சென்னை ஷெனாய் நகரைச் சேர்ந்தவர் ரேணுகா. பிஸியான டெர்மடாலஜிஸ்ட். இவர் கணவர் ராமகிருஷ்ணன் தனியார் நிறுவனத்தில் மேனேஜிங் டைரக்டர். இரண்டு குழந்தைகள். மகன் சந்தோஷ், பி.இ, எம்.பி.ஏ முடித்துவிட்டு சிங்கப்பூரில் பணிபுரிகிறார். மகள் பிரதீபா ,மருத்துவம் படித்துவிட்டு ஹவுஸ் சர்ஜனாகச் செயல்படுகிறார். வீட்டு நிர்வாகம், வேலையோடு நின்றுவிடாமல் சமூக சேவையிலும் பரபரப்பாக இருக்கிறார் ரேணுகா. தொழுநோயாளிகளுக்கு மருத்துவ உதவி அளிப்பது, பின்தங்கிய மக்களுக்கு மருத்துவ முகாம், மார்பகப் புற்றுநோய் விழிப்பு உணர்வு போன்ற பணிகளையும் செய்துவருகிறார். வீட்டு நிர்வாகம், வேலை, சமூகப்பணி என எல்லாவற்றிலும் எப்படி ஜெயிக்கிறார் ரேணுகா? அவரிடமே கேட்போம்.

வேலைகளைக் குறித்த நேரத்தில் முடித்துவிடுவதும், முன்கூட்டியே திட்டமிடுவதும் என் பலம்.

கூட்டுக் குடும்பத்தில் இருந்ததால் என் குழந்தைகளின் வளர்ப்புத் தாயாக இருந்தது மாமியார் ராஜாம்பாள். தாய்ப்பால் கொடுத்தது மட்டுமே நான்... அவர்களுக்கு அன்பையும் பண்பையும் அள்ளிக் கொடுத்து வளர்த்தது என் மாமியார்தான்.

என்னுடைய வேலைகளைப் பகிர்ந்து கொள்வதோடு, குழந்தைகளுடன் நேரம் செலவழிப்பது... தேவையான நேரங்களில் உதவுவது என கணவர் சமபங்கு எடுத்துக் கொண்டதால், குடும்பத்தின் முழுச் சுமையும் என் தலையில் விழவில்லை. பரபரப்புக்கு இடையிலும் நான் ரிலாக்ஸாகவே உணர்ந்தேன்.

குழந்தைகள் வளர்ந்து பள்ளிக்குச் சென்றதும் ஓரளவு நேரம் கிடைத்தது. இந்த நாள்களில் பின்தங்கிய

மக்கள் உள்ள பகுதிகளில் சருமப் பராமரிப்பு குறித்த இலவச மருத்துவ முகாம்கள் நடத்தி விழிப்பு உணர்வு ஏற்படுத்தினேன்.

குழந்தைகள் பள்ளியில் படித்த காலத்தில் என்னிடம் டூவீலர் மட்டுமே இருந்தது. பாட்டு, டான்ஸ், விளையாட்டு என அவர்கள் விரும்பியதெல்லாம் கற்றுக் கொள்ளும் வகையில் ஓடிக்கொண்டே இருப்பேன். எந்த நேரத்தையும் வீணாக்கியதில்லை. மகள் டென்னிஸிலும், பையன் ஹேண்ட் பால் விளையாட்டிலும் நேஷனல் லெவல் பிளேயர்ஸ்.

எவ்வளவு பிஸியாக இருந்தாலும் அரை மணி நேரம் வாக்கிங் அல்லது உடற்பயிற்சியில் ஈடுபடுவேன். இப்போது யோகா செய்கிறேன். அதனால் எப்போதும் ஃப்ரெஷ்ஷாக உணர்கிறேன்.

வீட்டில் எல்லோருக்குமே ஹெல்த்தி உணவுதான். சமையல் பணியில் உதவ ஒரு பணியாளர் இருக்கிறார்.

குடும்பத்தில் பெண்கள் மகிழ்ச்சியாக இருந்தால்தான் மற்ற எல்லோரும் சந்தோஷமாக இருக்க முடியும். பிரச்னையான நேரங்களிலும் பாசிட்டிவ் திங்கிங்தான் எனக்கு எனர்ஜியே.