Published:Updated:

"சமந்தாவே தென்னிந்தியாவின் தீபிகா படுகோன்!"

"சமந்தாவே தென்னிந்தியாவின் தீபிகா படுகோன்!"
பிரீமியம் ஸ்டோரி
"சமந்தாவே தென்னிந்தியாவின் தீபிகா படுகோன்!"

ஸ்டார் ஃபேஷன்ஆர்.வைதேகி

"சமந்தாவே தென்னிந்தியாவின் தீபிகா படுகோன்!"

ஸ்டார் ஃபேஷன்ஆர்.வைதேகி

Published:Updated:
"சமந்தாவே தென்னிந்தியாவின் தீபிகா படுகோன்!"
பிரீமியம் ஸ்டோரி
"சமந்தாவே தென்னிந்தியாவின் தீபிகா படுகோன்!"

``விஜய்னா ஸ்டைல்...  ஸ்டைல்னா விஜய்.... இதுவரைக்கும் விஜய்யை விதம் விதமான ஸ்டைல்ல பார்த்திருப்பீங்க. ஆனா, அட்லி டைரக்   ஷன்ல விஜய் நடிக்கிற அடுத்த படத்துல `தளபதி'யை இதுவரைக்கும் நீங்க பார்த்திருக்காத அளவுக்கு செம ஸ்டைலா, கெத்தா எதிர்பார்க்கலாம். அதுக்கு நான் கியாரன்டி...’' - அதிரடி யாக அறிவிக்கிறார் நீரஜா கோனா. தமிழ் சினிமாவின் புது காஸ்ட்யூம் டிசைனர்!

"சமந்தாவே தென்னிந்தியாவின் தீபிகா படுகோன்!"

விஜய் மட்டுமா...  நயன்தாரா, சமந்தா, நித்யா மேனன், சிவகார்த்திகேயன், கார்த்தி, விஷால் என டாப் ஸ்டார்ஸ் பலருக்கும் நீரஜாதான் லேட்டஸ்ட் டிசைனர்.

`விஜய் வியப்பு' இன்னும் விலக வில்லை நீரஜாவுக்கு. அவரது ஒவ் வொரு வார்த்தையிலும் அது பிரதி பலிக்கிறது.

‘`கனவா, நனவானு இன்னும்கூட புரியலை. அந்தச் சிலிர்ப்பும் பிரமிப்பும் இன்னும் குறையலை. விஜய் ரொம்ப தன்னடக்கம் உள்ளவர்னு கேள்விப் பட்டிருக்கேன். ஆனா, அது அநியாயத் தன்னடக்கம்னு அவர்கூட வொர்க் பண்ணினபோது பார்த்து அசந்துட்டேன். அவ்வளவு பெரிய மாஸ் ஹீரோவால இப்படிக்கூட அடக்கமா இருக்க முடியுமா?!’’ என்கிறவர், `விஜய் 61' படத்தில் சமந்தா, நித்யா மேனன், ‘இரும்புத்திரை’ படத்தில் விஷால், சமந்தா, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங், ‘வேலைக் காரன்’ படத்தில் நயன்தாரா என அநியாயத்துக்கு பிஸி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

"சமந்தாவே தென்னிந்தியாவின் தீபிகா படுகோன்!"

‘`ஹைதராபாத்ல பிறந்து, அமெரிக்காவுல மெர்க்கன்டைஸிங் அண்ட் பிராண்டிங் படிச்சேன். இன்டர்நேஷனல் பிராண்ட்ஸ்ல வேலை பார்த்த அனுபவத்தோட 2012-ல இந்தியா வந்தேன். என்னோட அண்ணா கோனா வெங்கட், தெலுங்குப்பட இண்டஸ்ட்ரியில பிரபலமான கதாசிரியர். ஃபேஷன்ல எனக்கு இருந்த அடிப்படை ஆர்வமும், அண்ணாவோட என்கரேஜ்மென்ட்டும் சேர்ந்து தான் என்னை சினிமாவுக்குள்ள வரவெச்சது. என் அண்ணன் அப்போ ‘பாட்ஷா’னு ஒரு தெலுங்குப் படத்துல வொர்க் பண்ணிட்டிருந்தார். அதுல ஜூனியர் என்.டி.ஆருக்கும், காஜல் அகர்வாலுக்கும் டிசைன் பண்ணினேன். அந்தப் படத்துக்கு வொர்க் பண்ணிட்டிருந்தபோதே ‘குண்டே ஜாரி கல்லன்தாயின்டே’னு இன்னொரு படத்துலயும் ஹீரோ நிதினுக்கு டிசைன் பண்ணினேன். அந்தப் படம் எனக்கு மிகப் பெரிய பிரேக்.

‘அட்டாரினிட்டிக்கி தாரேடி’னு ஒரு தெலுங்குப் படத்துல சமந்தாகூட முதன்முதல்ல வொர்க் பண்ணினேன். என் வேலை பிடிச்சு நிதினும், சமந்தாவும் என்னைப் பத்தி எல்லார்கிட்டயும் சொல்ல ஆரம்பிச்சாங்க. என்னோட  வளர்ச்சியில முக்கியப் பங்கு அவங்க ரெண்டு பேருக்கும்தான்...’’ - நன்றி நவில்பவர், இன்று சமந்தாவின் நெருங்கிய தோழி!

"சமந்தாவே தென்னிந்தியாவின் தீபிகா படுகோன்!"

‘`சமந்தாவும் நானும் கடந்த நாலு வருஷங்களா க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ். அவங்களை தென்னிந்தியாவோட தீபிகா படுகோன்னு சொல்லலாம். ஃபேஷன்ல அநியாயத்துக்கு அப்டேட்டடா இருப்பாங்க.

பெரும்பாலான விஷயங்கள்ல நாங்க ரெண்டு பேரும் ஒண்ணாவே இருப்போம். அவங்களோட நிச்சயதார்த்தத்துக்கு அவங்ககூட சேர்ந்து அவங்களோட டிரெஸ்ஸை பிளான் பண்ணினது நான்தான். என் கல்யாணத்தப்போ சமந்தா என்கூடவே இருந்தாங்க. இப்போ சமந்தாவோட கல்யாணத்துக்கான எல்லா விஷயங்களையும் ஸ்டைலிங் பண்ணிட்டிருக்கேன்.  எங்க ரெண்டு பேருக்குமான அந்த பந்தம் ரொம்பவே ஸ்பெஷலானது.

"சமந்தாவே தென்னிந்தியாவின் தீபிகா படுகோன்!"

என்னை பிரமிக்க வெச்ச இன்னொரு ஹீரோயின் நயன்தாரா. ‘பாகு பங்காரம்’னு ஒரு படத்துக்காக நயன்தாராவுக்கு டிசைன் பண்ணினேன். அவங்க அவ்ளோ அழகு. எந்த ஸ்டைலிஸ்ட்டுக்கும் நயன்தாராகூட வொர்க் பண்றது நிச்சயம் ஒரு கனவா இருக்கும். ‘வேலைக்காரன்’ படம் மூலமா எனக்கு அந்தக் கனவு நனவாகியிருக்கு...’’ - சிலிர்ப்பவர், `ஹீரோக்களுக்கு டிசைன் செய்வதன் மூலம் கிடைக்கிற பெயரும் புகழும் பெரியது' என்கிறார். நாகசைதன்யா, பவன் கல்யாண், அல்லு அர்ஜுன் ஆகியோருக்குத் தன்னுடைய வித்தியாசமான ஸ்டைலில் டிசைன் செய்ததன் மூலம் தெலுங்குப் படங்களின் மீதான கலர்ஃபுல் காஸ்ட்யூம் இமேஜை மாற்றியதாகவும் சொல்கிறார். அதே கலர் கலர் உடைகளைத் தமிழ் சினிமாவில் ட்ரெண்டாக்கிய சிவகார்த்திகேயனுக்கு டிசைன் செய்த அனுபவமும் இருக்கிறது நீரஜாவுக்கு.

`` `ரெமோ’ படத்தோட புரமோஷனுக்கும், ஆடியோ லான்ச்சுக்கும் சிவகார்த்திகேயனுக்கு டிரெஸ் டிசைன் பண்ணியிருந்தேன். ரொம்ப ஸ்டைலிஷ்ஷா இருந்தார். சோஷியல் நெட்வொர்க்ல அவரோட அந்தப் படங்களைப் பார்த்துட்டு ரசிகர்கள் பாராட்டியிருந்தாங்க. ஆனா, சிவகார்த்திகேயனோட கலர்ஃபுல் காஸ்ட்யூம்ஸுக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை...’’ - சிரிக்கிற ஸ்டைலிஸ்ட், மீண்டும் விஜய் விஷயத்துக்கு வருகிறார்.

"சமந்தாவே தென்னிந்தியாவின் தீபிகா படுகோன்!"

``விஜய் அதிகம் பேசமாட்டார்னு கேள்விப்பட்டிருக்கேன். அதனால நான் டிசைன் பண்ணின காஸ்ட்யூம்ஸுக்கு அவர் கிட்டருந்து என்னமாதிரியான கமென்ட்ஸ் வரப்போகுதோங்கிற பயத்தோடவே வெயிட் பண்ணிட்டிருந்தேன். ஒவ்வொரு காஸ்ட்யூமைக் காட்டும்போதும் அதே மென்சிரிப்போட `ஓகே' சொன்னார். ஆனா, அவர் முதல் நாள் ஷாட்டுக்குத் தயாராகி கேமரா முன்னாடி வந்து நின்னபோது, டைரக்டர், கேமராமேன் உள்பட மொத்த யூனிட் முகத்துலயும் அவ்வளவு சந்தோஷம். ‘நீரஜா நீ சரியான ரூட்டுலதான் போயிட்டிருக்கே...’ன்னு எனக்கு நானே தட்டிக் கொடுத்துக்கிட்டேன்.

தமிழ் சினிமாவுல விஜய், ஸ்டைல் ஐகானா அறியப்பட்டவர். என்னை மாதிரி முதல் முறை அவருக்கு டிசைன் பண்றவங்களுக்கு அதுதான் பெரிய சவாலும்கூட! எதிர்பார்ப்பு எக்கச்சக்கமா இருக்கும். அதே நேரம் விஜய் மாதிரி கேரக்டராகவே ஒன்றிப்போகிற ஒரு ஹீரோவுக்கு வொர்க் பண்ணும் போது ஒரு நல்ல விஷயமும் இருக்கு. சாதாரண வேஷ்டி, சட்டையில வந்தாலும் சரி, எக்ஸிக்யூட்டிவ் லுக்குல வந்தாலும் சரி... செம மாஸா இருப்பார். `விஜய் 61' படத்துல வேற லெவல் விஜய்யை எதிர்பார்க்கலாம்...’’ - ஆர்வம் கூட்டுகிற நீரஜாவுக்கு ரெஸ்டாரன்ட் அதிபர் என்கிற இன்னொரு முகமும் இருக்கிறது.

"சமந்தாவே தென்னிந்தியாவின் தீபிகா படுகோன்!"

``நானும் ஹீரோ நித்தினும் சேர்ந்து ஹைதராபாத்ல ஒரு ரெஸ்டாரன்ட் நடத்தறோம். அங்கே தெலங்கானா சாப்பாடு ஸ்பெஷல். சாப்பாடும் சரி, காஸ்ட்யூமும் சரி... ரெண்டுமே எனக்குப் பெரிய ஃபேஷன். ஒண்ணு உங்க வயிற்றை நிறைக்கும். இன்னொண்ணு உங்க இதயத்தை நிறைக்கும். அடுத்து ‘கலுவா’னு என்னுடைய பிராண்டை லான்ச் பண்றேன். கலுவான்னா தாமரைனு அர்த்தம். நீரஜாங்கிற என் பேருக்கும் அதுதான் அர்த்தம். இப்போதைக்கு இத்தனை ரோல்களைச் சமாளிக்கிறதே பெரிய சவாலா இருக்கு.  கிடைக்கிற கொஞ்சூண்டு நேரம் முழுக்க முழுக்க  என் ஒரு வயசுக் குழந்தை அன்ஷுக்கும், காதல் கணவர் அஜய்க்கும் மட்டும்தான்....’’ - ஸ்ட்ரிக்ட்டாகச் சொல்கிறவரிடம் விஜய்யின் காஸ்ட்யூம் பற்றி எப்படிக் கேட்டாலும் பதில் இல்லை.

``ஃபர்ஸ்ட் லுக் ரிலீசாகிற வரைக்கும் அது சஸ்பென்ஸ். எனக்கு இது முதல் தமிழ்ப் படம்... பெரிய ஹீரோ... ரிசல்ட் எப்படி இருக்குமோங்கிற டென்ஷனோடவும் ஆர்வத்தோடவும் ஐயாம் வெயிட்டிங்...!''

- விஜய் ஸ்டைலிலேயே விடைகொடுக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism