Published:Updated:

ரிங்கா...ரிங்கா...ரிங்கா...ஜமாய்க்கணும் கேங்கா !

மோ.கிஷோர்குமார், சீ.சுசித்ரா படங்கள்: ச.லெட்சுமிகாந்த்

ரிங்கா...ரிங்கா...ரிங்கா...ஜமாய்க்கணும் கேங்கா !

மோ.கிஷோர்குமார், சீ.சுசித்ரா படங்கள்: ச.லெட்சுமிகாந்த்

Published:Updated:

போதி தர்மனின் டி.என்.ஏ-வை சூர்யாவின் டி.என்.ஏ-வில் ஸ்ருதிஹாசன் தூண்டிவிட்டு, சீன வில்லன் டோங் லீயை வாங்கு வாங்குனு வாங்கின '7ஆம் அறிவு’, இப்போதைய ஹிட்!

நமக்கும் ஒரு அநியாய அறிவியல் கற்பனை. 'நீங்க விரும்பும் ஹிஸ்டாரிக் பெர்சனாலிட்டியோட டி.என்.ஏ-வை உங்கள் ஜீன்ல ஏத்திக்கலாம்னா, யாரோட டி.என்.ஏ-வை டிக் செய்வீங்க?’னு கோவில்பட்டி, கே.ஆர். காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் பெண்கள்கிட்ட கேட்டோம். மூளையைக் குடைஞ்சு, எட்டாம் அறிவு வரை யோசிச்சு பதில் சொன்னாங்க பொண்ணுங்க.

ரிங்கா...ரிங்கா...ரிங்கா...ஜமாய்க்கணும் கேங்கா !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##

''இந்திரா காந்தியோட டி.என்.ஏ-வை புகுத்திக்கிட்டு, நானும் இரும்பு மனுஷி ஆகணும்!''னு அதிரடியா ஆரம்பிச்சாங்க கேங் லீடர் கவிதா.

''காங்கிரஸுக்கு ஒரு யங் லீடரா..?''னு ஆர்வமானா,''ச்சே... இன்னிக்கு இருக்குற பாலிடிக்ஸ் இந்திரா காந்திக்கே பிடிக்காது. நோ அரசியல். கல்வித்துறையில நான் ஒரு மெகா திட்டம் வெச்சுருக்கேன். அதாவது, மாணவர்களோட அரியர்ஸ்-ஐ எல்லாம் உடனே கேன்சல் பண்ணி, இனி எல்லாரையும் ஆல் பாஸாக்கணும். இந்தியா வல்லரசு ஆகணும்னு போராடிட்டு இருக்கற காலத்துல மாணவர்கள் அரியர்ஸ் வெச்சிருந்தா எப்படி?''னு திடுக் திட்டம் சொன்னதோட,

''இதை, தோழி அனுஷியாவில் இருந்து ஆரம்பிப்பேன்!''னு சொல்லி அவரைப் பார்க்க,

''அடிப்பாவி, அரியர் விஷயத்தை மைக் இல்லாமலே முழங்கிட்டியே!''னு கடுப்பானாங்க அனுஷியா!

''என் சாய்ஸ்... விஞ்ஞானி ஐன்ஸ்டீன்!''னு அமைதியா சொன்ன பானுப்ரியா... ரொம்ப நேரம் யோசிச்சு, ''வீட்ல பாக்கெட் மணி கேட்டா காது ஜவ்வு கிழியத் திட்டுறாங்க. டாப்-அப் பண்ணுறதுக்கும், பெட்ரோல் போடுறதுக்கும் எத்தனை நாளைக்குதான் பூஜையறை உண்டியல்லயே கை வெக்கறது? நம் கையே நமக்கு உதவி''னு அவங்க நீட்டி முழக்கிப் பேச, பொண்ணோட பிளான் புடிபடல நமக்கு.

''பெருசா ஒண்ணும் இல்லை. ஐன்ஸ்டீனோட மூளையை வெச்சுக்கிட்டு, எங்க மொட்டை மாடியில சயின்ஸ் டியூஷன் எடுப்பேன். வீட்டு வாசல்ல 'ஐன்ஸ்டீன் மூளையில் டியூஷன்!’னு விளம்பர போர்டு வெச்சா, கலெக்ஷன் அள்ளிடலாம்ல..?!''னு கலங்கடிச்சாங்க பானுப்ரியா!

ரிங்கா...ரிங்கா...ரிங்கா...ஜமாய்க்கணும் கேங்கா !

''கண்ணகி..!''னு மிர்ச்சி மிளகாயா கண்கள் சிவந்திருந்தாங்க, அனுப்ரியா. நாம கொஞ்சம் எட்டி நின்னே கவனிக்க, ''நவீன கண்ணகியா, மனைவிக்குத் துரோகம் செய்ற கோவலன்களை எல்லாம் ஒரு பார்வைலயே எரிப்பேன். வீட்டுலயே ஒரு கம்ப்ளெயின்ட் லெட்டர் பாக்ஸ் வெச்சு, தாய்க்குலங்கள்கிட்ட புகார் வாங்கி, ஆக்ஷன் செல்தான்''னு அளந்துவிட்ட அனுப்ரியாவை,

''அதுக்கு லெட்டர் பாக்ஸ் எல்லாம் கட்டாது, கம்ப்ளெயின்ட் லெட்டர் கேணிதான் வெட்டணும். அந்தளவுக்குப் புகார்கள் குவியும்!''னு பஞ்ச் வெச்சாங்க வைஷ்ணவி!

''அனுசியாவுக்கு ஹிட்லர் டி.என்.ஏ!''னு அவர் சார்பா கவிதா முன்மொழிய, ''ஏன் இந்தக் கொலை வெறி..? சதாம் ஹுசேன், கடாபினு எல்லாரையும் எமலோகத்துக்கு அனுப்பிட்டு இருக்கற நேரத்துல, எனக்கு ஹிட்லரோட டி.என்.ஏ-வை செலக்ட் செஞ்ச உன்னோட நல்ல மனசு எனக்குப் புரியுது ஆத்தா. நோ தேங்க்ஸ்!''னு கவிதா ரிப்பீட் அடிக்க, ஒரு மணி நேரமா உலகப் பிரபலங்களையே புரட்டி எடுத்த அந்த அபாய கேங், பெல் அடிச்சதும் கிளாஸை நோக்கி ஓடினாங்க!

அரசியல் பிடிக்காத இந்திரா காந்தி, மொட்டைமாடி டியூஷன் எடுக்குற ஐன்ஸ்டீன்னு... கேட்ட நம்ம ஏழாம் அறிவுதான் கிர்ர்ர்ர்ர்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism