Published:Updated:

டயட் டூர் - கொழுப்பே உணவாகும் பேலியோ டயட்!

டயட் டூர் - கொழுப்பே உணவாகும் பேலியோ டயட்!
பிரீமியம் ஸ்டோரி
டயட் டூர் - கொழுப்பே உணவாகும் பேலியோ டயட்!

ந.ஆசிபா பாத்திமா பாவா

டயட் டூர் - கொழுப்பே உணவாகும் பேலியோ டயட்!

ந.ஆசிபா பாத்திமா பாவா

Published:Updated:
டயட் டூர் - கொழுப்பே உணவாகும் பேலியோ டயட்!
பிரீமியம் ஸ்டோரி
டயட் டூர் - கொழுப்பே உணவாகும் பேலியோ டயட்!

`வெயிட் லாஸ்' எனும் மந்திர வார்த்தை இன்று பலரையும் பலவிதமான டயட்டை நோக்கி ஓடவைத்துக்கொண்டிருக்கிறது. இச்சூழலில், ‘கொழுப்பு நல்லது’ என்கிற கோஷத்துடன் களமிறங்கி பரபரப்பு கூட்டுகிறது `பேலியோ டயட்'. நீரிழிவாளர்கள், இதய நோயாளிகள், பருமன் பிரச்னையால் அவதிப்படுபவர்கள் முதல் பாடிபில்டர்கள் வரை சகல தரப்பினரையும் வசீகரித்து, டயட்டீஷியன்கள், மருத்துவர்கள் என வல்லுநர்களின் கவனத்தையும் ஈர்த்திருக்கும் பேலியோ டயட் பற்றி விளக்குகிறார் டாக்டர் மரியானோ ஆன்டோ ப்ரூனோ மஸ்கரணாஸ்.

டயட் டூர் - கொழுப்பே உணவாகும் பேலியோ டயட்!

``நாம் உண்ணும் உணவில் இந்த ஏழு அம்சங்கள் இருக்க வேண்டும்... 1. மாவுச்சத்து (கார்போஹைட்ரேட்), 2. கொழுப்புச்சத்து (ஃபேட்), 3. புரதச்சத்து (புரோட்டீன்), 4. உயிர்ச்சத்து (வைட்டமின்), 5. தாதுக்கள் (மினரல்), 6. நீர்ச்சத்து, 7. நார்ச்சத்து.

பேலியோ டயட் என்று அழைக்கப்படும் உணவுமுறை, நெருப்பைக் கண்டுபிடிப்பதற்கு முந்தைய காலத்திலேயே - அதாவது தானியங்கள் உள்பட இப்போது நாம் உண்ணும் எதையும் உணவு என்று கண்டுபிடிக்காத காலத்தில், குகைகளில் வாழ்ந்த மனிதன் என்ன சாப்பிட்டு உயிர் வாழ்ந்தானோ, அந்த உணவைச் சாப்பிடுவதுதான். நமது இன்றைய உணவுகள் எல்லாமே பத்தாயிரம் ஆண்டுகளுக்குள் கண்டுபிடிக்கப்பட்டவைதாம். அதற்கு முந்தைய காலத்தை `பேலியோலித்திக் காலம்' எனக் கூறுவார்கள். அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த மனிதர்களின் உணவுகள்தான் பேலியோ டயட்டில் பின்பற்றப்படுகின்றன.

60 கிலோ எடை உள்ள ஒரு நபர், தினமும் சாப்பிடும் உணவில், மாவுச்சத்தின் அளவானது 45 கிராமுக்குக் குறைவாக இருந்தால், அது பேலியோ டயட் அல்லது ஆதிமனிதன் உணவு எனப்படும். (உடல் எடையில் கிலோவுக்கு 750 மி.கி மாவுச்சத்து என்கிற கணக்கில். 60 கிலோ எடை உள்ளவருக்கு 45 கிராம்; 100 கிலோ எடை உள்ளவருக்கு 75 கிராம் மாவுச்சத்து போதுமானது).

உயிர் வாழ முக்கியமான உணவாக அந்தக்கால மனிதர்களுக்குக் கிடைத்தது, ஆரோக்கியமிக்க மாமிசக் கொழுப்புதான்... எதைச் சாப்பிட்டால் மாரடைப்பு வரும், பருமன் ஏற்படும் எனக் கூறுகிறார் களோ அதே மாமிசக் கொழுப்புதான்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டயட் டூர் - கொழுப்பே உணவாகும் பேலியோ டயட்!

நமது உடலின் இயக்கத்துக்கு இரண்டு வகையான ஆற்றல்கள் (எனர்ஜி) பயன்படுத்தப்படுகின்றன. ஒன்று குளுக்கோஸில் இருந்து கிடைக்கும் ஆற்றல். இன்னொன்று, கொழுப்பில் இருந்து கிடைக்கும் ஆற்றல்.  மாவுச்சத்து அதிகம் உள்ள உணவுகள்,  பழச் சர்க்கரை, வெள்ளைச் சர்க்கரை, பலவகை இனிப்புகள், ஜங்க் ஃபுட் போன்ற உணவுகளில் இருந்து நம் உடலுக்குத் தேவையான குளுக்கோஸ் பெறப்படுகிறது. நம் உடலுக்கு குளுக்கோஸ் மூலம் சக்தி கிடைக்கவில்லை என்றால், அது தனக்கான ஆற்றலை கொழுப்பில் இருந்து எடுத்துக்கொள்ளும். இதில் மிக  முக்கியமான விஷயம், உடலில் அளவுக்கு அதிகமாக குளுக்கோஸ் சேர்ந்தால், நம் உடல் கொழுப்பை பத்திரமாகச் சேமித்துவிட்டு, குளுக்கோஸை மட்டும் உடல் இயக்கத்துக்காகப் பயன்படுத்துகிறது. இந்தக் கொழுப்புதான், வயிற்றைச் சுற்றிலும், உடலின் பல பாகங்களிலும் சேமிக்கப்படுகிறது.

எடுத்துக்காட்டாக... நம்முடைய ஒரு நாள் உணவில் 40 கிராம் அல்லது அதற்குக் குறைவாக மாவுச்சத்து உணவுகளும், மற்றவை முழுவதும் கொழுப்புச் சார்ந்த உணவுகளுமாக எடுத்துக்கொள்கிறோம் என்றால்... உடல், மாவுச்சத்து உணவுகளில் இருந்து கிடைக்கும் குளுக்கோஸை ஆற்றலாகப் பயன்படுத்தாமல், கொழுப்பை தனது இயக்கத்துக்கான ஆற்றலாகப் பயன்படுத்தும். அதே நேரம், 300 கிராம் மாவுச்சத்தும் 500 கிராம் கொழுப்பும் இருக்கிறது என வைத்துக்கொள்வோம். இப்போது நம் உடல், தனக்கான ஆற்றலை குளுக்கோஸில் இருந்து மட்டுமே எடுத்துக்கொள்ளும். ஆற்றலாக மாறாத மீதம் உள்ள கொழுப்பு, நம் உடலில் சேமிக்கப்படுகிறது. உணவு சார்ந்த பருமன் ஏற்படுவதற்கு முக்கியமானக் காரணம் இதுதான். பேலியோ டயட்டில் அரிசி, கோதுமை, மைதா, பேக்கரி பொருள்கள், பழங்கள்/ஜூஸ், அனைத்துவகை இனிப்புகள், தேன், நாட்டுச் சர்க்கரை, வெள்ளைச் சர்க்கரை, சுகர் ஃப்ரீ மாத்திரைகள், ஓட்ஸ், பாக்கெட்டில் அடைக்கப்பட்டு விற்கப்படும் ரெடி டு குக் உணவுகள், ரிஃபைண்ட் எண்ணெய் வகைகள், ஜங்க் ஃபுட், அனைத்துவகை பீன்ஸ்கள், கிழங்கு வகைக் காய்கறிகள், அனைத்துவகைக் கடலைகள், அனைத்துவகைப் பருப்புகள், புளி, அனைத்துவகை சோயா பொருள்கள், காபி, டீ, அனைத்துவகை கூல் டிரிங்க்ஸ் ஆகியவை தவிர்க்கப்பட வேண்டும்.

அப்படியானால், என்னதான் சாப்பிட வேண்டும் என்ற கேள்வி நம் மனதில் எழும். அதற்கும் பட்டியல் இருக்கிறது. அதை அடுத்த இதழில் அலசுவோம்!''

(உங்களால் முடியும்!)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism