Published:Updated:

அவள் கிளாஸிக்ஸ் - நெஞ்சில் தளும்பும் நினைவுகள்!

அவள் கிளாஸிக்ஸ் - நெஞ்சில் தளும்பும் நினைவுகள்!
பிரீமியம் ஸ்டோரி
அவள் கிளாஸிக்ஸ் - நெஞ்சில் தளும்பும் நினைவுகள்!

அவள் கிளாஸிக்ஸ் - நெஞ்சில் தளும்பும் நினைவுகள்!

அவள் கிளாஸிக்ஸ் - நெஞ்சில் தளும்பும் நினைவுகள்!

அவள் கிளாஸிக்ஸ் - நெஞ்சில் தளும்பும் நினைவுகள்!

Published:Updated:
அவள் கிளாஸிக்ஸ் - நெஞ்சில் தளும்பும் நினைவுகள்!
பிரீமியம் ஸ்டோரி
அவள் கிளாஸிக்ஸ் - நெஞ்சில் தளும்பும் நினைவுகள்!
அவள் கிளாஸிக்ஸ் - நெஞ்சில் தளும்பும் நினைவுகள்!

ந்தை மரணப் படுக்கையில் இருக்கும் போது, அவருக்கான எத்தனையோ விதமாகப்  பிரார்த்தனைகள் செய்வார்கள் பெண்கள். ஆனால், வறண்டு கிடந்த ஒரு கோயில் குளத்தைத் தன் தந்தைக்காக தூர்வாரி, லாரி லாரியாக தண்ணீர் அடித்து நிரப்பியிருப்பது நிஜமாகவே வித்தியாசமானதுதான்.

அந்த அன்பு மகள் நடிகர் ஜெமினி கணேசனின் மூத்த மகள், டாக்டர் கமலா செல்வராஜ்.

‘இப்படியொரு தந்தை பாசமா?’ என்கிற வியப்பு உலுக்க, கமலாவைச் சந்தித்துப் பேச, சென்னை - நுங்கம்பாக்கத்திலுள்ள அவரது மருத்துவமனைக்குச் சென்றோம். தந்தையை இழந்த துயரில் அழுது அழுது அவரது கண்களும் முகமும் வீங்கியிருந்தன.

ஆறுதலாக சில வார்த்தைகள் சொல்லி விட்டு, அவரது அந்தப் பிரார்த்தனை பற்றி பேச்செடுத்தோம். புடவை முந்தானையால் முகத்தை துடைத்துக் கொண்டு, மெள்ள ஆரம்பித்தார்.

‘`சின்னக் கொழந்தையா இருந்தப்பலேர்ந்து, பாட்டி கை பிடிச்சிட்டு நாங்க போன கோயில், நுங்கம்பாக்கத்தில் இருக்கற அந்த பிரசன்ன வெங்கடேச அகஸ்தீஸ்வரர் கோயில். பரீட்சைன்னா அங்க போய்தான் பிள்ளையாரை நூத்தியெட்டு சுத்துச் சுத்து வோம். இருபது வருஷமா அந்தக் குளத்தில தண்ணியே இல்லாம வற்றி, வறண்டு கிடந்தது. முள்ளுச் செடியா முளைச்சு மண்டியிருந்தது.

அவள் கிளாஸிக்ஸ் - நெஞ்சில் தளும்பும் நினைவுகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘உடம்பு சரியில்லாம இருக்கற நம்ம அப்பாவுக்கான ஒரு பிரார்த்தனையா நாம் ஏன் இந்தக் குளத்தை சுத்தம் செய்து, தண்ணீர் நிரப்பக் கூடாது?’னு எனக்குள்ள ஓர்  எண்ணம்... உடனே, கோயில் நிர்வாகத்தை அணுகி, அனுமதி வாங்கினேன்.

முதல்ல முள்ளுச் செடிகளை அகற்றிட்டு, களிமண் அடிச்சு, ரோலர் வச்சு குளத்தோட தரையைச் சமன்படுத்தினோம். ரெண்டு இடத்துல போர் போட்டோம். அதோடு,  ஐம்பது லாரி தண்ணிக்கு ஏற்பாடு செய் தோம். குளத்துல ஓரளவுக்கு தண்ணி நிக்க ஆரம்பிச்சதும், அப்பாவைக் கூட்டிட்டுப் போய்க் காட்டினோம். ‘நம்ம கமலாதான் பண்றா’னு அப்பாகிட்டே அம்மா சொன்னதும், அவர் கண்கள்ல ரொம்ப சந்தோஷம்!’' - சொல்லும்போதே குரல் கம்முகிறது கமலாவுக்கு.

`‘இது நடந்து கொஞ்ச நாள்ல, அப்பாவுக்கு உடம்பு சீரியஸாகி, கடைசில எங்களையெல்லாம் விட்டுப் போயிட்டார்... அவரோட கடைசிக் காரியங்களையும் அந்தக் குளத்திலேயே பண்ற அளவுக்கு தண்ணி இருந்தது ஆச்சர்யம்தான்!’' என்று நெகிழ்கிறார்.

`அப்பா பத்திச் சொல்லுங்களேன்’ என்றதும், உணர்ச்சிவசப்பட்டவராகக் கொட்டத் தொடங்கினார்.

“எவ்வளவோ சொல்லலாம்... அப்பாவுக்கு பெண் குழந்தைகளை சுதந்திரமா, அதே வேளை நம்ம கலாசாரத்தைக் கொஞ்சமும் விட்டுக் கொடுக்காம வளர்க்கணும். அப்படித்தான் எங்களையெல்லாம் வளர்த்தார். எல்லாரையும் நல்லாப் படிக்க வச்சார். ‘பொம்மனாட்டிங்க யாரையும் சார்ந்திருக்கக் கூடாது... தன் கால்ல சுயமா நிக்கணும்’னு அடிக்கடி சொல்வார்.

அம்மா ரொம்ப கண்டிப்பு. ஆனா, அப்பா ரொம்ப ஃபெரண்ட்லி... என்ன வேணாலும் நாங்க அவர்கிட்டதான் கேட்போம். அதுக்காக அநாவசியமா கண்டதையும் வாங்கிக் கொடுத்துட மாட்டார்.

யாரைப் பத்தியும் தப்பாவே பேச மாட்டார். அது அப்பாகிட்டே எனக்கு ரொம்பப் பிடிச்சது.

அவள் கிளாஸிக்ஸ் - நெஞ்சில் தளும்பும் நினைவுகள்!

குரான், பைபிள், மகாபாரதம் - இப்படி எதுபத்தி கேட்டாலும், முன்னே பின்னே தயார் பண்ணாம, மடை திறந்த மாதிரி பேசிட்டே போவார். யோகாசனங்கள் பண்றதில அவர் ஒரு பெரிய வல்லுநர்னு பல பேருக்குத்
தெரியாது.

எங்களுக்கெல்லாம் அவர் சொல்ற அறிவுரை, ‘எப்பவுமே நம்ம குறிக்கோள் சின்னதா இருக்கக் கூடாது. உயர்ந்த விஷயங்களை குறிவெச்சு, அதை நோக்கி முன்னேறணும், முடியாதுன்னு எதுவுமே இல்லை’ங்கிறதுதான்.

அப்பாகூட பீச்ல மார்னிங் வாக் போறதுன்னா, எனக்கு ரொம்ப இஷ்டம். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நானும் அப்பாவும் போவோம். கடற்கரையில காலாற வாக்கிங் போயிட்டு, அவருக்குப் பிடிச்ச ஹோட்டல்ல டிபன் சாப்பிட்டுட்டு வந்துடுவோம். அப்பாவுக்கு உடம்புக்கு முடியாதப்ப அவரை அழைச்சிட்டுப் போக முடியல. அப்பா இல்லாம, நானும் பீச்சுல வாக்கிங் போறதையே விட்டுட்டேன்” என்று கூறிவிட்டு, குழந்தை போல தேம்புகிறார் கமலா.

தனது பேஷண்ட் ஒருவர் மருத்துவமனைக்கு நன்கொடை அளிக்க முன்வந்த போது, அந்தத் தொகைக்கு அப்படியே அகஸ்தீஸ்வரர் கோயில் குளத்தில் தண்ணீர் விடச் செலவிடச் சொல்லி விட்டாராம் கமலா.
மகளின் பாசத்தில், அப்பா தண்ணீராகத் தளும்புவது, கோயில் குளத்தைப் பார்த்தவர் களுக்குப் புரியும்!

- மித்ரா

(அவள் விகடன் ஏப்ரல் 22, 2005 இதழில் வெளியானது)

அவள் கிளாஸிக்ஸ் - நெஞ்சில் தளும்பும் நினைவுகள்!

ஓவியர் கமலா!

குழந்தைப் பேறில்லாத பல இல்லங்களில் சோதனைக்குழாய் மூலம் மழலைகளைத் தவழச் செய்த பிரபல மருத்துவர் என்ற வகையில்தான், ஜெமினியின் மகளான டாக்டர் கமலா செல்வராஜை அனைவருக்கும் தெரியும். அவர் ஒரு பிரமாதமான ஓவியரும்கூட.

வீட்டில், மலர்களுக்கு நடுவே சிரிக்கும் ஜெமினியின் படத்தைக் காண்பித்து, ‘இது நானே வரைஞ்சது!' என்று கமலா சொன்னபோது, மலைத்துவிட்டோம். ஓவியத்திறனும், அப்பாவின் மீதான பாசமும் அவரின் உருவத்தைத் தத்ரூபமாக கொண்டு வந்திருக்கிறது.

`இப்போ வரையறதில்லையா?' என்றபோது, ``கத்தியும் கத்தரிக்கோலுமே பிடிச்சுப் பிடிச்சுப் பழகிப்போன இந்தக் கைகள், தூரிகையைத் தொட்டு ரொம்ப நாளாச்சு... அதுக்கெல்லாம் எங்கே நேரம்?” என்றார், அப்பாவின் படத்தைப் பார்த்துப் பெருமூச்சு விட்டபடி.