Published:Updated:

பார்பி பச்சைக்கிளி !

கே.ராஜாதிருவேங்கடம், கே.ஏ.சசிகுமார்படங்கள்: க.தனசேகரன், ச.வெங்கடேசன்

பார்பி பச்சைக்கிளி !

கே.ராஜாதிருவேங்கடம், கே.ஏ.சசிகுமார்படங்கள்: க.தனசேகரன், ச.வெங்கடேசன்

Published:Updated:

சேலம், திண்டுக்கல், நாமக்கல் என களைகட்டிய 'டீன் ஃபேஷன் ஷோ’, இம்முறை வேலூர், வி.ஐ.டி. யுனிவர்சிட்டியில்!

கல்லூரி வளாகத்திலிருந்த அண்ணா கலையரங்கம், அழகு மாணவிகளால் நிரம்பியிருந்தது. பல்கலைக்கழகத்தின் வைஸ் சேர்மன் சம்பத், ''இங்கே வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டு மாணவிகளும் இருப்பதால்... 'அவள் விகடன்’ பற்றி சின்ன விளக்கம் கொடுக்கிறேன். தமிழ்நாட்டுப் பெண்களோடு கலந்த உறவு, 'அவள்’. அதனால்தான்... தேர்வு நேரத்திலும்கூட அவர்களுடைய நிகழ்ச்சிக்காக இந்த மேடையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறோம். வி.ஐ.டி ஸ்டூடன்ட்ஸ் எதிலும் கலக்குவார்கள் என்பதை... 'அவள் விகட’னுக்கு காட்ட வேண்டும்... ஸ்டார்ட்!'' என்று சியர் அப் செய்தார்.

ஃபேஷன் துறையிலிருக்கும் வேலூர் சுபாஷினி, சாக்ஷி டிக் இருவரும் நடுவர்களாக வந்தமர, அரங்கம் மாணவிகள் வசமானது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பார்பி பச்சைக்கிளி !

பிளாக் ஜீன்ஸ் - வொயிட் டாப்ஸ் சகிதமாக ஃபர்ஸ்ட் என்ட்ரி கொடுத்தார் வர்ஷா. 'ஒன்ன வெள்ளாவி வச்சித்தான் வெளுத்தாய்ங்களா...’ என்று மாணவிகள் கோரஸாகப் பாட, வெட்கத்தில் சிவந்து போனார். ஆப்பிரிக்க மாணவிகளான நியருன்சுதி எலிசெபெத், நினா, ஹுட்டீ ஆகியோர்... அவர்கள் நாட்டு உடையில் கேட் வாக்க... ஏக அப்ளாஸ்!

ஃபிராக்கில் வந்த மிருணாளினி ஸ்டைலாக நடைபோட்டு கேர்ள்ஸைப் பார்த்து ஒரு ஃப்ளையிங் கிஸ் கொடுக்க, விசிலுடன் ரிப்ளை கிஸ் பறந்தது.

பார்பி பச்சைக்கிளி !

''அடுத்து வருபவர்... அனுஷா பட்...'' என்று அறிவிப்பாளர் அறிவித்ததுமே, ''அனுஷா... அனுஷா...'' எனக் கூட்டம் குஷியானது. பச்சைக்கிளிபோல பார்பி டிரெஸ்ஸில், நடையில் நளினம் காட்டி, கண்களால் ரகசியம் பேசிப்போனார் அனுஷா.

'வாக்’குகள் முடிய, நடுவர்கள் மேடை ஏறினார்கள். ''யப்ப்ப்பா... நாங்க மிரண்டு போயிட்டோம். புரொஃபஷனல் ஃபேஷன் ஷோக்களே தோத்துப் போயிடும்போல'' என்று பாராட்டி, மூவர் தவிர மற்ற அனைத்துப் போட்டியாளர்களையும் அழைத்து... ஆறுதல் பரிசாக 'நெயில் கேர் கிட்’ வழங்கினார்கள்.

பார்பி பச்சைக்கிளி !

''மூன்றாவது பரிசு... வர்ஷா சிங்'’ என அழைக்கப்பட, கண்கள் விரிய சந்தோஷத்தோடு 'ஐ ஷேட் கிட்’ பெற்றுக்கொண்டார். ''இரண்டாவது பரிசு... ஷீனா சர்மாவுக்கு!'' என்று அடுத்த அறிவிப்பு வர... நடையும் துள்ளலுமாக 'ஹேர் டிரையர்’ பரிசை பெற்றுக் கொண்டார்.

''இந்த ஃபேஷன் ஷோவின் குயின், அனுஷா பட்!'' என அறிவிக்கப்பட, ஆரவாரங்களுக்கு இடையே மேடை ஏறி, முதல் பரிசாக மெகா 'மேக் அப் கிட்’ பெற்றுக் கொண்டார் அனுஷா. மேடைக்கே ஓடி வந்து முத்த மழை பொழிந்தார்கள் தோழிகள். பரிசு வென்றவர்கள் மேடையில் ஒரு பாப் பாடலுக்கு போட்ட ஆட்டம், நிகழ்ச்சியின் கடைசி சிக்ஸர்.

பார்பி பச்சைக்கிளி !

நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்துக் கொடுத்த பேராசிரியர் கோகுல்குமார், ''வெளிமாநில, வெளிநாட்டு மாணவிகள் எல்லாரும் இன்னிக்கு 'அவள் விகடன்... அவள் விகடன்...’னு தமிழ் பேசுறதே புது அனுபவமா இருக்கு. எங்க கேர்ள்ஸுக்கு ஒரு உற்சாகமான மேடை தந்த 'அவள் விகட’னுக்கு நன்றி!'' என்று நவில... இனிதே நிறைந்தது நிகழ்ச்சி.

அடுத்து..? வருவோம்ல..!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism