Published:Updated:

மொழி - ஜீன்ஸும் லெகின்ஸும் சேர்ந்தால்?

மொழி - ஜீன்ஸும் லெகின்ஸும் சேர்ந்தால்?
பிரீமியம் ஸ்டோரி
News
மொழி - ஜீன்ஸும் லெகின்ஸும் சேர்ந்தால்?

தீபா ராம்

ன்றைய நவீன உலகில் பல portmanteau வார்த்தைகள் காணக்கிடைக்கின்றன. இரண்டு வெவ்வேறான வார்த்தைகளை ஒன்றாக்கி புது வார்த்தை உருவாக்குவதுதான் Portmanteau. உடுத்தும் உடை முதல் வாசிக்கிற வலைத்தளம் வரை எங்கும் இந்த வார்த்தைகள் நிறைந்து காணப்படுகின்றன. சமூக வலைத் தளங்களின் ஆட்சியால் இத்தகைய வார்த்தைகள் பத்திரிகைகளில் மட்டுமன்றி அன்றாட பயன்பாட்டிலும் பரவலாகிவிட்டன. அத்தகைய வார்த்தைகளை அறிவோம் வாருங்கள்!

மொழி - ஜீன்ஸும் லெகின்ஸும் சேர்ந்தால்?

உங்களுக்கு `Jeggings' தெரியுமா..?

இன்றைக்குப் பெரும் பாலான யுவதிகள் விரும்பி அணியும் ஓர் உடை leggings.

ஜீன்ஸ் துணியை போலவே உருவாக்கப்பட்ட லெகின்ஸ் தான் Jeggings. பார்ப்பதற்கு ஜீன்ஸ் போலவே இருந் தாலும், லெகின்ஸ் போலவே stretch fit உடையது இது.

ஓ... பிரிட்டன்!

ஐரோப்பிய நாடுகளின் குழுமத்தில் இருந்து பிரிட் டன் (United Kingdom) வெளி யேறியதைக் குறிக்கும் சுருக்கம்தான் brexit (‘Britain’ and ‘exit’).

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மொழி - ஜீன்ஸும் லெகின்ஸும் சேர்ந்தால்?

காலையும் மாலையும் கலந்து...

காலை உணவான break fast-ல் பரிமாறப்படும் உணவு களான முட்டை, இறைச்சி மற்றும் கேக் போன்ற இனிப்பு வகைகளை இரவில் பரி மாறினால், அதற்குப் பெயர் Brinner (‘breakfast’ and ‘dinner’) கடத்தல்.

மனிதர்களைப் பிணைய கைதியாக்கி கடத்தல் நிகழ்த் தினால் அது hijacking. இந்த hijacking ஒருவர் காரில் பயணம் செய்யும்போது நிகழ்ந்தால் அதுதான் Carjacking (‘car’ and ‘hijacking’). கார், மனிதர் இருவரையும் சேர்ந்து கடத்தினால்தான் இந்தச் சொல் பொருந்தும்.
 
இன்னொன்றும் இருக் கிறது... பனிக்காலத்தில் காரை நிறுத்திவிட்டு இன்ஜினை அணைக்காமல் காரின் உரிமையாளர் வெளியே செல்லும் போது கண நேரத்தில் காரை கடத்திக்கொண்டு போவது Frostjacking (‘frost’ and ‘hijack).