Published:Updated:

பெண் தொழில்முனைவோருக்கு கைகொடுக்கும் வலைதளம்!

பெண் தொழில்முனைவோருக்கு கைகொடுக்கும் வலைதளம்!
பிரீமியம் ஸ்டோரி
பெண் தொழில்முனைவோருக்கு கைகொடுக்கும் வலைதளம்!

வாய்ப்புகள்ஸ்ரீலோபாமுத்ரா

பெண் தொழில்முனைவோருக்கு கைகொடுக்கும் வலைதளம்!

வாய்ப்புகள்ஸ்ரீலோபாமுத்ரா

Published:Updated:
பெண் தொழில்முனைவோருக்கு கைகொடுக்கும் வலைதளம்!
பிரீமியம் ஸ்டோரி
பெண் தொழில்முனைவோருக்கு கைகொடுக்கும் வலைதளம்!
பெண் தொழில்முனைவோருக்கு கைகொடுக்கும் வலைதளம்!

சிறுதொழில் செய்யும் பெண்கள் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் தாங்கள் தயாரிக்கும் பொருள்களை, இடைத்தரகர்களின் சுரண்டல் இன்றி நேரடியாக இணையத்தில் விற்பனை செய்யும் வாய்ப்பை, mahilaehaat-rmk.gov.in/en/ என்கிற வலைதளம் மூலம் வழங்கி வருகிறது, மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம்.

மொபைல் போன் இருந்தாலே போதும்... வியாபார ரீதியான எல்லா நடவடிக்கை களையும் மேற்கொள்ளும் வகையில் இந்த வலைதளம்  செயல்படுகிறது. பெண் சுயதொழில் முனைவோர் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுவினர், இந்தத் தளத்தில் உற்பத்திப் பொருள்கள் பற்றி விளம்பரம் செய்யலாம்.

தளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக் கம் செய்து பூர்த்திசெய்த பின், rmkosh@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும். பிறகு, 8826909309 என்ற மொபைல் எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம் செய்தி அனுப்பினால், விண்ணப்பம் பரிசீலிக்கப்படும்.

பெண் தொழில்முனைவோருக்கு கைகொடுக்கும் வலைதளம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உரிய ஒப்புதல் பெற்ற பின், பெண் தொழில்முனைவோர் தங்கள் விற்பனைப் பொருள்களை இந்தத் தளத்தில் படங்கள், விலையுடன் பதிவிட்டு, தொடர்புகொள்ள வேண்டிய தங்களின் அலைபேசி எண், இ-மெயில் முகவரி போன்ற வற்றையும் குறிப்பிட்டால் போதும்...  வாடிக்கையாளர்கள் நேரடியாக அவர்களைத் தொடர்புகொள்வார்கள். பல்லாயிரக் கணக்கான சுயஉதவிக் குழுக்களும், லட்சத்துக்கும் மேற்பட்ட பெண் தொழில்முனைவோர் களும் இந்த வலைதளத்தின் மூலம் வியாபாரம் செய்து பலன் பெறுகிறார்கள். தையல் போன்ற சேவைத் தொழில்களையும் பதிவிடலாம்.

இதுகுறித்து நொய்டா  நகரத்தில் பேக்கரி நடத்தும் ஸ்ருதி ஸ்ரீவஸ்தவா, ``கிராமத்தில் வசிக்கும் பெண் தொழில்முனைவோரும், சுய உதவிக்குழுவினரும் இ-மெயில், வாட்ஸ்அப், என தங்களை அப்டேட் செய்துகொண்டு, இந்தத் தளத்தின் மூலம் தங்கள் சுயதொழிலின் மார்க்கெட்டிங் வேலைகளை கமிஷன் இன்றி செய்ய முடிகிறது. அடுத்தக் கட்டமாக, ஃபேஸ்புக், ட்விட்டர் என்று இணையதள விளம்பரத்தை எடுத்துச் செல்லப் பழகும்போது, இதன் வீச்சு இன்னும் சிறப்பாக இருக்கும்’’ என்கிறார்.

விரைவில் ஃப்ளிப்கார்ட், அமே ஸான் போன்ற பிரபல வணிகத் தளங்களுடன் இணைந்து இந்தச் சேவையை விஸ்தரிக்க உள்ளது, மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகம். அதன் மூலம் இன்னும் லட்சக்கணக்கான தொழிற் பெண்கள் பயனடைவார்கள் என்பது சிறப்புச் செய்தி!

(மேலும் விவரங்களுக்கு: 011 - 26567188)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism