Published:Updated:

கையில் ஏந்தும் நிழல் உலகம்! - கேமரா பெண் சௌம்யா

கையில் ஏந்தும்  நிழல் உலகம்! - கேமரா பெண் சௌம்யா
பிரீமியம் ஸ்டோரி
News
கையில் ஏந்தும் நிழல் உலகம்! - கேமரா பெண் சௌம்யா

பதிவுகள் பொன்.விமலா

கையில் ஏந்தும்  நிழல் உலகம்! - கேமரா பெண் சௌம்யா

மாடலிங், வெட்டிங், ட்ராவல், ஃபுட், வைல்ட்லைஃப் என போட்டோகிராஃபியில் வெரைட்டிகள் பல இருந்தாலும், தன்னை தனியொரு பிரிவுக்குள் சுருக்கிக்கொள்ளாமல், தன் ஆர்வத்தை சகல திசைகளிலும் செலுத்திக்கொண்டிருக்கும் சௌம்யா, 23 வயது தைரியசாலிப் பெண்!

கையில் ஏந்தும்  நிழல் உலகம்! - கேமரா பெண் சௌம்யா

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

``பிறந்ததும் வளர்ந்ததும் சென்னைதான். எம்.ஓ.பி வைஷ்ணவ் காலேஜ்ல விஸ்காம் படிச்சேன். விளம்பரத்துறையில் பயிற்சி எடுத்தேன். பிறகு, `புதுயுகம்'  தொலைக்காட்சி யில் நிகழ்ச்சித் தயாரிப்பில் உதவிப் பொறுப் பாளராகவும், நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் செயல்பட்டேன்’’ என்று அறிமுகம் சொல்கிற சௌம்யா, தனது கேமரா தருணங்களையும் விவரிக்கிறார்.

கையில் ஏந்தும்  நிழல் உலகம்! - கேமரா பெண் சௌம்யா

‘`அப்பா தேர்ந்த புகைப்படக் கலைஞர். அம்மா மேக்கப் ஆர்ட்டிஸ்ட். அப்பாவின் மாடல்களுக்கு அம்மாதான் மேக்கப் போட்டுவிடுவாங்க. அப்பா வோட 35 ஆண்டுகால அனுபவப் பயணம் எனக்குப் பேருதவியா அமைந் தது. அவரது `நிழல் ஸ்டூடியோ’வில்  நானும் இணைந்தேன். இப்போ தொழில் ரீதியாக நாடு கடந்தும் பயணிக்கிறேன்'' என்கிற சௌம்யா, `நேஷனல் ஜியோகிராஃபிக்’ சேனல் நடத்திய சிறந்த புகைப்படக் கலைஞர் களுக்கான போட்டியில் தேர்ந் தெடுக்கப்பட்ட 16 இந்திய புகைப்படக் கலைஞர்களில்  ஒருவர். அந்த அனுப வம் இவருக்கு நிறையவே கற்றுக் கொடுத்ததாம்!

கையில் ஏந்தும்  நிழல் உலகம்! - கேமரா பெண் சௌம்யா

``ஒருமுறை காசிக்குப் போயிருந்தேன். பெண் என்கிற காரணத்தால், பிணங்கள் எரிக்கப்படுவதை புகைப்படம் எடுக்க என்னை அனுமதிக்கவில்லை. பெரிய போராட்டத்துக் குப் பிறகுதான் படம் எடுக்க முடிஞ்சது. பிணம் எரியும்போது, திடீரென பிணத்தோட கால், மேலே தூக்கிக்கொள்ளும். அதைப் பார்த்து நான் பயந்துடு வேன்னு எல்லாரும் நினைச்சாங்க. என்னைப் பொறுத்தவரைக்கும் இதுல பயப்பட எதுவும் இல்ல. கேமரா கண்ணோடு பார்த்தோம்னா பிணம்கூட அழகுதான்'' - வித்தியாச அனுபவம் தெரிகிறது சௌம்யாவின் பேச்சில்!

கையில் ஏந்தும்  நிழல் உலகம்! - கேமரா பெண் சௌம்யா

‘`புகைப்படக்கலையில் காத்திருப்பும் தைரியமும் மிக முக்கி யம். கல்யாணத்துக்கு போட்டோ எடுக்கப் போனா, எல்லாரும் பிஸியாவே இருப்பாங்க. `கொஞ்சம் தள்ளுங்க'ன்னு சொல்லிட்டு, க்ளிக் பண்ண முடியாது. பெரும்பாலும், திருமணங்களில் எடுக்கப்படுகிற கேண்டிட் புகைப்படங்கள்தான் யதார்த்தமாக அமையும். அதற்காக மெனக்கிடுவதும் ஒரு சுகம்தான்.

ட்ராவல் போட்டோகிராஃபியிலும் புதுப்புதுப் பிரச்னை களைச் சந்திக்க வேண்டியிருக்கும். இப்படி, சவால்களைச் சந்தித்து, ஜெயிப்பது என்பது ஸ்வெட்டர் இல்லாமல் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்குச் சமம்! ஆனால், படத்தைப் பார்க்கும்போகும் கிடைக்கும் மகிழ்ச்சி அலாதி.’’

- கண்கள் மிளிர உதாரணம் சொல்கிறார், கேமரா கலைஞர்  சௌம்யா!