Published:Updated:

அனுஷா... ஆதிரா... இனியா! - யாரு அந்த சொப்பன சுந்தரி?!

அனுஷா... ஆதிரா... இனியா! -  யாரு அந்த சொப்பன சுந்தரி?!
News
அனுஷா... ஆதிரா... இனியா! - யாரு அந்த சொப்பன சுந்தரி?!

டிஜிட்டல் கச்சேரி

``யார் என்ன சொன்னா எனக்கென்ன? இந்த உலகத்துலயே நான் மட்டும்தான் இருக்கறதா நினைச்சுப்பேன்... ஹேஹூ!’'

அனுஷா... ஆதிரா... இனியா! -  யாரு அந்த சொப்பன சுந்தரி?!

``அனு இங்க பாரேன்... இனியா கண்ணாடியைப் பாத்து தனியா பேசிட்டு இருக்கா!’'

‘`அவ உலகம் கண்ணாடிக்குள்ள போயிடுச்சோ என்னவோ?!''

``ரெண்டுபேரும் என்னைக் கலாய்க் கறீங்கன்னு தெரியுது. ஆனா, நீங்க நினைக்கற அளவுக்கு எல்லாம் ஒண்ணும் ஆகிடலை. `இட் அது பட் ஆனால்’னு ஒரு ஷார்ட் ஃபிலிம் பாத்தேன். செம இன்ட்ரஸ்டிங். ரெண்டு பெண்களுக்குள்ளான நட்பு, காதல், கொண்டாட்டம், குழப்பம், கனவுன்னு எல்லாத்தையும் ரொம்ப அழகா காட்டி இருப்பாங்க. அதுல ஒரு கண்ணாடி சீன் வரும். அதுலதான் ரெண்டு கேர்ள்ஸும் இப்படி பேசிட்டு இருப்பாங்க. நீங்களும் பாருங்க கேர்ள்ஸ். அவ்ளோ எனர்ஜி கிடைக்கும்!''

`‘நீ இவ்ளோ குஷியாகிப் பேசுறப்ப பாக்க மாட்டோமா என்ன? பாக்குறோம் கேர்ள்ஸ்!’'

``வாராவாரம் ஷாப்பிங் போகாட்டி, மண்டைல மசாலா அரைக்கற மாதிரி, ஒரு சத்தம் வரணுமே... என்ன ஆச்சு இனியா, இன்னிக்கு அவுட்டிங் போகலையா?’'

``அதாகப்பட்டது என்னன்னா... இன்னிக்கு ஷாப்பிங் போறது கன்ஃபார்ம்தான். ஆனா, மூணு பேருமே தனித்தனியாத்தான் போகப் போறோம்.!''

`‘ஏன்... எதுக்கு?’

‘மூணு பேரும்  ஒண்ணா ஷாப்பிங் போகும்போது, இஷ்டத்துக்கு வாங்கிக் குவிக்கிறோம். நிறைய செலவு பண்றோம். அதனால இந்த முறை தனித்தனியா போனா எவ்ளோ பணத்தை மிச்சம் பண்ண முடியும்னு செக் பண்ணலாமே!''

``ஐடியா ஓகே-தான். ஆனா, இது உன் சொந்த ஐடியா மாதிரி தெரியலையே!''

`‘சரி... சரி... ஐடியா கொடுத்த அந்த ஆர்ட்டிக்கிளை ஷேர் பண்றதைத் தவிர வேற வழி தெரியல!’'

`‘நீ ரொம்ப புத்திசாலியா இனியா?’'

‘`ஏய்... ஏய்... அந்தக் கேள்வியை ஏன் என்னைப் பாத்துக் கேக்குற?''

``இல்ல... குரூப் எக்ஸாமுக்கு விழுந்து விழுந்து படிக்கிறியே... நான் கேட்குற கேள்விக்குப் பதில் சொல்லு பாப்போம்!'’

‘`கேளுங்க மேடம்!’'

`‘மிஸ் வேர்ல்டு போட்டியில பட்டம் வென்ற முதல் இந்தியப் பெண் யாருன்னு சொல்லு?''

``ஹாஹா... வெரி சிம்பிள். நம்ம ஐஸ் அக்காதான்!'’

``யாரு ஐஸ்வர்யா ராயா?’'

`‘ஆமாம்பா... ஆமாம்!’'

`‘தப்புடா செல்லம்! 1994-ம் வருஷம்தான் ஐஸ்வர்யா ராய் மிஸ் வேர்ல்டு பட்டம் வாங்கினாங்க. அதுக்கும் முன்னாடியே 1966-ம் வருஷத்துலயே கோவாவைச் சேர்ந்த ரீத்தா ஃபரியா பாவல், அந்தப் பட்டத்தை வாங்கிட்டாங்க!''
 
`‘சரி, ஏதோ ஒண்ணு மிஸ் ஆகிடுச்சு... அதுக்காக கலாய்க்கக் கூடாது!’'

`‘இந்தியாவின் சாதனைப் பெண்களைப் பற்றி ஒரு இன்ட்ராக்டிவ் க்விஸ் கொடுத்திருக்காங்க. நீ அதுல கலந்துக்கிட்டு பாஸ் மார்க் வாங்கிக் காட்டு பார்ப்போம்!'’

`‘இன்னிக்கு ஏன் ரெண்டும் பேரும் சேர்ந்து அப்பாவி இனியாவையே குறிவெச்சு தாக்குறீங்க? மீ பாவம் ப்ளீஸ்!’'

`‘அப்போ வா... சொப்பன சுந்தரி கூட சேர்ந்து நாமளும் பொங்கி எழுவோம்.’'

`‘யாரு அந்த சொப்பன சுந்தரி?’'

``சொப்பன சுந்தரி, மீனாகுமாரி, புஷ்பா... இப்படி இன்னும் சில பெயர்கள் சினிமா படைப்பாளிகளால தொடர்ந்து வம்புக்கு இழுக்கப்பட்டு வருவதை கவனிச்சிருக்கியா இனியா?’'

`‘ஆமாம்... அந்தப் பேருள்ள பொண்ணுங்க எல்லாம் எவ்ளோ வலிகளைத் தாங்கறாங்கன்னு கொஞ்சம்கூட உணராம இருக்கறதும்  மறைமுகமா பெண்கள் மேல நடத்தப்படுற வன்கொடுமைதான்...'’

`‘அதுசரி இப்ப ஏன் திடீர்னு இந்த டாபிக்?’'

`‘யூடியூப் வீடியோவுல பார்த்தேன். மனசைப் புரட்டிட்டே இருந்துச்சு. அதான் சொல்லிட்டேன்...'’

``ஓ... சூப்பரு! குரல் கொடுப்போம் ஃப்ரெண்ட்ஸ்!’'

- கச்சேரி களைகட்டும்...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
அனுஷா... ஆதிரா... இனியா! -  யாரு அந்த சொப்பன சுந்தரி?!

அசத்தலான செய்திகளையும் வீடியோக்களையும் படித்துப் பார்த்து மகிழ www.vikatan.com என்னும் விகடன் இணையதள முகவரியைத் தொடருங்கள். அல்லது இந்த க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்யுங்கள்.

அனுஷா... ஆதிரா... இனியா! -  யாரு அந்த சொப்பன சுந்தரி?!

இட் அது பட் ஆனால்... குறும்படம் பாக்கலாமா?!

அனுஷா... ஆதிரா... இனியா! -  யாரு அந்த சொப்பன சுந்தரி?!

இந்தியாவின் சாதனைப் பெண்களை பற்றி உங்களுக்கு எந்த அளவுக்குத் தெரியும்?

அனுஷா... ஆதிரா... இனியா! -  யாரு அந்த சொப்பன சுந்தரி?!

ஷாப்பிங்கில் மனசைக் கட்டுப்படுத்துங்கள்... பணத்தைப் பத்திரப்படுத்துங்கள்!

அனுஷா... ஆதிரா... இனியா! -  யாரு அந்த சொப்பன சுந்தரி?!

சொப்பன சுந்தரியாகிய நான்!