Published:Updated:

ஒரு தாயின் குரல் - “உலகமே என் வீடு!”

ஒரு தாயின் குரல் -  “உலகமே என் வீடு!”
பிரீமியம் ஸ்டோரி
News
ஒரு தாயின் குரல் - “உலகமே என் வீடு!”

எம்.ஆர்.ஷோபனா - படம்: அ.சரண் குமார்

ஹைதராபாத் பல்கலைக்கழக ஆய்வு மாணவராக  இருந்த ரோஹித் வெமுலா, சாதியப் பிரச்னைகளின் அழுத்தம் காரணமாக, ஓராண்டுக்கு முன் தற்கொலை செய்துகொண்டார். இந்த மரணம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ரோஹித் மரணத்துக்கான நீதி வேண்டிப் போராடிய இயக்கங்களோடு தன்னையும் இணைத்துக்கொண்டிருக்கிறார் ரோஹித்தின் தாய் ராதிகா வெமுலா. ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னை வந்திருந்த அவரைப் பெரியார் திடலில் சந்தித்தோம்.

ஒரு தாயின் குரல் -  “உலகமே என் வீடு!”

“நான் வளர்ப்புத் தாயிடம் வளர்ந்தவள். அவர்கள் வீட்டில் பெண்குழந்தைகள் இல்லையென்பதால் என்னைத் தத்தெடுத்தார்கள். உண்மையில், வீட்டுவேலை செய்வதற்காகத்தான் என்னைத் தத்தெடுத்திருந்தார்கள். அதனால், வீட்டிலே அடிமைத்தனத்தை அனுபவித்திருக்கிறேன். ஆனால், அதற்குப்பின் சாதி இருக்கிறது என்பதெல்லாம் எனக்கு அப்போது தெரியாது. நான் மாலா எனும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவள். அவர்களோ பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள்!'' என்கிற ராதிகாவுக்குத் திருமணமானபோது 15 வயது!

``தினமும் அதீதமாகக் குடித்துவிட்டு வந்து, சண்டை   வளர்த்து, என்னை அடிப்பதும் உதைப்பதும் என் கணவருக்கு வாடிக்கை. கணவரைப்போலவே என் பிள்ளைகள் வளர்ந்துவிடக் கூடாது என்கிற ஒரே காரணத்துக்காக, மீண்டும் (வளர்ப்புத்) தாய் வீட்டுக்கே வந்துவிட்டேன். எட்டு ஆண்டுகளுக்குப் பிறகுதான், குழந்தைகளுடன் தனியாக வாழத் தொடங்கினேன். அன்று முதல், என் உலகத்தில் குழந்தைகள் மட்டுமே இருந்தனர். அவர்களை நல்லபடியாக வளர்க்க வேண்டும்... அதற்காக உழைக்க வேண்டும் என்பது மட்டுமே என் சிந்தனையாக இருந்தது. டி.வி பார்ப்பதோ, பத்திரிகை படிப்பதோகூட  கிடையாது. ஆனால், ரோஹித்தின் மரணம் உலகத்தையே என் வீடாக மாற்றிவிட்டது. இப்போது நான் சந்திக்கும் மக்கள், செல்லும் இடங்கள், பங்கேற்கும் நிகழ்ச்சிகள்... இவை அனைத்தும் எனக்குப் புதியவை. ஆனால், இதன்மூலம்தான் சமத்துவம் உருவாகும் என உணர்ந்துகொண்டேன்” என்கிறார், இழப்பின் துயரத்தைத் தாண்டி சமூகப்பணியில் தன்னை ஈடுபடுத்தி வரும் ராதிகா வெமுலா!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz