Published:Updated:

30 நாள் அவள் சேலஞ்ச் - சவால்கள் சாதிப்பதற்கே!

30 நாள் அவள் சேலஞ்ச் - சவால்கள் சாதிப்பதற்கே!
பிரீமியம் ஸ்டோரி
30 நாள் அவள் சேலஞ்ச் - சவால்கள் சாதிப்பதற்கே!

30 நாள் அவள் சேலஞ்ச் - சவால்கள் சாதிப்பதற்கே!

30 நாள் அவள் சேலஞ்ச் - சவால்கள் சாதிப்பதற்கே!

30 நாள் அவள் சேலஞ்ச் - சவால்கள் சாதிப்பதற்கே!

Published:Updated:
30 நாள் அவள் சேலஞ்ச் - சவால்கள் சாதிப்பதற்கே!
பிரீமியம் ஸ்டோரி
30 நாள் அவள் சேலஞ்ச் - சவால்கள் சாதிப்பதற்கே!

ஃபிட்னஸ் என்பது வாழ்க்கையில் அனைவரும் பின்பற்றவேண்டிய ஓர் ஆரோக்கிய வழிமுறையே..! ஆனால், இந்தியாவில்  பெண்களில் பெரும்பாலானோர் இதை உணரவே இல்லை எனலாம். இதற்கு விழிப்பு உணர்வு ஊட்டும் வகையில் அவள் விகடன் சேலஞ்ச் நிகழ்வில் பங்கெடுத்திருக்கிறார் பெங்களூரு வாசகி வித்யா குருமூர்த்தி.

30 நாள் அவள் சேலஞ்ச் - சவால்கள் சாதிப்பதற்கே!

ஸும்பா (Zumba) என்கிற நடன உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளரான இவர், மாரத்தான் போன்ற தொடர் ஓட்டங்களில் பங்கெடுப்பவர். வித்யா எடுத்துக்கொண்ட சவாலின் முக்கியமான இரண்டு அம்சங்கள்...

* 30 நாள்களும் விதம்விதமான உடற்பயிற்சிகளை முயல்வது.


* தான் செய்வதோடு, பிறரையும் செய்யவைப்பது.


இந்தச் சவால் பயண அனுபவத்தை அவரே பகிர்கிறார்...

``30 நாள்கள் தொடர்ந்து பலவிதமான உடற்பயிற்சிகளைச் செய்தேன். அதோடு, நூற்றுக் கும் அதிகமானவர்களுக்கு இப்பயிற்சிகளைக் கற்றுக்கொடுத்து, அவர்கள்  தொடர்ந்து செய்யும் வகையில் ஆலோசனையும் வழங்கினேன். அந்தப் பயிற்சிகள் பற்றிய ஓர் அறிமுகம் இதோ..

குழுப்பயிற்சிகள் (Group Exercise)

உடற்பயிற்சி செய்யும் நேரத்தையும் உழைப்பையும் மறக்கச்செய்யும் அளவுக்கு ஆரோக்கியமான போட்டி நிறைந்த, குதூகலம் நிரம்பியதாக இருப்பவை குழுப்பயிற்சிகள். இவை
பெரும்பாலும் இசை மற்றும் நடன அசைவுகள் இணைந்த உடற்பயிற்சி முறையாகவே இருக்கும். ஸும்பா, ஏரோபிக்ஸ் (Aerobics) போன்றவை இதுபோன்ற கார்டியோ வாஸ்குலர் (Cardio vascular) வகையைச் சேர்ந்தவை. நடத்தல், ஓடுதல், நீந்துதல், சைக்கிளிங் போன்றவையும் கார்டியோ வகை உடற்பயிற்சிகளே. இந்தப் பயிற்சிகள் நமது இதய வலிமை, உடல் தோற்றம், மூளை - உடல் ஒத்திசைவு போன்றவற்றை மேம்படுத்தும். என் சேலஞ்ச் திட்டத்தில் 50% முக்கியத்துவம் குழுப் பயிற்சிகளுக்கே.

வலிமையாக்குதல் (strengthening)

இதயம் மட்டும் திறன் பெற்றால் போதுமா? மற்ற பாகங்களும் வலிமை பெற வேண்டும் அல்லவா? அதற்கான உடற்பயிற்சிதான் `வெயிட் ட்ரெய்னிங்'. பெண்களுக்கு எடை தூக்கும் பயிற்சிகள் மிகவும் அவசியம். எடை என்றால் 20 கிலோ தூக்க வேண்டும் என நினைத்துப் பின்வாங்க வேண்டாம். 3 - 5 கிலோ வரை நம் திறனுக்கு ஏற்றாற்போல எடுக்கலாம். குழந்தையைத் தூக்குதல், கடையில் இருந்து சாமான்களைச் சுமந்து வருதல், இருசக்கர வாகனம் ஓட்டும்போது பேலன்ஸ் செய்தல் போன்ற  அன்றாட விஷயங்களை லாகவமாகவும் திறமையாகவும் அயற்சி இல்லாமலும் செய்ய வெயிட் ட்ரெய்னிங் உதவும்.

தோள், புஜம், முதுகு, நெஞ்சு, இடுப்பு, தொடை, பின்புறம், கால்கள் என்று தனித்தனி பாகங்களை வலிமையாக்க எடைப் பயிற்சி மிக அற்புதமான வழி. வாரத்தில் மூன்று நாள்கள் வெயிட் ட்ரெய்னிங் மேற்கொள்வது நலம். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

30 நாள் அவள் சேலஞ்ச் - சவால்கள் சாதிப்பதற்கே!

யோகா

அதிக எடைகொண்ட பெண்களின் சாய்ஸ் யோகா. அதைச் செய்வது எளிதல்ல. முறைப்படி செய்தால் உடலின் உறுதி மற்றும் நெகிழ்வுத் தன்மை அதிகரித்து நல்ல பலன் கொடுக்கும்.

உணவுப் பழக்கம்

முறையான உடற்பயிற்சியோடு ஆரோக்கிய மான உணவுப் பழக்கமும் உடலை நல்ல முறையில்  பாதுகாக்க அவசியம். எடைக் குறைப்புக்கான டயட்டைப் பின்பற்றி, சிறிது காலம் கழித்து விட்டுவிட்டால், திரும்பவும் எடை ஏறிவிடும். அப்படி ஏறாமல் பாதுகாக்க உடற்பயிற்சி அவசியம்!''

சாதனைப் பெண் ஆகணுமா?

சவாலைச் சந்தியுங்கள்!


• `அவள் சேலஞ்ச்’ வாசகிகள் தங்கள் செயல்பாடுகளை ‘அவள் விகடன் ஃபேஸ்புக்’ இன்பாக்ஸுக்கு அனுப்பி வையுங்கள். அதோடு, அவரவர் ஃபேஸ்புக் பக்கத்திலும் #avalvikatanchallenge என்கிற ‘ஹேஷ்டேக்’ உடன் பதிவு செய்யுங்கள்.

• ‘அவள் சேலஞ்ச்’சில் பங்கேற்க விருப்பமா? ‘அவள் விகடன் ஃபேஸ்புக் இன்பாக்ஸ்’ அல்லது ‘aval@vikatan.com’ என்கிற மின்னஞ்சலில் அல்லது 044-2854 3300 என்கிற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளுங்கள்.

• `அவள் சேலஞ்ச்’ நிகழ்ச்சியில் பங்கேற்கிற மற்ற வாசகிகள் என்ன செய்கிறார்கள்? அடுத்தடுத்த இதழ்களில் அறிவோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism