Published:Updated:

மதுர மண்ணு செய்யுற மாயமப்பு!

மதுர மண்ணு செய்யுற மாயமப்பு!
பிரீமியம் ஸ்டோரி
மதுர மண்ணு செய்யுற மாயமப்பு!

திருவிழாமீனு

மதுர மண்ணு செய்யுற மாயமப்பு!

திருவிழாமீனு

Published:Updated:
மதுர மண்ணு செய்யுற மாயமப்பு!
பிரீமியம் ஸ்டோரி
மதுர மண்ணு செய்யுற மாயமப்பு!

துரப் பொண்ணுங்களுக்குப் பெண்மையின் பிரியத்தோட தெகிரியம் கொஞ்சம் கூடுதலா இருக்கும். அது அவுக ஊர்க்கொணம்... அவுக ஊரை ஆளுறாளே மீனாட்சி... அவளோட கொணம்! `சித்திரை சிறப்பிதழ்'ல மதுர சித்திரத் திருவிழாவ, அந்த மீனாச்சிகளோட மனசுக்கு நெருக்கமா கொஞ்சம் கதைப்போமா!

உள்ளூர் திருவிழா... ஒலக சரித்திரம்!

ஒலகத்துலேயே அதிக நாள்கள் கொண்டாடப்படுற திருவிழாக்கள்ல சித்திரைத் திருவிழாவும் ஒண்ணுன்னு விக்கிப்பீடியாவுலேயே பதிவு செஞ்சிருக்காக. திருவிழாவைப் பாக்க வர்ற வெளிநாட்டுக்காரவுக எல்லாம் டவுசர் சட்டையப் போட்டுக்கிட்டு, கலகலன்னு வளையலு, எண்ணெயவே பாக்காத வெளுத்த தலையில மல்லியப்பூவு, வெயிலுக்குக் கறுத்துப்போன தோலுன்னு,  கழுத்துல கேமராவோட சுத்தித் திரியுறதப் பாக்கும்போது, ‘யெப்பே... வெளி நாட்டுக்காரவுகளக்கூட வேண்டி விரும்பி வரவெக்கிற ஊருப்பே எங்க மதுர’னு ஒரு கெத்து வரும்ல!

மதுர மண்ணு செய்யுற மாயமப்பு!

திருவிழாக் கதைங்க!

மீனாட்சியம்மன் கோயில்ல கொடி யேத்தத்தோட ஆரம்பிக்கிற சித்திரத் திருவிழா, மீனாட்சிக்கு அரசியா முடிசூட்டுற பட்டாபிஷேகம், கயிலாய மலைக்குப் போனதைக் குறிக்கிற திக்விஜயம், மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கலியாணம், தேர்த் திருவிழா, அழகரை வரவேற்கிற எதிர் சேவை, கடைசியா வைகை ஆத்துல அழகர் எறங்குறதுனு... ஒரு மாசம் மதுரயே பட்டையக் கெளப்பும். இதுல ஆத்தா மீனாட்சியோட திருக்கலியாணமும், கள்ளழகர் ஆத்துல எறங்குறதும்தேன் இந்தத் திருவிழாவுல முக்கியமான அம்சங்க. சித்திர மாசத்துல அமாவாசைய அடுத்த ரெண்டாம் நாளு தொடங்கி பௌர்ணமி வரை பல பரிணாமங்கள்ல நடக்கும் இந்தத் திருவிழா.

மலையத்துவ பாண்டியனோட பொண்ணு மீனாட்சி, போர்க்கலைகள்ல சிறப்பா விளங்கி, திருகையிலாயத்துல சிவனை எதிர்த்துப் போர் செஞ்சு, அவரு மேல காதல் வயப்பட்டு, மதுரை திரும்பி அவரையே மணந்துகொண்டதா புராணம் சொல்லுது. இந்தத் திருமணத்துல கலந்துக்கத்தேன், மீனாட்சியோட அண்ணன் அழகரு, அழகர் மலையில இருந்து தங்கச்சிக்குச் சீர் எடுத்துட்டுப் புறப்படுறாரு. ஆனா, அவரு வைகை ஆத்துக்குப் பக்கத்துல வர்றப்போவே மீனாட்சியோட கலியாணம் முடிஞ்சிருச்சு. இதைக் கேள்விப்பட்ட அழகரு கோவத்துல வைகை ஆத்துல எறங்கிடுறாரு.

அப்புறம் மீனாட்சி, தன் கணவரோட வந்து வைகை ஆத்துல  இருக்குற தன்னோட அண்ணங்கிட்ட மன்னிப்புக் கேட்டு, ஆசீர்வாதம் வாங்கி, சீரு செனத்திய எடுத்துட்டு போறா. சித்திரத் திருவிழா இப்புடித்தேன் கதை கதையா நடக்கும். மதுரப் பொண்ணுங்க திருக்கலியாண நாள்ல தாலிச்சரடு மாத்திக்கிறது வழக்கம். அதனால புதுக் கலியாண ஜோடிங்க சித்திரை திருவிழாவுக்கு வந்தே தீரணும்கிறது எழுதாத விதி.

விவசாயிங்களை மனசுல வெச்ச மன்னன்!

ஆரம்பத்துல திருக்கலியாணமும், அழகர்  திருவிழாவும் வேற வேற மாசங்கள்ல நடந்துச்சாம். உழவு மாசமான மாசி மாசத்துல நடந்த தேர் இழு விழாவுக்கு, சம்சாரி சனங்களால வேலையை விட்டுட்டு வந்து கலந்துக்க முடியலைன்னு, மதுர மன்னன்,  மாசி திருவிழாவச் சித்திரைக்கு மாத்தி வெச்சாராம்.

மதுர குலுங்க குலுங்க!

 சித்திர வெயிலுக்கு பொடிசுல இருந்து பெருசு வரைக்கும் ஏதோ கொடக்கானல் திரியுற மாதிரி திரியுங்க. குட்டிப் பொண்ணுகளுக்கு ஒட்டு ஜடை வெச்சுவிட்டு, அதுல பூ, ஜரிகை, ஜிகினா பேப்பர்னு எல்லாத்தையும் சுத்திவிடறது, பின்னலுக்குள்ள குட்டிக் குட்டி பேட்டரி பல்ப் வெச்சு சீரியல் லைட்டே எரிய வைக்குறதெல்லாம்... அழகு அலப்பறைங்க!

ஒரே கலருல ஜிகுஜிகு சட்டை எடுத்துப் போட்டுக்கிட்டு ரவுசு காட்டும் பயலுக. ‘காணவில்லை’ பட்டியல்ல இருக்கும் தாவணியக் கட்டிக்கிட்டு பாசி, வளையல், தோடு,  பொட்டுன்னு வேர்வை வழிய ஷாப்பிங் பண்ற பொண்ணுங்க. தமுக்கம் மைதான சித்திரப் பொருட்காட்சி, ‘பத்து ரூபாய்க்கு மூணு பொருள்’ கடைங்க, பெரிய ராட்டினம்னு மதுரயே சும்மா கலகலப்பா இருக்கும் மக்கா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மதுர மண்ணு செய்யுற மாயமப்பு!

மழ வந்தே தீரும்!

கோயில் வீதிகள்ல மீனாட்சியும் சுந்த ரேசுவரரும் பவனி வர, கூடவே கொழந்தைங்க  கலை  நிகழ்ச்சிங்க நடத்திக்கிட்டு வலம் வர, கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டமுன்னு களைகட்ட, வழியெல்லாம்  நீர்ப் பந்தல், மோர்ப் பந்தல், புளியோதரை, தயிர்சாதம், பானகம், ரோஸ்மில்க்னு வர்ற சனங்களுக்கு இலவசமாக் கொடுத்து வயிறு, மனசக் குளிரவெச்சிடுவாங்க. குட்டீஸுங்க மோர், ரஸ்னாவையெல்லாம் தூக்குச்சட்டி, வாட்டர் கேனுன்னு லிட்டர் லிட்டரா வாங்கி நெரப்பிக்கிட்டு, ‘வாராரு வாராரு அழகர் வாரார்ர்ர்ர்ர்ரு’னு பாடிக்கிட்டே ஓடுறது அம்புட்டு அழகு.

அட மழையோ, நசநச தூறலோ... அன்னிக்கு நிச்சயமா தண்ணிய காட்டிடுவாரு அழகரு.  அதேமாதிரி ஆத்துல எறங்குறப்போ அழகரு கட்டியிருக்குற பட்டோட நெறத்தை வெச்சே வரும் வருஷத்தோட வளத்தை கணிக்குறது வழக்கம். சித்திர வெயிலுக்கு ஊர்வலம் வர்ற சனங்க மேல, தண்ணியப் பீய்ச்சி அடிச்சு வெயிலைத் தணிக்கிறது, அந்தக் காலத்துலயே நம்ம மக்க யோசிச்ச கோடைக்கான கூலிங்கு டெக்குனாலஜி!

மொத்தத்துல உள்ளூரு, வெளியூரு, வெளிநாடுன்னு லட்சம் சனங்க கூடுற இந்தத் திருவிழா கூட்ட நெரிசலுல, காலு கடுக்க நின்னாலும் மனசுக்குள்ள சில்லுனு ஓடும் பாருங்க ஒரு சிலிர்ப்பு...

மதுர மண்ணு செய்யுற மாயமப்பு அது!