Published:Updated:

தலையைக் காட்டுறதவிட நடிப்பைக் காட்டுறதுதான் முக்கியம்! - கல்யாணி கலகல!

தலையைக் காட்டுறதவிட நடிப்பைக் காட்டுறதுதான் முக்கியம்! - கல்யாணி கலகல!
பிரீமியம் ஸ்டோரி
தலையைக் காட்டுறதவிட நடிப்பைக் காட்டுறதுதான் முக்கியம்! - கல்யாணி கலகல!

ஹோம் தியேட்டர்பொன்.விமலா

தலையைக் காட்டுறதவிட நடிப்பைக் காட்டுறதுதான் முக்கியம்! - கல்யாணி கலகல!

ஹோம் தியேட்டர்பொன்.விமலா

Published:Updated:
தலையைக் காட்டுறதவிட நடிப்பைக் காட்டுறதுதான் முக்கியம்! - கல்யாணி கலகல!
பிரீமியம் ஸ்டோரி
தலையைக் காட்டுறதவிட நடிப்பைக் காட்டுறதுதான் முக்கியம்! - கல்யாணி கலகல!
தலையைக் காட்டுறதவிட நடிப்பைக் காட்டுறதுதான் முக்கியம்! - கல்யாணி கலகல!

‘`சென்னை பட்டணம் எல்லாம் கட்டணம்
கையை நீட்டினா காசு மழை கொட்டணும்
குடிக்கிற தண்ணீர் காசு
கொசுவை விரட்ட காசு
அர்ச்சனை சீட்டும் காசு
தேர்தல் சீட்டும் காசு
ஆட்டோ மீட்டர் காசு
திருட்டு வீடியோ காசு''


பிரபு தேவா - லைலா நடிப்பில் வெளியான `அள்ளித்தந்த வானம்’ திரைப்படத்தில் வெளியான இந்தப் பாடலை ஞாபகம் இருக்கிறதா? `ஆம்' என்றால், அந்தப் பாடலில் க்யூட்டாக டான்ஸ் போட்ட குட்டிச் சுட்டி கல்யாணியையும் மறக்கவே முடியாது. வெள்ளித் திரையில் கலக்கியவர் தன் அடுத்த ரவுண்டை சின்னத் திரையில் தொடர்ந்தார். விஜய் டி.வி-யில் ஒளிபரப்பான ‘பிரிவோம் சந்திப்போம்', `தாயுமானவன்', `ஆண்டாள் அழகர்' போன்ற சீரியல்களில் தன் கதாபாத்திரங்கள் மூலம் தனி இடம் பிடித்த கல்யாணிக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. `ஆண்டாள் அழகர் சீரியலுக்குப் பிறகு ஆளைக் காணோமே’ என தேட ஆரம்பித்தால், சத்தமே இல்லாமல் பெங்களூரில் தயாரிப் புப் பணிகளை மேற்கொண்டுவருகிறார், கல்யாணி.

இவ்ளோ நாளா எங்கதான் போயிருந்தீங்க கல்யாணி?

``கல்யாணத்துக்குப் பிறகும் ஷூட்டிங் பிஸியிலேயே இருந்தேன். ஹஸ்பண்ட் பெங்களூருல டாக்டராக இருக்கார். அவர் கூட கொஞ்சமாச்சும் டைம் ஸ்பெண்ட் பண்ணணும்ல? அதான் சின்ன பிரேக் எடுத்துட்டு பெங்களூரு வந்துட்டேன். இங்க வந்து எட்டு மாசம் ஆச்சு. ஆனா, சும்மா இல்ல. டெலிவிஷன் சீரியல் தயாரிப்புப் பணியிலே இருக்கேன். அது என்னன்னு சீக்கிரமே சொல்றேன்.''

அது சரி... சின்னத்திரை தாண்டி பெரிய திரைக்கு வர மாட்டீங்களா?

``ஏங்க... ஏன்? நமக்கெல்லாம் டைரக்‌ஷன் வராது. ஆனா, நடிக்க வரும்னு நம்புறேன். படங்கள்ல வாய்ப்பு வருது. `ஒரு சீன்ல தலையைக் காட்டிட்டுப் போங்க', `தங்கச்சி ரோல் பண்ணுங்க'ன்னு சொல்றாங்க. தலையைக் காட்டுறதவிட நடிப்பைக் காட்டுறதுதான் முக்கியம். அதனால நல்ல வாய்ப்பு வர்ற வரைக்கும் வெயிட்  பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டேன்...''

தலையைக் காட்டுறதவிட நடிப்பைக் காட்டுறதுதான் முக்கியம்! - கல்யாணி கலகல!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்க பொழுதுபோக்கு என்ன?

``நேரம் இருக்கும்போதெல்லாம் `ஸ்லிம் சீக்ரெட்' மெயின்டெயின் பண்றதுக்காக ஜிம் போயிடுவேன். யோகா பண்ணுவேன். ஷாப்பிங் போவேன். ஒரு இல்லத்தரசியா செயல்படுவேன்!''

(என்னது... இல்லத்தரசி பொழுதுபோக்கா? அவ்வ்வ்வ்வ்!)

டாக்டர் ஹஸ்பண்ட் என்ன சொல்றாரு?


``அதை ஏன் கேக்குறீங்க... சும்மா தும்மினாகூட கையில பத்து மாத்திரைகள் கொடுத்துச் சாப்பிடச் சொல்றாரு. ரொம்ப நாளா முதுகுவலி இருந்துச்சு. சில மாதங்களுக்கு முன்னாடிதான் முதுகுத்தண்டுல ஆபரேஷன் நடந்து முடிஞ்சிருக்கு. அவ்ளோ கேர் எடுத்துப் பாத்துக்கிட்டார். செல்லமா என்னை `பாப்பி’னு கூப்பிடுவார். நானும் அவரை அப்படித்தான் கூப்பிடுவேன். குட்டிக் குடும்பம், அன்பான கணவர். லைஃப் நல்லா போகுது!

உங்க ரீல்-ரியல் கேரக்டர் பத்தி சொல்லுங்களேன்?

``சீரியல்கள்ல நல்ல பிள்ளையாவே நடிச்சுட்டேன். நிஜத்துல நான் ரொம்ப வாலு. தப்பைத் தட்டிக்கேட்க ரொம்பப் பிடிக்கும். அப்புறம் ‘ஐ சப்போர்ட் ஜல்லிக்கட்டு’. என்ன இவ்ளோ லேட்டா சொல்றேன்னு பாக்குறீங்களா? பெங்களூருல இருந்துட்டு டி.வி பார்த்துட்டு கத்திட்டே இருந்தேன். உடம்பு முடியாம போனதால நேர்ல கலந்துக்க முடியலை. மத்தபடி `காவிரி தண்ணி வேணும்'னுகூட குரல் கொடுக்குறேன். அதனால ரீலும் ரியலும் வேற வேறதான். குழப்பிக்காதீங்க மக்களே!''

அழகின் ரகசியம் என்னவோ?

``டான்ஸ் ஆடிட்டே இருப்பேன். அப்புறம் ஷூட்டிங் டைம் இல்லாதப்ப தேவையில்லாம மேக்கப் போட்டுக்க மாட்டேன். முகத்துக்கு சன் ஸ்க்ரீன் லோஷன், கண்ணுக்கு காஜல் போட்டுப்பேன். வெறும் 20 நிமிஷம்தான் மேக்கப்புக்கு செலவு பண்ணுவேன்னா பாத்துக்கோங்க!''

திரும்பவும் ஸ்க்ரீன்ல எப்ப பாக்கலாம்?

``கூடிய சீக்கிரமே ஒரு புதிய சீரியல் மூலமா உங்களை வந்து பாக்கப் போறேன். பொதுவா `டிஆர்பி' ரேட்டிங் இருக்குற சீரியல்கள் மாமியார் - மருமகள் பிரச்னைகள், பழி வாங்குற கதைகள்தான் இருக்கு. மக்களுக்கு இதையெல்லாம் பார்த்துப் பார்த்து போரடிச்சுப் போச்சு. ஹிந்தி சீரியல்கள்ல நல்ல கதை அம்சங்கள் இருக்கு. நாமளும் அப்படி மாறினா நல்லா இருக்கும்...''

வாட் நெக்ஸ்ட் கல்யாணி?

``எதையுமே ப்ளான் பண்ணி பண்ணணும். அதனால இப்போதைக்கு கல்யாணியே 26 வயசு குட்டிப் பாப்பாங்கறதால, பாப்பாவுக்கு அவசரம் வேணாம்னு, கரியர்ல கவனம் செலுத்த ஆரம்பிச்சிருக்கேன். என் வாழ்க்கையில் அடுத்த கட்டம்  வரும்போது ஆசீர்வாதம் பண்ணணும் ஓகே-வா?''

டபுள் ஓகே!

வாசகிகள் விமர்சனம்

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ 150


அருவருப்பான ஜோக்ஸ்!

``சன் டி.வி-யில் ஒளிபரப்பாகும் காமெடி ஜங்ஷன் நிகழ்ச்சியில் சில ஜோக்குகள் மிகவும் ஆபாசமாக இருக்கின்றன. ‘புரோகிராம் பண்ண வாங்கன்னு கூப்பிட்டதும் கட்டின நைட்டியோட ஓடிவந் துட்டேன்’ என்று பெண் ஒருவர் சொல்ல, `நல்லவேளை, அப்போ நீங்க நைட்டி போட்டிருந்தீங்க...’ என்று இன்னொருவர் ஜோக் அடிக்கிறார். சேனல் நிர்வாகம் இது போன்ற ஜோக்குகளைத் தவிர்க்க தேவை யான நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று வேண்டுகோள் விடுக்கிறார் அரூரில் இருந்து ம.அக்‌ஷயா.

மூடநம்பிக்கையை வளர்க்க வேண்டாம்!

``ச
மீபகாலமாக பல சேனல்களில் பூதம், பாம்பு, சாபம் தொடர்பான காட்சிகளை ஒளிபரப்புகிறார்கள். இது பார்வையாளர் களிடையே மூட நம்பிக்கையை வளர்க்கும் விதத்தில் உள்ளது. இதனால் பல நேரங்களில் வெறுப்படைந்து டி.வி-யை ஆஃப் செய்து விடுகிறேன். சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் போக்கை மற்றிக்கொள்ள வேண்டும்'' என்று அறிவுறுத்துகிறார், சென்னை போரூரில் இருந்து சாவித்திரி.

நேரத்தை வீணடிக்காதீர்!

விஜய் டி.வி-யின் சிறப்பான நிகழ்ச்சி களில் ஒன்று `கலக்கப்போவது யாரு?’ ஞாயிற்றுக்கிழமை மதிய வேளை களில் சாப்பிட்டபடியே ரசித்து, சிரித்து மகிழ சுவையான நிகழ்ச்சி. ஆனால், சில நேரங்களில் சொதப்பிவிடுகிறார்கள். ஒருமுறை பங்கேற்பாளர்களுக்கு 20-க்கு 8, 9 என மார்க்குகள் கொடுக்கும் அளவுக்கு மோசமாக இருந்தது, இதெல்லாம் முன்கூட்டியே தெரிந்துதானே ஒளிபரப்பு கிறார்கள். இனியாவது எங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள்'' என்று கேட்டுக் கொள்கிறார் சென்னை கே.கே.நகரில் இருந்து அ.யாழினி பர்வதம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism