Published:Updated:

குழந்தையின்மை ஒன்றும் குற்றம் அல்ல! - ‘குற்றம் 23’ சொல்லும் பாடம்

குழந்தையின்மை ஒன்றும் குற்றம் அல்ல! - ‘குற்றம் 23’ சொல்லும் பாடம்
பிரீமியம் ஸ்டோரி
குழந்தையின்மை ஒன்றும் குற்றம் அல்ல! - ‘குற்றம் 23’ சொல்லும் பாடம்

நிழலும் நிஜமும்பொன்.விமலா

குழந்தையின்மை ஒன்றும் குற்றம் அல்ல! - ‘குற்றம் 23’ சொல்லும் பாடம்

நிழலும் நிஜமும்பொன்.விமலா

Published:Updated:
குழந்தையின்மை ஒன்றும் குற்றம் அல்ல! - ‘குற்றம் 23’ சொல்லும் பாடம்
பிரீமியம் ஸ்டோரி
குழந்தையின்மை ஒன்றும் குற்றம் அல்ல! - ‘குற்றம் 23’ சொல்லும் பாடம்

‘என்ன... கல்யாணமாகி ஒரு வருஷம் முடிஞ்சுடுச்சு... வீட்டுல ஏதும் விசேஷம் இல்லையோ’ என்பதுபோன்ற அக்கம்பக்கத்தினரின் கேள்விகளும்... `ம்... முழுசா மூணு வருஷமாகப் போகுது... எம் மருமக வயித்துல ஒரு புழு பூச்சிகூட இல்லை’ என்பதுபோன்ற மாமியார்களின் அங்கலாய்ப்புகளும் பெருகப் பெருக... செயற்கைக் கருத்தரிப்பு மையங்களின் எண்ணிக்கையும் பலமடங்கு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. 

குழந்தையின்மை ஒன்றும் குற்றம் அல்ல! - ‘குற்றம் 23’ சொல்லும் பாடம்

எதையுமே வியாபாரமாகவே பார்க்கும் யுகம் இது என்பதால், சில செயற்கைக் கருத்தரிப்பு மையங்களில் விதிமீறல்களும் கட்டண வசூலும் கணக்கில் அடங்காமல் உயர்ந்து கொண்டே இருக்கின்றன. இந்த உயிர் பிசினஸை நிஜம் மற்றும் நிஜத்துக்கு நெருக்கமான கற்பனையுடன் கலந்துபேசி, கதிகலங்க வைத்திருக்கிறது ‘குற்றம் 23’ திரைப்படம்.

செயற்கைக் கருத்தரிப்பில் பல வகைகள் உண்டு. அதில் விந்தணுவை ஊசி மூலமாகச் செலுத்தும் தொழில்நுட்பத்தின் மூலம் குழந்தைகள் பெற்றுக் கொள்வதில் நடக்கும் குளறுபடிகள்தான் இந்தக் கதையின் கரு. அறிவழகன் இயக்கத்தில் அருண்விஜய், மஹிமா நம்பியார் நடிப்பில் அண்மையில் வெளியாகியிருக்கிறது, இந்த க்ரைம் த்ரில்லர். `குழந்தைகள் இல்லாத பெற்றோரைப் பற்றித்தான் இங்கே பலரும் கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறோம். பெற்றோர் இல்லாத குழந்தைகளைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை’ என குழந்தைகளைத் தத்தெடுக்கச் சொல்லும் மெசேஜையும் அழுத்தமாகப் பதிவு செய்கிறது படம்.

முன்பெல்லாம் குழந்தை வேண்டும் என அரச மரம் சுற்றியவர்கள், இப்போது கருத்தரிப்பு மையங்களை வலம் வருகிறார்கள். புகுந்தவீட்டினரின் நெருக்கடி, அக்கம்பக்கத்தாரின் ஏளனம் எல்லாம் சேர்ந்து துரத்த, `எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை... குழந்தைப் பாக்கியம்தான் முக்கியம்’ என்கிற மனநிலைக்குத் தள்ளப்படுகிறார்கள் பலரும். இதையே முதலீடாகக்கொண்டு காசு பார்க்கத் துடிக்கும் கருத்தரிப்பு மையங்களையும், இந்த மையங்கள் கேட்கும்போதெல்லாம் பணத்தையும் கொட்டிக்கொடுத்து, உடலையும் வருத்திக்கொள்ளும் தம்பதிகளையும் கேள்வி கேட்கும் `குற்றம் 23’ திரைப்படம், க்ரைம் கதை மன்னன் ராஜேஷ்குமாரின் நாவலைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது. திரைக்கதைக்குத் தன் முழு பலத்தையும் சேர்த்திருக்கும் நாவலாசிரியர் ராஜேஷ்குமாரிடம் பேசினோம்.

``நான் எழுதிய ‘எண்ணி எட்டாவது நாள்’ நாவலையும், என்னுடைய மற்ற சில நாவல்களையும் சேர்த்துதான் `குற்றம் 23’ படத்துக்கான திரைக்கதையை எழுத ஆரம்பித்தேன். செயற்கைக் கருத்தரிப்பு மையங்களில் நடக்கும் சட்டபூர்வமான மற்றும் சட்டத்துக்குப் புறம்பான செயல்கள் குறித்து நான் விசாரித்த தகவல்களின் அடிப்படையில் திரைக்கதையை வடிவமைத்தேன்’’ என்கிறவர், கதைக்கான முடிச்சை எங்கிருந்து பெற்றார் என்பதையும் பகிர்கிறார்.

``இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம்... கோவையில் இயங்கும் கருத்தரிப்பு மையம் அது. குழந்தை இல்லை என்று சொல்லி அங்கு சென்ற ஒரு தம்பதி, கருத்தரிப்பதற்கான சிகிச்சைகளை எடுத்துள்ளனர். சம்பந்தப்பட்ட பெண்ணிடம் கருத்தரிப்பதற்காகப் போடப்படும் ஊசிக்காக ஒவ்வொரு முறையும் 75 ஆயிரம் ரூபாய் பெற்றுள்ளனர். குறிப்பிட்ட இடைவெளியில் ஐந்து  மாதங்கள் வரை அந்த ஊசியைப் போட வேண்டும் என்றும் மருத்துவமனையில் சொல்லி இருக்கிறார்கள். அதை நம்பி 3 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் செலவு செய்து ஐந்து ஊசிகள் போட்டுள்ளனர். சில காலம் கழித்து அந்தப் பெண்ணுக்கு மாதவிடாய் நின்றுபோக, மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்திருக்கிறார். அவர் கர்ப்பம் அடைந்ததாக மருத்துவமனையில் கூற... எல்லோருக்கும் சந்தோஷம். கர்ப்பம் என்று மருத்துவமனை சொன்னாலும் வாந்தி, மயக்கம் போல எந்த அறிகுறியுமே இல்லை. சில நாள்களிலே அந்தப் பெண்ணுக்கு மாதவிடாய் நிகழ்ந்துவிட... பதறிப் போய் கேட்டதற்கு, அபார்ஷன் ஆகிவிட்டதாக அலட்சியமாகச் சொல்லியிருக்கிறார்கள் மருத்துவமனையில். ஆனால், மாதவிடாய் தள்ளிப் போவதற்கான ஊசியைப் போட்டு தன்னை ஏமாற்றியிருப்பதாக அந்தப் பெண் உறவினர்களிடம் சொல்லி அழுதிருக்கிறாள். இந்தச் சம்பவம் குறித்த தகவல் என் காதுக்கு வர, அதையே அடிப்படையாக வைத்துதான் ‘எண்ணி எட்டாவது நாள்’ நாவலை எழுதினேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குழந்தையின்மை ஒன்றும் குற்றம் அல்ல! - ‘குற்றம் 23’ சொல்லும் பாடம்

என்னுடைய கதைகளைப் படிக்கும் வழக்கம் உள்ள இயக்குநர் அறிவழகன்,  மருத்துவம் சார்ந்த த்ரில்லர் கதையைத் திரைப்படமாக எடுக்கலாம் என்று என்னிடம் பேசினார். அவர் கேட்டது போலவே என்னிடம் இருந்த அறிவியல் சார்ந்த பத்து கதைகளைக் கொடுத்தேன். அத்தனை கதைகளுமே பிடித்திருப்பதாகக் சொன்னார். நானும் அவரும், அவருடைய உதவி இயக்குநர்களுடன் சேர்ந்து தொடர்ந்து ஆலோசித்தோம். முழுமையான திரைக்கதை உருவானது'’ என்கிற ராஜேஷ்குமார், திரைக்கதை வலியுறுத்தும் வாழ்வியல் பாடம் குறித்தும் சொல்லத் தவறவில்லை.

‘`இந்தத் திரைப்படத்தில் செயற்கைக் கருத்தரிப்பு மூலமாகக் கருத்தரிக்கும் பெண்களுக்கு கணவனின் விந்தணுக்களைச் செலுத்தாமல், பணத்துக்காக வேறு ஒருவரின் விந்தணுக்களை மாற்றிச் செலுத்துவதாகக் காட்சிகள் வடிவமைக்கப்படிருக்கும். அதற்குக் காரணமாக சைக்கோ ஒருவனையும் வில்லனாகச் சேர்த்திருக்கிறார்கள். படத்தில் சேர்க்கப்பட்டிருக்கும் இந்தப் பகுதி கற்பனை என்றாலும், செயற்கைக் கருத்தரிப்பு மையங்களுக்குச் சென்று பலர் பணத்தை வீணாக்கிக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் படம் சொல்லும் பாடம். ஒரு விபத்து நடந்தால் முகம் தெரியாத நபரின் ரத்தத்தை உடலில் செலுத்திக்கொள்கிறோம். உறுப்புமாற்று அறுவைச் சிகிச்சைகள் செய்துகொள்கிறோம். அப்போதெல்லாம் அடுத்தவருடையது என யோசிப்பதில்லை. ஆனால், குழந்தை என்று வரும்போது மட்டும், அது சொந்தக் குழந்தையாக இருக்க வேண்டும் என்று யோசிக்கிறோம். இதுதான் நம்முடைய மரபாக இருக்கிறது.

ஒரு குழந்தையை உயிராக மதிப்பதுதான் அவசியமே தவிர, இயற்கைக்கு மாறாக உடலை கெடுத்துக்கொண்டு பணத்தை செலவு செய்வதெல்லாம் தேவையற்றது. ஒருமுறை  ஆதரவற்றோர் இல்லத்துக்குப் போயிருந்தேன். அங்கே நிறைய குழந்தைகள் அரவணைப்புக்கு ஆளில்லாமல் ஏங்குவதைப் பார்க்க முடிந்தது. இல்லாத குழந்தைக்காக ஏங்கும் யாரும், கண்முன்னே இருக்கும் இதுபோன்ற குழந்தைகளைப் பற்றி யோசிப்பதே இல்லை. இதுபோல நான் சந்தித்த சில விஷயங்களை சேர்த்து திரைக்கதையாக சொன்னேன். அதை சிதையாமல் உருவாக்கி விழிப்பு உணர்வு திரைப்படமாக்கிக் கொடுத்த இயக்குநர் அறிவழகனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்’’

கருத்தரிப்பு மையங்கள் நோக்கி படையெடுப்பவர்கள், உஷாராக இருக்க வேண்டும். அதோடு, சிறார் இல்லங்களையும் மனதில் கொண்டால் அதுவே இப்படத்துக்கான வெற்றியாக இருக்கும்!''

ராஜேஷ்குமார் சொன்ன குட்டி நிஜக்கதை!

குழந்தையின்மை ஒன்றும் குற்றம் அல்ல! - ‘குற்றம் 23’ சொல்லும் பாடம்

ல கோடிகளுக்குச் சொந்தக்காரர் என் நண்பர். அவரும் நானும் ஒருமுறை ஊட்டிக்கு காரில் சென்றுகொண்டிருந்தோம். வழியில் திடீரென காரை நிறுத்திய டிரைவர், ``சார், ரொம்ப பசிக்குது சாப்பிட்டுட்டு வண்டியை ஓட்டட்டுமா?’'னு கேட்டார். வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு ஒரு சின்ன ஹோட்டலில் பரோட்டாவை வாங்கி அதை அவசர அவசரமாக சாப்பிட ஆரம்பித்தார். அவர் சாப்பிடுவதையே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த என் நண்பரை கவனித்துக்கொண்டிருந்தேன். ``என்கிட்ட கோடிக்கணக்குல பணம் இருக்கு. ஆனா, உப்பில்லாத அரை டம்ளர் கஞ்சிதான் என்னோட காலை உணவு. அரைவேக்காடு காய்கறிகள்தான் மதிய உணவு. எவ்வளவு பணம் இருந்தாலும் வயிறு நிறைய சாப்பிட முடியலையே! விருப்பமான உணவை சாப்பிட்டுட்டு சந்தோஷமா வாழறவன்தான் மனுஷன்’'னு நண்பர் சொன்னதில்தான் எத்தனை உண்மைகள்!

ஆரோக்கியமான வாழ்க்கைதான் முக்கியமே தவிர, சொத்துக்காக வாரிசு தேவை என்று மனதையும் உடம்பையும் கெடுத்துக்கொள்வது அவசியமா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism