Published:Updated:

தைரியலட்சுமியான ஸ்ரீலட்சுமி!

தைரியலட்சுமியான ஸ்ரீலட்சுமி!
பிரீமியம் ஸ்டோரி
தைரியலட்சுமியான ஸ்ரீலட்சுமி!

மாத்தி யோசியாழ் ஸ்ரீதேவி

தைரியலட்சுமியான ஸ்ரீலட்சுமி!

மாத்தி யோசியாழ் ஸ்ரீதேவி

Published:Updated:
தைரியலட்சுமியான ஸ்ரீலட்சுமி!
பிரீமியம் ஸ்டோரி
தைரியலட்சுமியான ஸ்ரீலட்சுமி!

பொழுதுபோக்கு முதல் தங்கள் தொழிலுக்கான விளம்பரம் வரை, சமூக வலைதளங்களில் இப்போது பெண்கள் பரபரப்பாக இருக்கிறார்கள். பெண் என்றாலே வக்கிர மனம் காட்டும் ஆண்கள், இணையவெளியிலும் அவர்களை அந்த மனநிலையிலேயே அணுகுவது வேதனை. அப்படி, சமீபத்தில் சைபர் க்ரைம் சீண்டலுக்கு ஆளானவர்தான், ஸ்ரீலட்சுமி சதீஷ். ஆனால், குற்றவாளிக்கு அவர் கொடுத்த தண்டனையால், தைரியலட்சுமியாகத் தனித்துத் தெரிகிறார் ஸ்ரீலட்சுமி. 

தைரியலட்சுமியான ஸ்ரீலட்சுமி!

கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீலட்சுமியின் அலைபேசி எண், ‘சூப்பர் அயிட்டம்’ என்ற  அடையாளத்துடன் சமீபத்தில் வாட்ஸ்அப்பில் இணைக்கப்பட்டது. தேசியக் கட்சி ஒன்றின் இளைஞரணி நிர்வாகி யான லோக்கல் அரசியல்வாதி ஒருவர் செய்த விஷமத்தனம் அது. கல்வியாளரான ஸ்ரீலட்சுமியின் அடையாளத்தைச் சிதைக்கும் சவாலுடன், இந்த வேலையை அவர் செய்திருக்க, அதன் விளைவுகளைச் சந்தித்தார் ஸ்ரீலட்சுமி.

தொடர்ந்து ஒலித்த அலைபேசி, காதுகளைக் கூச வைக்கும் வார்த்தைகள், விரும்பத்தகாத வாட்ஸ்அப் தகவல்கள் என வரிசைகட்டிய வக்கிரத் தொந்தரவுகள், ஸ்ரீலட்சுமியின் நிம் மதியைச் சிதைத்தன. வேறு பெண்ணாக இருந் தால், மனஉளைச்சலுக்கு ஆளாகி, அவரின் நிலைமை மோசமாகியிருக்கும். ஆனால், ஸ்ரீலட்சுமி சற்று நிதானமாக யோசித்தார். குறிப்பிட்ட ஒருவர் தொல்லை கொடுத்தால் பரவாயில்லை., எப்படி பல எண்களில் இருந்தும், தன்னைப் பாலியல் தொழிலாளிபோலவே அணுகும் அழைப்புகள் வருகின்றன என்று யோசித்தார்.

தன் அலைபேசிக்கு அழைத்த ஒரு எண்ணை தானே மீண்டும் அழைத்தார் ஸ்ரீலட்சுமி. தான் ஒரு கல்வியாளர் என்பதை அவரிடம் கூறி, ‘எதற்காக இப்படி அநாகரிகமாகப் பேசுகிறீர்கள்?’ என்று கேட்க, அவர் மன்னிப்புக் கேட்டதுடன், ஸ்ரீலட்சுமியின் எண், ‘பாலியல் தொழிலாளியின் எண்’ எனக் குறிப்பிடப்பட்டு வாட்ஸ்அப்பில்  உலா வருவதைத் தெரிவித்தார். கூடவே, அவரின் எண்ணை அப்படி இணைத்து அனுப்பியவரின் அலைபேசி எண்ணையும் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து ஸ்ரீலட்சுமிக்கு அனுப்பி உதவினார். 

ஸ்ரீலட்சுமிக்குக் குற்றவாளி யார் என்பது புரிந்தது. ஊர் என்ன பேசும் என்று பயந்து, தனக்கு நேர்ந்த அநியாயத்தை மூடி மறைக்க நினைக்கவில்லை அவர். மாறாக, குற்றவாளிக்குத் தகுந்த தண்டனை வாங்கித் தருவதில் தீவிரம் காட்டினார். தனக்கு நேர்ந்த மன உளைச்சலையே ஆயுதமாக மாற்றினார். வாட்ஸ்அப்பில் தன்னைப் பற்றி பரப்பப்பட்ட வக்கிரத்தை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து, காவல் துறையில் தக்க ஆதாரங்களுடன் தன் புகாரைப் பதிவு செய்தார். சம்பந்தப்பட்ட நபரை அவர் சார்ந்த கட்சியில் இருந்து நீக்கவும் நெருக்கடி கொடுத்தார்.

அடுத்து என்ன நடந்தது என்பது பற்றி ஒரு பேட்டியில் ஸ்ரீலட்சுமி சொல்லும் போது...

‘`நான் காவல்துறையிடம் கொடுத்த புகாரைத் திரும்பப் பெறச்சொல்லி, குற்றவாளி யின் தந்தை நேரில் வந்து கெஞ்சினார். அதைப் பாராமுகமாகக் கடக்கமுடியாத சூழல் ஏற்பட்டது. ஆனாலும், குற்றவாளியை மன்னிக் கவும் என் மனம் ஒப்பவில்லை. எனவே, செய்த குற்றத்துக்குப் பிராயச்சித்தமாக, அவர்களை ஒரு நல்ல காரியம் செய்யவைக்க நினைத்தேன்.

‘ஏதாவது ஆதரவற்றோர் இல்லம் ஒன்றுக்கு  25 ஆயிரம் ரூபாய் நன்கொடையாகக் கொடுத் தால், புகாரை வாபஸ் வாங்கிக்கொள்கிறேன்’ என்று கூறினேன். அதற்கான ரசீதையும் தர வேண்டும் என்று கேட்டிருந்தேன். குற்றவாளியின் தந்தை, தன் மகன் பெயரில் ‘ஸ்ரீசித்ரா சாரிட்டி ஹோமு’க்கு 25 ஆயிரம் ரூபாய் நன்கொடை அளித்த ரசீதை என்னிடம் அளித்தார். இன்னொரு பக்கம், வக்கிரச் செயலில் ஈடுபட்ட அந்த நபரை, அவர் சார்ந்திருந்த கட்சியில் இருந்து நீக்கிவிட்டனர்’’ என்று தன்னம்பிக்கை தெறிக்கச் சொல்லும் ஸ்ரீலட்சுமி, அந்த ரசீதில் சம்பந்தப்பட்டவரின் பெயரை மட்டும் மறைத்து, அதன் புகைப்படம் மற்றும் நடந்த சம்பவங்களை தன் சமூக வலைதளத்தில் பதிய, தன் தைரியமான, அதே நேரம் நுட்பமான செயலால் நாடெங்கும் பிரபலமானார்.

செய்த குற்றத்துக்குத் தண்டனை பெற்றுத் தரும்போது, அது அவர் மனதில் வன்மத்தை வளர்க்கலாம். பதிலாக, அவரை உதவி செய்யவைக்கும்போது மனமாற்றத்துக்கு வாய்ப் புள்ளது. இதுவே சமூக மாற்றத்துக்கான விதை. தனக்கு எதிராக நடக்கும் குற்றங்களுக்குத் தீர்வுகாணத் துணியும் பெண்களுக்கு, ஸ்ரீலட்சுமி ஒரு தைரியலட்சுமி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!