Published:Updated:

வீடு Vs வேலை - புது மனுஷி ஆகிறேன்!

வீடு Vs வேலை - புது மனுஷி ஆகிறேன்!
பிரீமியம் ஸ்டோரி
வீடு Vs வேலை - புது மனுஷி ஆகிறேன்!

யாழ் ஸ்ரீதேவி

வீடு Vs வேலை - புது மனுஷி ஆகிறேன்!

யாழ் ஸ்ரீதேவி

Published:Updated:
வீடு Vs வேலை - புது மனுஷி ஆகிறேன்!
பிரீமியம் ஸ்டோரி
வீடு Vs வேலை - புது மனுஷி ஆகிறேன்!

ரக்கப்பரக்க வீட்டு வேலை களைக் கவனித்துவிட்டு பேருந்துக்குக் காத்திருந்து, தூரம் கடந்து பணிக்குச் செல்லும் பெண்களின் முகத்தில் ஒரு போர்க்கால பரபரப்பு. அவசரத்தில் பேருந்து பிடித்து ஸீட்டில் அமர்ந்த சில நொடிகளுக்கு இதயத்தின் `லப்டப்'பில் அவ்வளவு வேகம்! ஒருவழியாக அலுவலகத்துக்குள் கால் வைக்கும்போது `ஐந்து நிமிஷம் லேட்' என்கிற டென்ஷன் முகத்தில் அறைந்து, மாடிப்படிக்கட்டுகளிலும் பறக்க வைக்கும். அலுவலக இருக்கையில் அமர்ந்த சில நிமிடங்களில்தான் பெண்கள் பலர் தனக்காகச் சுவாசிக் கின்றனர். அலுவலகத்தில் புது அவதாரம் எடுக் கும் பெண், தனது திறமையையும் அறிவையும் பயன்படுத்திப் பெறும் பாராட்டுகள் அவளுடைய அயற்சிகளை அள்ளி, மகிழ்ச்சிக் கடலில் சேர்த்து விடுகின்றன. 

வீடு Vs வேலை - புது மனுஷி ஆகிறேன்!

பழனி நெய்க்காரபட்டி பகுதியிலுள்ள தனியார் பள்ளி ஆசிரியரான பகவதி ஓர் உதாரணம். கல்லூரிக் காலத்திலேயே காட்டன் சேலை, என்றும் மாறாத புன்னகை, எந்தச் சூழலையும் இன்முகத்துடன் ஏற்றுக்கொள்ளும் பக்குவம், யாருக்குப் பிரச்னை என்றாலும் முன்னின்று உதவும் குணம் என்று மலைக்க வைத்தவர். இன்று வேலை, வீடு என இரண்டு இடங்களிலும் எல்லோராலும் விரும்பப்படும் பெண் பகவதி. அவரது அனுபவப் பகிர்வு இது...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

• முடிந்தவரை கால் மணி நேரம் முன்னதாகவே சம்பந்தப்பட்ட இடத்தில் இருக்கும்படி  பயணத்தைத் திட்டமிட்டுக்கொள்வேன். இதனால் கடைசி நேர அவசரங்கள் என்னைக் கசக்கிப்பிழிந்ததில்லை.

• பெண்கள் பலர் வீட்டில் இருந்து வேலைக்குச் செல்லும் பயண நேரத்தை சிரமமானதாக நினைப்பார்கள். அதுவே எனக்குத் தங்கமான ஓய்வு நேரம். பிடித்த பாடல் கேட்பதும் பயண நேரத்தில்தான். காலை பரபரப்பின் டென்ஷனை நீக்கி உற்சாகமாகப் பள்ளிக்குள் நுழைவேன். வீடு திரும்பும்போதும் மனமகிழ்வுடன் ஓர் இசைப் பயணம்.

• காத்திருக்கும் நேரங்களில் என் கையில் புத்தகமோ, பத்திரிகையோ இருக்கும்.

• வழக்கமான பள்ளி நேரம், தேர்வு நேரத்தில் மாறிவிடும். காலை 7 மணியில் இருந்து இரவு 8 மணி வரை பள்ளியிலேயே இருக்க நேரும். அப்போது காலை 4.30 மணிக்கு எழுந்து சமையல் முடித்துவிடுவேன்.
 

• வீட்டில் இருக்கும்போது பள்ளியைப் பற்றி யோசிக்க மாட்டேன்; அதேபோல, பள்ளியில் இருக்கும்போது வீட்டைப் பற்றிய நினைப்பு வரவே வராது. வேலைகளை ரசித்துச் செய்வதால், சுமையாக உணர்வதில்லை.

• வேலையிடத்தில் சுமுகமான சூழலை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். தவறு நம்முடையதாக இருப்பின், தயங்காமல் மன்னிப்பு கேட்டுவிட வேண்டும். 

வீடு Vs வேலை - புது மனுஷி ஆகிறேன்!

• மாதத்தில் ஓரிரு முறையாவது வழக்கமான வாழ்க்கைமுறையில் இருந்து விடுபடுவேன். தங்கைகளுடன் ஊர் சுற்றுவதும், கணவருடன் வெளியிடங் களுக்்குச் செல்வதும் பிடிக்கும். இதுபோன்ற பயணங்களே என்னைப் புது மனுஷி ஆக்குகின்றன.

• உறவினர்களிடமிருந்து எந்த அழைப்பு வந்தாலும், அதில் கலந்துகொள்ள கணவருடன் செல்வேன். இவ்வளவு பெரிய உறவுக் கூட்டம் உள்ளது என்கிற எண்ணமே நம்மை வலிமையாக்கும்.

• `எனக்குப் பிடித்த மாதிரி நான் வாழ்கி றேன்' என்கிற எண்ணமே மிகப்பெரிய தன்னம்பிக்கை. கஞ்சி போட்டு அயர்ன் செய்யப்பட்ட காட்டன் சேலைகளைக் கட்டிக்கொள்ளும்போது மிகவும் சௌ கரியமாக உணர்கிறேன். எனக்குப் பிடித்த வண்ணங்கள் அந்த நாளையே சந்தோஷமாக மாற்றி விடுகின்றன. இப்படி எப்போதும் நமது விருப்பங்களை பாது காத்துக்கொண்டால் மன அழுத்தத்துக்கு இடமே இல்லை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism