Published:Updated:

மொழி - ஒரு சொல்லே போதும்!

மொழி - ஒரு சொல்லே போதும்!
பிரீமியம் ஸ்டோரி
மொழி - ஒரு சொல்லே போதும்!

தீபா ராம்

மொழி - ஒரு சொல்லே போதும்!

தீபா ராம்

Published:Updated:
மொழி - ஒரு சொல்லே போதும்!
பிரீமியம் ஸ்டோரி
மொழி - ஒரு சொல்லே போதும்!

சில விஷயங்களை உணரத்தான் முடியுமே தவிர, வார்த்தைகளில் விவரிப்பது மிகவும் கடினம். அது போலவேதான் உணர்ச்சிபூர்வமான சில ஆங்கில வார்த்தைகளின் அர்த்தங்களும். அப்படி அற்புதமான உணர்வுகளை உள்ளடக்கிய சில ஒற்றைச் சொற்கள் இதோ.. 

மொழி - ஒரு சொல்லே போதும்!

Simon-Pure

ஒரு பொருளின் கலப்படமற்ற உன்னதமான தன்மையைக் குறிக்க அக்மார்க், ஐ.எஸ்.ஐ முத்திரை போன்றவற்றைப் பயன்படுத்துகிறோம். அதுபோல மிகவும் நேர்மையான, உண்மையான, இயல்பான விஷயங்களை (அல்லது மனிதர்களை) `மிகவும் நம்பகமானது’ எனச் சொல்வதற்குப் பயன்படுத்தும் சொல்தான் Simon-Pure.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மொழி - ஒரு சொல்லே போதும்!

Querencia

உலகத்தைச் சுற்றினாலும் கடைசியில் சொந்த வீட்டுக்குள் நுழையும்போது கிடைக்கும் நிம்மதியும் சந்தோஷமும் இருக்கிறதே... அந்த உணர்வுக்கு ஈடு இணையே இல்லை. எங்கே நாம் அதிக உரிமையுடன் சுதந்திரமாக இருக்கிறோமோ, அந்த இடத்துக்குப் பெயர்தான் இந்தச் சொல். நாம் குடியிருக்கும் வீடுதான் நமக்கெல்லாம் Querencia.

மொழி - ஒரு சொல்லே போதும்!

Videnda

நேரில் பார்த்தால்தான் சில விஷயங்கள் நன்றாகப் புரியும்... உணரவும் முடியும். அப்படிப்பட்ட இடத்தையோ, மனிதர்களையோ குறிக்கும் பெயர்தான் Videnda.

Kilig

அட... இதுபோல தமிழில்கூட ‘கிளுகிளுப்பு’ என்றொரு சொல் இருக்கிறதே... காதல் உணர்வுகளைத் தூண்டும் விஷயங்களைப் பார்க்கும்போதோ படிக்கும்போதோ ஏற்படும் ஒருவிதக் களிப்பு - அதாவது `செம குஷி’ மனநிலைக்குப் பெயர்தான் Kilig.

மொழி - ஒரு சொல்லே போதும்!

Tacenda

சில உண்மைகளைச் சொல்வதைவிட சொல்லாமல் இருப்பதே மேல் என்று நினைப்போம். அது போலவே, அமைதியாக சில நிஜங்களைச் சகித்து, வெளிக்காட்டாமலோ, எதுவும் சொல்லாமலோ இருப்பதுதான் Tacenda.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism