அனைத்துப் பகுதிகளிலும்  அப்ளை செய்யவும்.
9.ட்ரான்ஸ்லுசன்ட் பவுடரை எடுத்துக்கொள்ளவும்.
10.பிரஷ்ஷினால் சிறிதளவு பவுடரைத் தொட்டு முகம், காது மற்றும் கழுத்து என அனைத்துப் பகுதிகளிலும் ஒரே சீராக அப்ளை செய்யவும்.

பேஸிக் மேக்கப் முதல் பிரைடல் மேக்கப் வரை! - 7

11.நியூட் கலர் ஐ ஷேடோவை எடுத்துக்கொள்ளவும்.
12.கண் இமைகளின் மேற்பகுதியில் அப்ளை செய்யவும்.
13.ஆடைக்குப் பொருத்தமான நிறத்தில் ஐ ஷேடோவை எடுத்துக்கொள்ளவும்.
14.பிரஷ்ஷினால் தொட்டு கண் இமைகளின் மேல் வலது ஓரத்தில் அப்ளை செய்யவும்.
15.க்ரீம் ஐ லைனரை பிரஷ்ஷினால் அளவாக எடுத்துக்கொள்ளவும்.
16.ஐ லைனரை கண் இமைகளின் மேற்பகுதி இமை முடிகளையொட்டி விருப்பத்துக்கு ஏற்ற வடிவில் வரைந்து கொள்ளவும்.
17.காஜல் பென்சிலை எடுத்துக்கொள்ளவும்.
18. கண்களுக்கு மை இடவும்.
19.ஐப்ரோ பவுடரை எடுத்துக்கொள்ளவும்.
20.பிரஷ்ஷினால் தொட்டு புருவங்களுக்கு அப்ளை செய்யவும்.
21.ஹைலைட்டரை எடுத்துக்கொள்ளவும்.

பேஸிக் மேக்கப் முதல் பிரைடல் மேக்கப் வரை! - 7

22.பிரஷ்ஷினால் ஹைலைட்டரைத் தொட்டு புருவங்களுக்குக் கீழே அப்ளை செய்து கொள்ளவும். இது புருவங்களை எடுப்பாகக் காட்டும்.
23. மஸ்காரா எடுத்துக்கொள்ளவும்.
24. மஸ்காராவைக் கண்களின் மேல் மற்றும் கீழ்ப்பகுதி இமை முடிகளுக்கு அப்ளை செய்யவும்.
25. தேவையான நிறத்தில் பிளஷரை எடுத்துக்கொள்ளவும்.
26. பிளஷரை பிரஷ்ஷினால் எடுத்துக் கன்னங்களுக்கு அப்ளை செய்யவும்.
27. பேஸ் லிப்ஸ்டிக்கை எடுத்துக்கொள்ளவும்.
28. உதடுகளுக்கு அப்ளை செய்யவும். இது உதடுகளில் உள்ள வரிகள் தெரியாமல் மறைத்து உதடுகளை வழவழப்பாக்கும்.
29. லிப் லைனர் பென்சிலை எடுத்துக்கொள்ளவும்.
30. உதட்டு ஓரங்களில் தேவையான வடிவத்தில் வரைந்து கொள்ளவும்.
31. லிப்ஸ்டிக்கை எடுத்துக்கொள்ளவும்.
32. பிரஷ்ஷினால் எடுத்து, உதடுகளில் வரைந்த கோட்டுக்குள் அப்ளை செய்யவும்.

முகூர்த்தத்துக்கு மணமகள் ரெடி!

உதவி: நேச்சுரல்ஸ்

நகைகள் உதவி: `ஜாஸ் கலெக்‌ஷன்ஸ்’  மாடல்: பாயல்

எக்ஸ்பர்ட் டிப்ஸ்...

பிரைடல் மேக்கப் குறித்து நேச்சுரல்ஸ் உரிமையாளர் வீணா வழங்கும் டிப்ஸ்...

பேஸிக் மேக்கப் முதல் பிரைடல் மேக்கப் வரை! - 71. முகூர்த்த நாளுக் கான மேக்கப்பில் ஐ ஷேடோ மற்றும் லிப்ஸ்டிக்குக்கு சரியான நிறங்கள் என்ன?

உடைக்குப் பொருத்தமான ஐ ஷேடோ மற்றும் லிப்ஸ்டிக்கைத்தான் பெரும்பாலானவர்கள் தேர்வு செய்கின் றனர். ஆனால், உங்கள் சரும நிறம் மற்றும் நீங்கள் தேர்வு செய்யும் மேக்கப்புக்கு ஏற்றவாறு நிறங்களைத் தேர்ந்தெடுங்கள். முகத்தில் எல்லா மேக்கப்பும் ஹெவியாக இருக்க வேண்டாம். ஐ ஷேடோ ஹெவியாக இருந்தால் உதடுகளுக்கு நியூட், பீச் போன்ற மிதமான நிறங்கள்தான் அழகு.

2. திருமணத்துக்கு முன்பு என்ன மாதிரியான ஸ்கின் கேர் அவசியம்?


முறையாகப் பராமரிக்கப்பட்ட சருமம்தான் மேக்கப்பில் கூடுதலாக ஜொலிக்கும். மணநாளுக்கு முன்பு நிறைய தண்ணீர் மற்றும் ஜூஸ் குடியுங்கள். சத்தான, ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிடுங்கள். ஜங்க் ஃபுட், எண்ணெய் பலகாரங்களைத் தவிருங்கள். இவற்றைக் கடைப்பிடித்தாலே முகம் பளபளப்பாகி மேக்கப் செய்வதற்கும் கைகொடுக்கும்.

3. ரிசப்ஷனுக்காக என்னுடைய முடியை எப்படி தயார்செய்வது, என்ன மாதிரியான ஹேர் ஸ்டைல் செய்வது?


உங்களுக்கு என்ன ஹேர் ஸ்டைல் செய்யப்போகிறார்களோ அதற்கு முன்பு ஹேர் வாஷ் செய்ய வேண்டுமா, தேவைப்படாதா என்பதை உங்கள் பியூட்டிஷியனிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். இப்போதைய ட்ரெண்டின்படி மெஸ்ஸி பன், பிஷ்/ஃபிரெஞ்ச் பிரைய்ட், லோ பன்ஸ், ஓபன் லெட் டவுன் கர்ள்ஸ் போன்ற ஹேர் ஸ்டைல்கள் ரிசப்ஷனுக்குப் பொருத்தமாக இருக்கும்.

பேஸிக் மேக்கப் முதல் பிரைடல் மேக்கப் வரை! - 7

ந்த இதழில் வெளிவந்திருக்கும் `பேஸிக் மேக்கப்’ பகுதியை வீடியோவாக http://bit.ly/avalmakeup6-ல் காணலாம் அல்லது இந்த க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்யுங்கள்.