Published:Updated:

உங்கள் குழந்தைகள் வயதுக்கு மீறி பேசுகிறார்களா?

உங்கள் குழந்தைகள் வயதுக்கு மீறி பேசுகிறார்களா?
பிரீமியம் ஸ்டோரி
உங்கள் குழந்தைகள் வயதுக்கு மீறி பேசுகிறார்களா?

பெற்றோர் கவனத்துக்கு... பொன்.விமலா

உங்கள் குழந்தைகள் வயதுக்கு மீறி பேசுகிறார்களா?

பெற்றோர் கவனத்துக்கு... பொன்.விமலா

Published:Updated:
உங்கள் குழந்தைகள் வயதுக்கு மீறி பேசுகிறார்களா?
பிரீமியம் ஸ்டோரி
உங்கள் குழந்தைகள் வயதுக்கு மீறி பேசுகிறார்களா?
உங்கள் குழந்தைகள் வயதுக்கு மீறி பேசுகிறார்களா?

‘அம்மா, நீ ஏன் அப்பாவை எப்பப் பாத்தாலும் பூரிக் கட்டை யால அடிக்குற?’

‘எங்க அப்பாவுக்கு அம்மாவை விட அவர் கேர்ள் ஃப்ரெண்ட்தான் பிடிக்கும்...’

- இப்படியான வயதுக்கு மீறிய பேச்சைப் பேசுகிறார்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில்  பங்கேற்கும் குழந்தைகள் சிலர். வயதுக்கு மீறிய பேச்சை வீட்டில் பேசும்போது அதைக் கண்டிக்கும் அல்லது அதுபற்றிக் கவலைகொள்ளும் பெற்றோர் பலரும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இப்படி வகைதொகையில்லாமல் பேசும் குழந்தைகளைப் பார்த்து வியக்கிறார்கள். தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் குழந்தைகள் மட்டுமல்ல... இப்படி இளம்வயதிலேயே வயதைத் தாண்டிச் சிந்திக்கும், செயல்படும் குழந்தைகள் நம்மிடம் நிறையவே இருக்கிறார்கள்.

ஒரு வகுப்பறையில் மாணவர்கள் எல்லோருமாக விளையாட்டு மைதானத்துக்கு விளையாடச் சென்ற பிறகு, அந்த வகுப்பின் ஆசிரியர் மாணவர்களின் புத்தகப்பைகளைப் பரிசோதனை செய்கிறார். அதில் ஒரு மாணவனின் புத்தகத்துக்குள் காதல் கடிதம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இன்னொரு மாணவன் செல்போனை மறைத்து வைத்திருந்தான். அப்படியே ஒவ்வொருவரின் புத்தகப்பையையும் கிளறக் கிளற அதிர்ச்சி தரக்கூடிய சிலபல பொருள்கள் ஆசிரியரின் கையில் சிக்கின. அதைப் பார்த்த அவருக்கு பயங்கர அதிர்ச்சி. அவர் சோதனை யிட்டது நான்காம் வகுப்பில் என்றால் அதிர்ச்சி இருக்கத்தானே செய்யும்!

உங்கள் குழந்தைகள் வயதுக்கு மீறி பேசுகிறார்களா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குழந்தைகள் குழந்தைகளாக இல்லாமல் பெரியவர்களைப் போல் பேச, நடந்துகொள்ள என்ன காரணம்? வயதுக்கு மீறி பேசும் குழந்தைகளை ‘முந்திரிக் கொட்டை போலப் பேசாதே’ என்று சிலர் சொல்வதைக் கேள்விப்பட்டிருப்போம். குழந்தைகள் குழந்தைகளாக இல்லாமல் இருந்தால் அது வருந்தக்கூடியதா... இல்லை, மெச்சக்கூடியதா? விளக்குகிறார் மனநல மருத்துவர் திருநாவுக்கரசு.

‘`குழந்தைகள் துடுக்குத் தனமாகப் பேசி, குறும்புத்தனத் துடன் செயல்பட்டால், அதை ஆரோக்கியமானதாக எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர, அதற்காக வருந்த வேண்டிய அவசியம் இல்லை. குழந்தைகள் தங்கள் சூழலைப் பொறுத்தே தங்களை வடிவமைத்துக் கொள் கிறார்கள். அதனால் எந்தக் காரணமாக இருந்தாலும் குழந்தைகளைக் குறை சொல்வதில் எந்தப் பயனும் இல்லை.

எட்டு  வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கே, தாங்கள் செய்வது சரியானதா இல்லையா என்பதைப் பிரித்தறியத் தெரியும். குழந்தைகள் சுட்டித்தன மாகப் பேசுவதை தொலைக் காட்சிகளில் ரசிக்கப் படு வதைப் போல காட்டுவதால் அதைப்பார்க்கும் மற்ற குழந்தை களும், பெற்றோர்களும் அதுதான் சரியானது எனவும், அப்படி இருந்தால்தான் தங்களைக் கொண்டாடுவார்கள் எனவும் பொய்யான கற்பிதங்களைப் பெற்றுக்கொள்கிறார்கள்’’ என்கிற மருத்துவர், குழந்தை களின் சுட்டித்தனம் குறித்த இருவேறான கருத்துகளைப் பதிவுசெய்கிறார்.

``குழந்தைகள் செய்யும் குறும்புத் தனத்தைப் பொறுத்து அவர்களை ஹைப்பர் ஆக்டிவ், ஓவர் ஆக்டிவ் எனச் சொல்லலாம்.

ஹைப்பர் ஆக்டிவ் குழந்தைகள் 

இவர்கள் அதிக வேலைகளில் ஈடுபாடுகொண்ட வர்களாக இருப்பார்கள். ஆனால், எதையும் முழுமையாகச் செய்யாமல் கவனச்சிதறல்கள் கொண்டவர்களாக பல வேலைகளில் ஈடுபடுவார்கள். அவற்றில் எதையாவது ஒன்றைத் திறம்படச் செய்யலாம்; அல்லது எல்லாவற்றிலும் நுனிப்புல் மேய்வது போன்ற அறிவையே கொண்டிருக்கலாம். அதனால், எதிலும் முழுமைபெற முடியாமல் திணறுவார்கள். இவர்களைக் கவனித்தோம் என்றால், ஒரு மதிப்பெண் கேள்விகளில் முழு மதிப்பெண்களை வாங்கிவிடுவார்கள். ஆனால், நான்கு வரிகளுக்கு மேல் எழுதச் சொன்னால், கோட்டைவிட்டு விடுவார்கள். அதாவது... நன்கு வாசித்துவிடுவார்கள். எழுதச் சொன்னாலோ அதை அவர்களால் முழுமையாக செய்ய முடியாது.

குழந்தைகளின் உலகம் என்பது வீடு, பள்ளி, சமூகம், சூழல் ஆகியவற்றின் அடிப்படையில்தான் மாறு

உங்கள் குழந்தைகள் வயதுக்கு மீறி பேசுகிறார்களா?

படுகிறது. குழந்தைகள் தாங்கள் செய்யும்  செயல் சரியா தவறா என்பது தெரியாமல் பெற்றோர், ஆசிரியர் காட்டும் வழிகாட்டுதலின்படியே தங்களை வடிவமைத்துக்கொள்கிறார்கள். குழந்தைகள் வயதுக்கு மீறியதைச் செய்யும்போது, பெற்றோர் அதைக் கவனிக்காமல் இருந்தாலோ, ஊக்கப் படுத்தினாலோ குழந்தைகள் அதைச் சரியென எடுத்துக் கொள்கின்றனர்.   

ஐந்து முதல் எட்டு வயது வரையுள்ள குழந்தைகளுக்கு தாம் செய்யும் தவறுகளால் ஏற்படும் அவமானம் குறித்துப் புரிவதில்லை. அதனால் தனக்குக் கிடைக்கும் சுதந்திரம், சூழல் பொறுத்தே அக்குழந்தைகள் தங்கள் செயல்களைச் செய்ய ஆரம்பிக்கிறார்கள்.

ஓவர் ஆக்டிவ் குழந்தைகள்

இந்த வகை குழந்தைகள் ஒரே விஷயத்திலோ, பல விஷயங்களிலோ கவனம் செலுத்துவார்கள். ஆனால், ஒரு வேலையில் ஈடுபடும்போது அதை முழுமையாக உள்வாங்காமல் அடுத்த வேலையில் ஈடுபட மாட்டார்கள். எந்த வேலையைக் கையில் எடுத்தாலும், அதைத் திறம்படத் தெளிவாகச் செய்யும் திறன்மிக்க வர்கள் இவர்கள். இத்தகைய குழந்தைகள் பன்முகத் திறமைசாலிகளாக இருந்தாலோ, ஒரே துறையில் திறமைசாலிகளாக இருந்தாலோ அதில் முழுமையான, தேர்ந்த அறிவைப் பெற்றிருப்பார்கள். ஒரே நாளில் குறைவான வேலைகளை மட்டுமே செய்யாமல், அதிக அளவிலான வேலைகளைச் செய்வதிலும் இவர்கள் திறமைசாலிகள்!

ஆக, குழந்தைகள் எந்த வகையைச் சேர்ந்தவர்களாக இருந்தவர்களாக இருந்தாலும், அதுபற்றிக் கவலைகொள்ளத் தேவை யில்லை. குழந்தைகளைக் குழந்தைகளாக இருக்க விடுவதே சரி. அவர்கள் என்ன செய்தாலும் அது பெற்றோர் அவர்களை வழிநடத்துவதைப் பொறுத்துதான் அமையுமே அன்றி, அதைப் பெருங்குற்றமாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. குழந்தைகளைக் கண்டிக்க ஆரம்பித்தோமானால், அவர்கள் தங்கள் செயலைப் பெற்றோருக்குத் தெரியாமல் செய்ய ஆரம்பித்து விடுவார்கள். அதைத் திருத்திக் கொள்ள முயற்சி செய்ய மாட்டார்கள். எனவே, குழந்தைகள் ஏற்றுக்கொள்ளும் அளவில், புரிந்துகொள்ளும் வகையில் எடுத்துச் சொல்வதே நல்லது.

மனதில் தோன்றுவதைச் சொல்வது என்பது... ஒன்று, குழந்தைத்தனம், இன்னொன்று, மனநிலை குன்றிய தருணம். அதனால், மனதில் தோன்றுவதை அப்படியே சொல்லாமல், ஆராய்ந்து சொல்வதே புத்திசாலித்தனம். அதனால் குழந்தைகள் பேசுவதைப் பற்றி வருத்தப்படாமல், அவர்களைச் சூழலுக்கு ஏற்ப பக்குவப்படுத்துவதே நாம் செய்ய வேண்டியது'' என்கிறார் திருநாவுக்கரசு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism