Published:Updated:

ஓலைச்சுவடிகளைத் தேடி ஊர் ஊராக அலைகிறார்!

ஓலைச்சுவடிகளைத் தேடி ஊர் ஊராக அலைகிறார்!
பிரீமியம் ஸ்டோரி
ஓலைச்சுவடிகளைத் தேடி ஊர் ஊராக அலைகிறார்!

களத்தில் பெண்கள்துரை.வேம்பையன் - படங்கள்: ஆர்.புஷ்பலதா

ஓலைச்சுவடிகளைத் தேடி ஊர் ஊராக அலைகிறார்!

களத்தில் பெண்கள்துரை.வேம்பையன் - படங்கள்: ஆர்.புஷ்பலதா

Published:Updated:
ஓலைச்சுவடிகளைத் தேடி ஊர் ஊராக அலைகிறார்!
பிரீமியம் ஸ்டோரி
ஓலைச்சுவடிகளைத் தேடி ஊர் ஊராக அலைகிறார்!

ப்போதைய  இளைய தலைமுறையிடம் `ஜெயகாந்தன், சுஜாதா' என்று ஆரம்பித்தாலே, அதைக் கவனிக்காதபடி, ஃபேஸ் புக்கிலோ வாட்ஸ்அப்பிலோ தலையைக் கவிழ்த்துக் கொள்கிறார்கள். ஆனால், ஜெர்மனியில் ஐ.டி துறையில் இருக்கும் சுபாஷிணி, உலகம் முழுக்க உள்ள பழைமையான ஓலைச்சுவடிகள், தொன்மையான இலக்கியம் மற்றும் வரலாற்றுச் சான்றுகள் போன்ற வற்றை மின் ஆக்கம் செய்து ஆவணப்படுத்தும் மகத்தான காரியத்தில் இறங்கியிருக்கிறார். இதுவரை 86 ஆயிரம் பழைமையான ஓலைச்சுவடி களைச் சேகரித்து மின் ஆக்கம் செய்து, அவற்றை தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக் கழகத்தில் காட்சிப்படுத்துவதற்காக வழங்கியிருக்கிறார்.

ஓலைச்சுவடிகளைத் தேடி ஊர் ஊராக அலைகிறார்!

ஐ.டி துறையில் பரபரப்பான பணிகள் இருந்தாலும், இதற்காகவே ஆண்டுக்கு 40  நாள்கள் இந்தியாவுக்கு வருகிறார் சுபாஷிணி. சமூக வலை தளங்கள் மூலம் அறிமுகமான தன்னார் வலர்கள் உதவியோடு ஓலைச்சுவடிகள் சேகரிப்பு, புராதன சின்னங்களைக் காட்சிப்படுத்துதல் என்று களப் பணிகளில் இறங்கி விடுகிறார். சமீபத்தில் கரூருக்கு வந்த அவரைச் சந்தித்தோம்.

“எப்படி ஓலைச்சுவடி மீது ஆர்வம் வந்தது?”

“எங்கப்பாவுக்குப் பூர்வீகம் நாகப் பட்டினம் மாவட்டம். எங்க முன்னோர் இரு தலைமுறைகளுக்கு முன்பே மலேசியாவில் செட்டிலா கிட்டாங்க. அங்கேதான் நான் பிறந்தேன். எங்கம்மாவும் அப்பாவும் நல்லா தமிழ் பேசுவாங்க. ஆனால், எனக்கு இருபது வயது வரை ஓரளவுக்குத்தான் தமிழ் தெரியும். மலேசியாவிலேயே படித்தேன். ஜெர்மனியில் உள்ள பெரிய நிறுவனத்தில் `லீட் ஐ.டி ஆர்க்கிடெக்ட்' என்கிற வேலை கிடைச்சது. சம்பளம் அதிகம் என்றாலும், ஒரே மாதிரி வேலை பார்ப்பது போர் அடிச்சது. அதனால், விடுப்பு எடுத்துக்கிட்டு வருஷத்துக்கு ரெண்டு முறை பல நாடுகளுக்கும் சுற்றுலா போய் வந்தேன். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஓலைச்சுவடிகளைத் தேடி ஊர் ஊராக அலைகிறார்!

ஒருகட்டத்துல அதுவும் சலிக்க ஆரம்பிச்சது. அதனால, சோஷியல் வொர்க் பண்ணலாமானு யோசிச்சேன். அந்தச் சூழலில், ஒருமுறை டென்மார்க் தலைநகரான கோபன்ஹேகன்  சென்றேன். அங்குள்ள அரசு நூலகத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த  பழைமையான ஓலைச்சுவடிகளைப் பார்த்து  ஆச்சர்யமாகிட்டேன். அங்கே முந்நூறு ஆண்டுகால பழைமைவாய்ந்த ஓலைச்சுவடிகளையும் மின் ஆக்கம் செய்து பாதுகாக்கிறாங்க. இதுபோலவே, ஐரோப்பா முழுக்க வரலாற்றுச் சான்றுகள், பழமையான விஷயங்கள் பொக்கிஷமாகவே பாதுகாக்கப்படுகின்றன.

எங்கம்மா ஜனகா, மலேசியாவில் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். அவரிடம் இதுபற்றிப் பேசினேன். `நீ தமிழ் ஓலைச்சுவடிகளைச் சேகரித்து, மின் ஆக்கம் செய்யலாமே’ன்னு   அம்மாதான் யோசனை சொன்னாங்க. அதுவரை, தமிழ் மீது பெரிய ஈடுபாடு இல்லாமல் இருந்த நான், அதன்பிறகு தமிழ் ஓலைச்சுவடிகளைச் சேகரிக்க முடிவெடுத்தேன்” என்பவரின் பயணம் அதன் பிறகு முழுமையாகவே மாறிப்போயிருக்கிறது.

‘`2000-ம் ஆண்டு `தமிழ்மரபு அறக்கட்டளை' என்கிற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தைத் தொடங்கி, மலேசியாவிலும் தமிழ்நாட்டிலும் பதிவு செய்தேன். ஓலைச்சுவடிகளைக் கண்டறிந்து, அவற்றை மின் ஆக்கம் செய்வது, அவற்றில் உள்ள தகவல்களுக்கான விளக்கங்களைப் பெறுவது, அப்படிச் செய்ததை வழக்கு தமிழுக்கு ஏற்ப மாற்றி வெளியிடுதல் போன்றவற்றைதான் எங்கள் அமைப்பு செய்து வருகிறது. எங்கள் நோக்கம் பற்றியும் சமூக வலைதளங்களில் பதிவு செய்தேன். அதைப் பார்த்துவிட்டு, உலகின் பல பகுதிகளில் வாழும் தமிழ்ப் பற்றாளர்கள் எங்களோடு இணைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் பல பள்ளி, கல்லூரி நிகழ்ச்சிகளில் ஓலைச்சுவடிகளைச் சேகரித்தல், பாதுகாத்தல் பற்றிப் பேசி வருகிறேன். ஆரம்பத்தில் ஏதோ புரியாத விஷயத்தைக் கேட்பது போலவே மாணவர்கள் குழம்பிப் போனார்கள். அடுத்தடுத்து விளக்கிய பிறகுதான் என் எண்ணம் அவர்களுக்குப் புரிந்தது'' என்கிறவர், 120-க்கும் அதிக கல்லூரிகளில் விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறார்.

``இதுவரை 86 ஆயிரம் ஓலைச்சுவடிகளைச் சேகரித்து வைத்திருக்கிறேன். அவற்றை யெல்லாம் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் மூலமாக மின் ஆக்கம் செய்துவிட்டோம். தவிர, பத்தாயிரம் ஓலைச்சுவடிகளைத் தனியார் அமைப்புகள் மூலமாகவும் மின் ஆக்கம் செய்திருக்கிறோம்” என்கிற சுபாஷிணி,  தமிழ்நாட்டில் சிவகங்கை, மணலூர், மதுரை மற்றும் குமாரப்பாளையம் போன்ற இடங்களில் ஓலைச்சுவடி மியூஸியங்கள் தொடங்கியிருக்கிறார். 

ஓலைச்சுவடிகளைத் தேடி ஊர் ஊராக அலைகிறார்!

‘`இதுவரை நாங்கள் சேகரித்தவற்றில் 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணர் நூல்  உள்பட அபூர்வமான பொக்கிஷங்கள் உள்ளன. 14 அல்லது 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த `கப்பல் கட்டும் சாஸ்திரம்', பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த `அடிமை சாசனம்' (குடும்ப உறுப்பினர்களை அடிமையாக விற்பது) உள்பட பல அரிய விஷயங்களளும் கிடைத்தன. அத்தனையையும் மின் ஆக்கம் செய்து ஆவணப்படுத்திவிட்டோம்.  திருப்பாச்சி அரிவாள், கீழவளவு கல்வெட்டுகள், சித்திரங்கள், சோழர்காலக் கோயில்கள், தாராசுரம் கோயில் சிற்பங்கள், கங்கைகொண்ட சோழபுரம் கோயில் எனப் புராதன சின்னங்களையும் காட்சிப்படுத்தி, மின் ஆக்கம் செய்திருக்கிறோம்'' என்கிறவருக்கு  ஓலைச்சுவடி சேகரிப்பின்போது வித்தியாசமான பல அனுபவங்கள் கிடைத் திருக்கின்றன. அதிர்ச்சியான சம்பவங்களும் நிகழ்ந்திருக்கின்றன.

‘‘ஓலைச்சுவடி இருக்கு... நாளைக்கு வாங்க'ன்னு சொன்னாங்க. அடிச்சுப் பிடிச்சுப் போய் வாங்கினால், பொலபொலவென உதிர்ந்துபோனது. ‘ரொம்ப அழுக்கா இருந்துச்சு. அப்படியே கொடுத்தா நாகரிகமா இருக்காதுன்னு சோப்பு போட்டுக் கழுவிக் காய வைச்சேன்’னு சம்பந்தப்பட்டவர் சொன்னபோது, எங்களுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. இன்னொருவர் சுவடியின் மதிப்பு தெரியாமல் வீட்டுக் கூரையில் செருகி வைத்திருந்தார். `அதை வச்சு என்ன பண்ண? அதான் எரிச்சுட்டோம்' என்று சொன்னவர்களும் கூட இருக்கிறார்கள்'' என்கிறவரின் பத்திரப்படுத்துதல் எண்ணம், இச்சம்பவங்களுக்குப் பிறகே அதிகமாகி இருக்கிறது.

‘`ஒற்றை ஓலைச்சுவடியைக்கூட அழிய விடாமல் பாதுகாத்து, அடுத்த தலைமுறைக்கு ஆவணப்படுத்திவிட்டுப் போகணும்கிறதுதான். என்னோட இலக்கு. இந்தத் தலைமுறையினர் தமிழ் மேல ஈடுபாடு இல்லாம வளர்றாங்க. அது வருத்தமா இருக்கு. அதை மாற்ற ஒரே வழி பள்ளி, கல்லூரிகளில் விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவதுதான். அதனால், என்னை இனி நீங்கள் பள்ளி, கல்லூரி விழாக்களில் அடிக்கடி பார்க்கலாம்... வாருங்கள்” என்று கைகூப்பி விடை கொடுக்கிறார் சுபாஷிணி.