Published:Updated:

மனுஷி - 13 - சுருங்கப் பேசும் கலை!

மனுஷி - 13 - சுருங்கப் பேசும் கலை!
பிரீமியம் ஸ்டோரி
மனுஷி - 13 - சுருங்கப் பேசும் கலை!

சுபா கண்ணன் - ஓவியம்: ஸ்யாம்

மனுஷி - 13 - சுருங்கப் பேசும் கலை!

சுபா கண்ணன் - ஓவியம்: ஸ்யாம்

Published:Updated:
மனுஷி - 13 - சுருங்கப் பேசும் கலை!
பிரீமியம் ஸ்டோரி
மனுஷி - 13 - சுருங்கப் பேசும் கலை!

தனியுரிமை...

லகில் பெண்கள் சுதந்திரமாக இருக்க வேண்டுமானால், அவர்கள் படிக்க வேண்டும்; படிக்க வைக்கப்பட வேண்டும். அதற்கான அல்லது அவர்களுக்கான தொழிற்கூறுகளை உருவாக்க வேண்டும்.


- பெரியார்

ஹாலில் ஏதோ வேலையாக இருந்தாள் ராதா. ஆனால், `அலுவலகத்துக்குச் சென்ற பெண் நவீனா இன்னும் வரவில்லையே’ என்கிற எண்ணம்தான் அவள் மனம் முழுக்க ஆக்கிரமித்திருந்தது. இத்தனைக்கும் மாலை நான்கு மணிக்கே போன் செய்து, மீட்டிங் இருப்பதால், வீட்டுக்கு வருவதற்குத் தாமதமாகும் என்று சொல்லியிருந்தாள் நவீனா. ராதா இப்படி கவலைப்பட்டுக்கொண்டிருக்கும் போதே, அழைப்பு மணி விடாமல் ஒலித்தது. 

மனுஷி - 13 - சுருங்கப் பேசும் கலை!

ராதா வாசல் கதவைத் திறக்கவும், நவீனா தாயிடம் எதுவும் பேசாமல் ரெஸ்ட் ரூமுக்குச் சென்றுவிட்டாள். அவளுடைய போக்கில் இருந்தே அவள் டென்ஷனாக இருக்கிறாள் என்பதை ராதா புரிந்துகொண்டாள். சற்றைக்கெல்லாம் நவீனா ஃப்ரெஷ்-அப் ஆகி வந்தாள்.

அதற்குள் ராதா, அவளுடைய கணவர் கிருஷ்ணன், கிருஷ்ணனின் தாய் கமலம்மா மூவரும் பார்வையிலேயே ஒரு கதகளி ஆடி முடித்திருந்தனர்.

நவீனா படபடப்பாக இருப்பதால், அப்போதைக்கு எதுவும் பேச வேண்டாம் என்பதுதான் அவர்களின் கதகளிக்கு அர்த்தம். எதுவும் பேசாமல் அனைவரும் சாப்பிட அமர்ந்தனர். அதற்குள் தன்னை சற்றே ஆசுவாசப்படுத்திக்கொண்ட நவீனா, சாப்பிட்டபடியே பேசத் தொடங்கினாள்...

``ஒண்ணுமில்லே, உப்பு பெறாத விஷயம். ஒரு சர்குலர் விட்டிருந்தா முடிஞ்சிருக்கும். அதை விட்டுட்டு இழு இழுன்னு ஜவ்வாட்டம் ஒரு மீட்டிங். நானும் ஸ்வேதாவும் `எப்படா விடுவாங்க’ன்னு கடுப்பாயிட்டோம். மீட்டிங் நடந்த நேரத்துக்கு நாளைய வேலையில பாதியை முடிச்சிருப்போம்’’ என்று அலுத்துக்கொண்டாள்.

நவீனா வேலை செய்வது ஓர் ஆட்டோ மொபைல் நிறுவனம். இளைஞர்களால் புதிதாகத் தொடங்கப்பட்ட அந்த நிறுவனத்தில் கஸ்டமர் கேர் பிரிவில் நவீனாவும், ரிசப்ஷ னிஸ்டாக ஸ்வேதாவும் பெண்கள். மற்றவர்கள் அனைவருமே ஆண்கள்.
வேலையில் சேர்ந்த நாள் முதலே நவீனாவுக்கு இரண்டே கம்ப்ளெயின்ட்டுகள்தாம்.

1. `பெண்களுக்கு என்ன தெரியும்?’ என்கிற ஆண் மனோபாவம்

2. திறமையான ஆட்கள் கம்யூனிகேஷனில் வீக்காக இருக்காங்க. இரண்டு வாக்கியத்தில் முடிக்க வேண்டிய விஷயத்தை ஜவ்வா இழுத்து போரடிக்கறாங்க.

பெற்றவர்கள் அமைதியாக இருந்தனர். பாட்டி மட்டும், “காமா சோமான்னு பேசிட்டே இருந்தாங்களா?” என்று சிரித்தபடி கேட்டார்.

“நீ வேற பாட்டி, உன்னோட பழமொழியால கொல்லாதே... எனக்கே டயர்டா இருக்கு” என்று சொன்ன நவீனா, அதன்பிறகு எதுவும் பேசாமல் சாப்பிட்டு எழுந்தாள்.

கொஞ்சநேரம் பால்கனியில் உலாத்திய பின் ரிலாக்ஸான நவீனா, ஹாலுக்கு வந்தாள். ஹாலில் தன்னையே பார்த்தபடி இருந்த பாட்டியிடம், “ஆமா... அதென்ன பாட்டி எப்பப் பாரு `காமா சோமா'ன்னு அர்த்தமேயில்லாத ஒரு பழமொழி?’’ என்று கேட்டாள்.

பாட்டி சிரித்தபடியே, ‘`மன்மத தகனம் கதை தெரியுமில்லையா? அதில் மன்மதன் பாணம் பட்டதும், சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து வந்த கோபாக்னியால் மன்மதன் - அதாவது காமன் எரிந்து போனான். அதே நேரம் எறியப்பட்ட கணையினால் காம வசப்பட்ட சிவன் - அதாவது சோமன் பார்வதியை மணந்து, முருகன் தோன்றினார். அதுதான் குமார சம்பவம்.

அப்போ இதில் ஜெயித்தது யாரு... காமனா, சோமனா என பட்டிமன்றம் நடத்தினாலும் `டிரா'விலேதான் முடியும், அதனாலத்தான் வெட்டிப் பேச்சு, வளவள பேச்சுகளை காமா சோமான்னு பேசாதேன்னு சொல்லி முடிப்பாங்க!”
பாட்டி சொன்னதை வியப்பும் ரசிப்புமாகக் கேட்ட நவீனா, “இன்ட்ரஸ்டிங்! ஒரு வரிக்கு இத்தனை விளக்கமா?!’’ என்று கேட்டாள்.

நவீனாவின் வியப்பில் விரிந்த கண்களின் அழகை ரசித்தபடியே ராதா சொல்லத் தொடங்கினாள்... “அந்தக் காலத்துப் பெண்கள் தொடர்ந்து பழமொழிகளை சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அதில் அவர்களின் பரம்பரை வேல்யூஸ்  (விழுமியம்), பட்ட கஷ்டம், மீண்டு வந்தது, நாசூக்கு,  நக்கல், அறிவுரை, சொல்ல வந்ததை இலைமறை காய்போல சொல்வது எல்லாம் அடங்கும்.

தனது உடைமையை, ‘காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என செல்லம் கொஞ்சும் பழமொழி, அடுத்தவரின் தவற்றை, ‘மாமியார் உடைத்தால் மண் சட்டி; மருமகள் உடைத்தால் பொன் சட்டி’ என சுட்டிக்காட்டும் பழமொழி’’ என்று சொல்ல, மாமியாரும் மருமகளும் சேர்ந்தே சிரித்தார்கள், ``ஏம்மா, பாட்டியை வம்பிழுக்கற?’’ என்றபடி பாட்டியைக் கட்டிக்கொண்ட பேத்தி, ``இதெல்லாம் கேக்க மாட்டியா பாட்டி?’’ எனக் கோத்துவிட்டாள்.

“இது மாமியாருக்கானது மட்டுமல்ல, பொதுவானது. எங்களுக்குள்ள சண்டையே வராது... நீ உள்ளே நுழைஞ்சு குட்டையைக் குழப்பாதே. நாங்க ஜாடிகேத்த மூடி தெரிஞ்சுக்கோ’’ என்று பாட்டி சொல்ல, அப்பாவும் வந்து சேர்ந்துகொண்டார்.

“திருமணமான புதிதில், ஏன் இப்பக்கூட வளவளன்னு பேசும் உங்கம்மா `உக்கும்’, `உம்’ என்ற சொல்லில் எல்லா விஷயங்களையும் கம்யூனிகேட் பண்ணிடறதுலயும் சமத்துதான்!”

“அப்போ லொடலொடன்னு பேசி னாலும், தேவைப்படும்போது அளவா பேசிடறோம்ங்கிறீங்க. அப்படிதானேப்பா?”

``அது மட்டுமா... பொறுமையா பக்குவமா பேசுவது, கோபமா பேசுறவங்ககிட்டகூட அந்தச் சூழலுக்குத் தக்கபடி அதைப் புரிய வைக்கிறது... இதல்லாம் அம்மா, பாட்டி அளவுக்கு எனக்குக்கூட வராது’’ என்றார்.

உண்மைதான். பவர் ஆஃப் ஸ்பீச்சில் பெண்கள்தான் டாப்!

``ஆனா, பழமொழியெல்லாம் மீட்டிங்ல பேச முடியாதில்ல’’ என்று கேட்டு நவீனா சிரிக்க, ``இதெல்லாம் கேட்டு வளர்றதாலத்தான் விஷயங்களைச் சட்டுனு கிரகிச்சுக்கிட்டு பதிலையும் ஸ்மார்ட்டா சொல்லிடறீங்க’’ என்று ஒரு ஷொட்டு வைத்தார் அப்பா!

(இன்னும் உணர்வோம்)

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பேச்சும் அழகியலே!

ம்மடர் என்னும் கவிஞர், `காவ்யப்ரகாசம்’ என்ற நூலில், ‘காந்தா சம்மிததயோ உபதேசயுஜே’ என்று சொல்லியிருக்கிறார். காவியங் களில் உள்ள அறிவுரைகள் மனைவியின் அறிவுரையைப் போன்று சுருக்கமாகவும் மென்மையாகவும் இருக்கும் என்பதுதான் இதன் பொருள். மென்மையாகவும் சுருக்கமாகவும் பேசுவதில் பெண்களுக்கு நிகர் பெண்கள்தான். கம்பராமாயணம் போன்ற இலக்கியங்களிலும் பெண்களின் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் பேச்சின் அழகியலைக் காணமுடிகிறது.

சி.இ.ஓ, ஹெச்.ஆர், பள்ளி ஆசிரியைகள், செவிலியர்கள் ஆகியோர் தங்கள் துறையில் பிரகாசிப்பதற்கு, அவர்களின் சுருங்கச் சொல்லி புரியவைக்கும் கலையே காரணம்!