Published:Updated:

உயிரோவியம்!

உயிரோவியம்!
பிரீமியம் ஸ்டோரி
உயிரோவியம்!

தூரிகைக.பாலாஜி

உயிரோவியம்!

தூரிகைக.பாலாஜி

Published:Updated:
உயிரோவியம்!
பிரீமியம் ஸ்டோரி
உயிரோவியம்!
உயிரோவியம்!

சென்னை, மயிலாப்பூர்... ஓர் இல்லம் முழுக்க அசத்தல் ஓவியங்கள். அந்த அழகியல் படைப்புகள் அனைத்தும் ஓவியர் எஸ்.ஏ.வி. இளையராஜாவின் தூரிகையால் உருவானவை.  ஒரு   பொன்மாலைப் பொழுதில், இளையராஜா வரைந்த பெண்ணோவியங்கள் புடைசூழ நிகழ்ந்தது சந்திப்பு!

உயிரோவியம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உயிரோவியம்!

“எங்களுக்கு பூர்வீகம் செஞ்சி பக்கத்துல இருக்கும் சிங்கவரம் என்கிற பழைமையான கிராமம். அப்பாவோட குடும்பத்துல எல்லோருமே மரச்சிற் பங்கள் செய்றவங்க. அப்பாவும், இன்னொரு தம்பியும் மட்டும் தான் பள்ளி ஆசிரியர்கள். நான் ஸ்கூல் படிச்சுட்டு இருந்தப்போ, எங்க அண்ணன் இளஞ்செழியன் சென்னை கவின்கலைக் கல்லூரியில் படிச்சாரு. அவர்தான் ஓவியம் வரைய முறையாகச் சொல்லிக்கொடுத்தார்.

உயிரோவியம்!
உயிரோவியம்!

நான் முதன்முதல்ல கத்துக்கிட்ட வாட்டர் கலர்தான் எப்பவுமே என்னோட ஃபேவரைட். ஓவியக் கல்லூரியில சேர்வதற்கு முன்பே, நிறைய கண்காட்சிகள்ல நானும் என் தம்பி இளையபாரதியும் எங்க ஓவியங்களைக் காட்சிக்கு வெச்சிருக்கோம். பிறகு, மைசூரில் உள்ள கல்லூரியில் நானும் தம்பியும் ஓவியப் படிப்பில் சேர்ந்தோம். நிறைய பயணம் செய்தோம். அந்த அனுபவங்கள் இன்னும் இன்னும் நிறைய கற்றுக்கொள்ளத் தூண்டின” என்கிற ஓவியரிடம், நாம் கேள்விகளைத் தூவினோம்.

உயிரோவியம்!
உயிரோவியம்!

உங்களின் ஓவியங்கள் சாதாரண மனிதர்களின் வாழ்வியலை மையப் படுத்துவதாகவே இருப்பது ஏன்?

“பழங்கால மனிதர்களின் வாழ்க்கை முறையை நாம் எப்படித் தெரிந்து கொள்கிறோம்? அவர்கள் வரைந்து வைத்திருந்த குகை ஓவியங்கள், பாறை ஓவியங்கள் வழியாகத் தானே? மன்னர்கள் கால கோயில் சிற்பங்கள் என்றும் வரலாற்றை எடுத்துரைப்பதாகவே திகழ்கின்றன. இது போன்றவற்றின் தொடர்ச்சியாகத்தான், நான் ஓவியங்களைப் பார்க்கிறேன். என்னைப் பாதிக்கக் கூடிய விஷயங்களையும், நான் ரசிக்கிற விஷயங்களையும் ஓவியங்களாக வரைகிறேன். காலமாற்றத்தில் நாம் தொலைத்துவிட்ட விஷயங் களையும் ஓவியங்களாகப் பதிவு செய்கிறேன்.''

உயிரோவியம்!
உயிரோவியம்!

பெண்களின் அன்றாடப் பணிகளைக்கூட உங்களது ஓவியங்கள் அற்புதமாகப் பிரதிபலிக் கின்றனவே... எப்படி?

`` `ஹைப்பர் ரியாலிஸ்டிக்’ எனச் சொல்லப்படும் உயர் யதார்த்தத்தை வெளிப்படுத்தும் பாணியையே என் ஓவியங்களில் கையாள்கிறேன். பெண்களை ஓவியங்களில் கொண்டுவரும்போது நிறைய விஷயங்களைக் கவனிக்க வேண்டும். உதாரணமாக, காட்டன் சேலையின் மடிப்புகளுக்கும், பட்டுச் சேலையின் மடிப்புகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டுதானே? ஓவியத்தில் அதைச் சரியாகப் பதிவுசெய்ய வேண்டும். அதேபோல, செய்யும் வேலையைப் பொறுத்து அவர்களின் உடல் மொழியும் மாறும். இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் சரியாகக் கவனித்து வரையும் போது, நாம் விளக்காமலேயே அவர்களின் தனித்தன்மையையும் உணர்வுகளையும் ஓவியம் வெளிப்படுத்தும்!''

உயிரோவியம்!
உயிரோவியம்!

ஓவிய ஆர்வலர்களுக்கு உங்களுடைய டிப்ஸ்?

“ஓவியத்தை முறையாகக் கற்றுக்கொள்ள முயற்சி செய்யுங்கள். ஓவியத்தை அதன் வரலாற் றைப் புரிந்துகொண்டு அணுகும்போது அடுத்த கட்டத்துக்கு நம்மைக் கொண்டுசெல்லும். எந்தளவுக்குப் பயிற்சி எடுக்கிறோமோ, அந்தளவுக்கு ரிசல்ட் கிடைக்கும். வாழ்த்துகள்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism