Published:Updated:

உட்கார்ந்தே உழைத்தால் எடை அதிகரிக்கும்!

உட்கார்ந்தே உழைத்தால் எடை அதிகரிக்கும்!
பிரீமியம் ஸ்டோரி
உட்கார்ந்தே உழைத்தால் எடை அதிகரிக்கும்!

உழைக்கும் மகளிர்யாழ் ஸ்ரீதேவி

உட்கார்ந்தே உழைத்தால் எடை அதிகரிக்கும்!

உழைக்கும் மகளிர்யாழ் ஸ்ரீதேவி

Published:Updated:
உட்கார்ந்தே உழைத்தால் எடை அதிகரிக்கும்!
பிரீமியம் ஸ்டோரி
உட்கார்ந்தே உழைத்தால் எடை அதிகரிக்கும்!

ணிக்குச் செல்லும் பெண்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் எதிர் கொள்ளும் சிரமங்களின் பட்டியல் மிகவும் நீளமானது. ஒரு நாளில் குறைந்தபட்சம் எட்டு மணி நேரம் அமர்ந்த இடத்திலேயே வேலை செய்ய வேண்டிய சூழல் பலருக்கு உண்டு. சிற்றுண்டியும் மதிய உணவும்கூட அதே நாற்காலியில்தான். இதனால் இடுப்பிலும் வயிற்றுப்பகுதியிலும் எடை ஏறி, டென்ஷனை ஏற்றும். கண்ணாடி பார்க்கும்போதே கண்ணைக் கட்டும். ‘வெயிட்டைக் குறைச்சுடு’ என்று மனம் சொல்லும். அதற்காக நேரம் ஒதுக்க முடியாமல் மனஉளைச்சல் ஆளைக் கொல்லும்.

உட்கார்ந்தே உழைத்தால் எடை அதிகரிக்கும்!

நாளாக ஆக, முதிர்ந்த தோற்றம் கவலையை அதிகரிக்கும். இதுவே தொடர்ந்தால் இதய நோய் உள்பட பல பிரச்னைகள் ஏற்படும்  அபாயமும் அதிகரிக்கும்; வாழ்நாளும் குறையும். மாதவிடாய் சுழற்சி நின்ற பின், மிக மோசமான விளைவுகளைப் பெண்ணின் உடலில் ஏற்படுத்தும்.

சரி... இதற்கெல்லாம் தீர்வே இல்லையா? - வழி சொல்கிறார் இயன் முறை மருத்துவர் செந்தில்குமார்.

‘`அலுவலகத்தில் 10 மணி நேரம்கூட உட்கார்ந்தே வேலை செய்யக்கூடிய பெண்கள் இப்போது அதிகரித்து வருகிறார்கள். இந்தப் பணிகளைத் தொடர்ந்து, இரவு உணவு தயாரிப்பு பணிகள்... அது முடிந்த பின்னர் மனதில் ஓர் அழுத்தம் ஏற்படும். இதைத் தவிர்க்க, தூங்குவதற்கு முன் மொட்டை மாடியிலோ, வீட்டின் அருகிலோ கொஞ்ச நேரம் நடப்பதை வழக்கம் ஆக்கிக்கொண்டால் மனம் ரிலாக்ஸ் ஆகும். எடைப் பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கும்’’ என்கிற செந்தில்குமார், உழைக்கும் மகளிருக்கு உதவும் வகையில் டிப்ஸ் அளிக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உட்கார்ந்தே உழைத்தால் எடை அதிகரிக்கும்!

• எடையை அதிகரிக்கும் உணவு வகைகளைத் தவிர்க் கலாம். காய்கறி மற்றும் பழங்களைக் கூடுதலாக எடுத்துக் கொள்ளலாம்.

• அலுவல கத்தில் லிஃப்ட்டுக்கு பதிலாகப் படிக்கட்டுகளைப் பயன் படுத்தலாம்.

• தண்ணீர் தேவை, ரெஸ்ட் ரூம், இன்ன பிற காரணங்களுக்காக அவ்வப் போது எழுந்து செல்லலாம்.

• காலை நேரத்தில் வாக்கிங் செல்ல வாய்ப்பு இல்லாவிட்டாலும், சமை யலுக்கான காய்கறி, பால் ஆகியவற்றை வாங்க நடந்தே செல்லலாம்.

• வேலையின் நடுவே பொசிஷனை மாற்றி விரல்கள், பாதங்களுக்கு பயிற்சி அளிக்கலாம்.

• பேருந்துக்காகவோ அல்லது யாருக்காகவோ காத்திருக்கும் நேரத்தில் பாத விரல் நுனியில் நின்று பின் காலை கீழிறக்கி `அப் அண்ட் டவுன்' பயிற்சி செய்யலாம்.

• வேலை முடிந்து வீடு திரும்பும்போது ஷாப்பிங், கோயில், பார்க் செல்வது என நடப்பதற்கான வாய்ப்பு களை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

• வீட்டில் வேலை களைச் செய்யும்போது கூடுமானவரை நடப்பதற் கான வாய்ப்பை அதிகரிக்கலாம். சில வேலை களை நின்றுகொண்டே செய்யலாம்.

• அலுவலக வேலை நேரத்தில் `மைக்ரோ பிரேக்ஸ்' எடுப்பது நல்ல பலன் தரும். அரை மணி நேரத்துக்கு ஒருமுறை இருந்த இடத்திலேயே ஐந்து நிமிடங்கள் எழுந்து நிற்கலாம்.

• செல்போன் அழைப்பு களின்போது இருந்த இடத்தி லேயே பேசாமல், எழுந்து வெளியில் சென்று பேசலாம். இதன்மூலம் போன் வரும் போதெல்லாம் நடப்பதும் பழக்கம் ஆகும்.

• முடிந்த வரை அடிக்கடி தண்ணீர் குடிக் கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism