பரபரப்பான பெங்களூரூ நகரத்தில் வசிக்கிறார் ராதிகா நாதன். ஆங்கிலத்தில் நாவல்கள் எழுதிக்கொண்டிருக்கும் தமிழ்ப் பெண். `The Mute Anklet' மற்றும் `Time to Burnish' ஆகிய இவரின் இரண்டு நாவல்களும் சிறப்பு. கதையில் வரும் உரையாடல்கள் போலவே ரசனையுடன் பேசுகிறார் ராதிகா.

‘`நான் மதுரைப் பெண். அம்மா அரசு ஊழியர், அப்பா வங்கிப் பணியாளர். எல்லா வார, மாத இதழ்கள், நாவல்களையும் அவர்கள் வாங்கிப் படிப்பார்கள். சிறுவயதில் சரித்திர நாவல்கள், சிறுகதைகள், தத்துவம், உளவியல் என வெவ்வேறு வகைப் புத்தகங்களை நான் விரும்பிப் படிக்க ஆரம்பித்தேன். சாண்டில்யன், சுஜாதா இருவரின் எழுத்துகளும் என்னை மிகவும் வசீகரித்தவை. சுஜாதாவின் நாவல்களை ஏதோ தேர்வுக்குத் தயார் செய்வதைப்போல மீண்டும் மீண்டும் படித்துக்கொண்டே இருப்பேன். எழுத்துக்கு மட்டுமல்ல, இந்த வாழ்வை அணுகும் விதத்துக்கும் என் ஹீரோ சுஜாதா சார்தான்!

கல்லூரித் தோழிகளில் ஒருத்தி முதல் பாதிக் கதையை எழுத, மற்றொரு தோழி மீதிக் கதையை எழுதி முடிக்க வேண்டும். எங்களுக்குள் இப்படி விளையாடிக்கொள்வோம். நான் தனிப்பட்ட முறையில் எழுதிய சிறுகதைகளை உறவினர் மற்றும் தோழிகளிடம் கொடுத்து படிக்கச் செய்து, கருத்துகளைக் கேட்டறிந்து, அதற்கேற்ப என் எழுத்தையும் எண்ணத்தையும் மேம்படுத்திக்கொண்டேன். அப்படி எழுதிய கதைகளில் ஒன்று ‘தென்றல்’ பத்திரிகையில் பிரசுரமானது. மற்றொரு கதை ‘கல்கி’ இதழில் வெளிவந்தது’’ என்கிற ராதிகா, ஆங்கில எழுத்தைக் கைக்கொண்டது அவர் பேராசிரியரின் வழிகாட்டுதலின்படி.

‘`கல்லூரியில் என் ஆங்கிலப் பேராசிரியர், ‘நீ இங்கிலீஷும் சூப்பரா எழுதுவதானே? அப்போ கற்பனை வளத்தை அந்த மொழியிலும் வெளிப்படுத்தலாமே?’ என்று கேட்டார். முதலில் கட்டுரைகள், சிறுகதைகள் என எழுத ஆரம்பித்தேன். 15 வருடங்களுக்கு முன் பிளாக் உருவாக்கி, என் எழுத்துகளை அதில் பதிவிட ஆரம்பித்தேன்.

திருமணம், குழந்தைகள் என்று வாழ்க்கை அடுத்தடுத்தக் கட்டங்களுக்கு நகர்ந்தபோதும், எழுத்தையும் விருப்பத்துடன் எடுத்து வந்தேன். பெற்றோரும் புகுந்த வீட்டினரும் தந்த ஊக்கத்தில் ஆங்கில நாவல் எழுத ஆரம்பித்தேன். ஒவ்வொரு சாப்டர் முடித்த பின்னும், என் இரு பெண்களிடமும் கொடுத்து அதைப் படிக்கக் கொடுப்பேன். அவர்கள் சொல்லும் கருத்துகளுக்கு ஏற்ப மாற்றங்கள் செய்வேன்’’ என்கிற ராதிகாவுக்கு, இப்போது வயது 43. ஐ.டி துறையில் பணிபுரிகிறார். இவர் கணவரும் ஐடி பணியாளரே. www.radhikanathan.com என்கிற தன் வலைதளத்தில் பல நிகழ்வுகள் குறித்து பகிர்ந்துவருகிறார்.

‘`என் நாவல்களில் வரும் பெண் கதாபாத்திரங்கள் மாற்றத்தை ஏற்படுத்தும் புதுமைப் பெண்களாகவே தங்களை நிலைநிறுத்திக்கொள்வார்கள். ஆங்கிலத்தில் எழுதினாலும், சென்னை, தஞ்சாவூர் இவற்றை மையப்படுத்தி நகரும் என் கதைக்களம் தமிழ் நாவல் படிப்பது போன்ற நெருக்கத்தைக் கொடுக்கும்.

முதல் நாவல் எழுதியபோது, ஹார்டு டிஸ்க்கில் சேமித்திருந்த டிராஃப்ட்டை ரிட்ரீவ் (retrieve) செய்ய முடியாமல் ஆரம்பத்தில் இருந்து மீண்டும் எழுதினேன். முதல் நாவலை எழுதி முடித்து பதிப்பாளருக்கு அனுப்பும் வரை நல்ல தலைப்பு கிடைக்காமல் தவித்துக்கொண்டிருந்தேன். சட்டென்று சிலப்பதிகாரத்தில் கண்ணகிக்கு கால் சிலம்பினால் நீதி கிடைத்தது நினைவுக்கு வர, `The Mute Anklet' என்று தலைப்பிட்டேன்’’ என்றவர்,

‘`என் அப்பா பத்திரிகையில் வந்த சிலை கடத்தல் குறித்த செய்தியை என் கவனத்துக்குக் கொண்டுவந்தார். அதுகுறித்து அறிந்துகொள்வதற்காக ஆராய்ச்சியில் இறங்கினேன். நாவல்களில் வரும் மயிர்க்கூச் செறியும் காட்சிகளை மிஞ்சும் வகையில் நிஜத்தில் நடப்பது புரிந்தது. பெங்களூரு கஸ்தூரிபாய் சாலை அருங் காட்சியகத்துக்குச் சென்று விவரங்கள் சேகரித்தேன். அதோடு, தில்லை நடராஜப் பெருமானின் தாண்டவம் பற்றிய தகவல்களை அறிந்தபோது நான் அடைந்த ஆனந்த அதிர்ச்சியை விவரிக்க வார்த்தைகள் இல்லை. இவற்றையெல்லாம் என் இரண்டாவது நாவலான `Time to Burnish'-ல் விளக்கியுள்ளேன்.

எப்போது, எங்கே, எப்படி முடிப்பது என்பதே நாவல் எழுதுவதில் உள்ள சிரமம். என்னைச் சுற்றி நடப்பதை கூர்ந்து கவனித்து எழுதுவதன் மூலம் உலகத்துடன் என்னை இணைத்துக்கொள்கிறேன்!'' என்கிறார்.

`இரண்டாம் உலகப் போரில் தமிழகத்தின் பங்கு' - ராதிகா இப்போது எழுதிக் கொண்டிருக்கும் மூன்றாவது நாவலின் கதைக்கரு இதுதானாம்!