Published:Updated:

கனவா, நனவான்னு தெரியாமல் மிதக்கிறேன்!

கனவா, நனவான்னு தெரியாமல் மிதக்கிறேன்!
பிரீமியம் ஸ்டோரி
கனவா, நனவான்னு தெரியாமல் மிதக்கிறேன்!

ஃபேஷன் சாஹா

கனவா, நனவான்னு தெரியாமல் மிதக்கிறேன்!

ஃபேஷன் சாஹா

Published:Updated:
கனவா, நனவான்னு தெரியாமல் மிதக்கிறேன்!
பிரீமியம் ஸ்டோரி
கனவா, நனவான்னு தெரியாமல் மிதக்கிறேன்!

ன்னும் சில மாதங்களுக்கு அதிதி ராவ் சேலையும், கார்த்தி ஜாக்கெட்டும்தான் டிரெண்டில் இருக்கப் போகின்றன. மணிரத்னம் இயக்கத்தில் ‘காற்று வெளியிடை’ படத்தின் பல ஹைலைட்டுகளில் ஹீரோ, ஹீரோயின் காஸ்ட்யூம்களும் ரொம்பவே ஸ்பெஷலாகப் பேசப்படுகின்றன. மணிரத்னத்தின் குட்புக்ஸில் இடம் பிடித்திருக்கிற லக்கி லேடி  - ஏகா லகானி. ‘காற்று வெளியிடை’ படத்தின் காஸ்ட்யூம் டிசைனர்... ‘ராவண்’, ‘கடல்’, ‘ஓகே கண்மணி’ படங்களைத் தொடர்ந்து, மீண்டும் மணிரத்னம் கூட்டணியில் இணைந்திருக்கிறார்.

கனவா, நனவான்னு தெரியாமல் மிதக்கிறேன்!

``ஒருவேளை என் விருப்பப்படி ஆர்க்கிடெக்சர் படிச்சிருந்தா, மணி சார் படங்களுக்கு ஆர்ட் டைரக்டர் ஆகியிருப்பேனோ என்னவோ... எங்கப்பா வோட ஆசைப்படி ஃபேஷன் டிசைனிங் படிச்சதால இன்னிக்கு காஸ்ட்யூம் டிசைனராகிட்டேன்...’’ என்கிற ஏகா, மும்பைவாசி.

‘`அப்பாவுக்கு டெக் ஸ்டைல் பிசினஸ். அவருக்கு அடுத்து நானும் அந்த பிசினஸ்லதான் இருக்கணும்கிறது அப்பா வோட ஆசை. அதனால, எனக்கு ஸ்கூல் பாடங்களைக் கத்துக்கொடுக்கும்போதே கலர் மிக்சிங் பத்தியும், துணிகளோட வகைகளைப் பத்தியும் கத்துக் கொடுத்தார். ஆர்க்கிடெக்சர் படிக்க நினைச்ச நான். வேற வழியில்லாம ஃபேஷன் டிசைனிங் படிச்சேன். சொன்னா நம்ப மாட்டீங்க... கடைசி வருஷம் படிக்கிறபோதுதான் எனக்கு ஃபேஷன் டிசைனிங் மேல ஆர்வமே வந்தது. ஒரு கட்டத்துல அது விஸ்வரூபம் எடுத்து, நியூயார்க் வரைக்கும் தேடிப் போய் நிறைய விஷயங்களைக் கத்துக்கற அளவுக்கு எனக்குள்ள ஒரு வெறியையே ஏற்படுத்தினது...’’ என்கிறவரின் வாழ்க்கையில் அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள் எல்லாமே சுவாரஸ்யமான திருப்பங்கள்.

‘`என்னைப் பத்தி எப்படியோ கேள்விப்பட்டு, ‘ராவண்’ படத்துல வொர்க் பண்ணக் கேட்டாங்க. மணி சார் படங்களைப் பார்த்து ரசிச்சு, வியந்து, என்ஜாய் பண்ணிட்டிருக்கிற ரசிகைகள்ல ஒருத்தியா இருந்த என்னை, என் கனவு இயக்குநர் படத்துல, என்னோட ஃபேவரைட் டிசைனர் சப்யாசாச்சிகூட வொர்க் பண்ணக் கேட்டதும் தலை கால் புரியலை. எந்த ஒரு புது டிசைனருக்கும் கிடைக்காதப் பெரிய வாய்ப்பு அது. ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன்னு பெரிய பேனர்... அந்தப் படம் முடியற வரைக்கும்கூட கனவா, நனவான்னு தெரியாமலேயே மிதந்திருக்கேன்...’’ - ரசிகை மனநிலையில் சொல்கிற ஏகாவை காஸ்ட்யூம் டிசைனராக அறிவித்த படம் ‘உருமி’.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கனவா, நனவான்னு தெரியாமல் மிதக்கிறேன்!

‘``ராவண்’ படம் பார்த்துட்டு வந்த வாய்ப்புதான் அது. டைரக்டர் சந்தோஷ்சிவன், பிருத்விராஜ், தபு, வித்யாபாலன்னு அதுவும் பெரிய படம். அதை முடிச்சுட்டு, மறுபடி மணி சார் கூட ‘கடல்’ படத்துல வொர்க் பண்ணினேன். அப்புறம் ‘ஓகே கண்மணி’, இப்போ ‘காற்று வெளியிடை’ வரைக்கும் அந்த சக்சஸ் கூட்டணி தொடர்ந்திட்டிருக்கு...’’ - முதல்படச் சிலிர்ப்பு குறையாமல் பேசுகிறார்.

இதற்கிடையில் ‘24’ மற்றும் ‘இருமுகன்’ படங்களில் நித்யா மேனனுக்கும், ஸ்ருதிஹாசனுக்கு சில பாடல்களுக்கும் டிசைன் செய்திருக்கிறாராம்.

‘`எத்தனை படங்கள் பண்ணியிருந்தாலும் மணி சார் முன்னாடி நாம எப்போதும் ஒரு ஸ்டூடண்ட்டாவேதான் ஃபீல் பண்ணுவோம். மணி சார் ஸ்கூல்லேருந்து வந்தவங்கன்னு சொல்லிக்கிறதுல யாருக்குமே ஒரு பெருமை இருக்கும்.
மணி சார் என்னை எப்பவுமே வெறும் காஸ்ட்யூம் டிசைனரா மட்டும் பார்க்க மாட்டார். அவர் படத்துல ஒவ்வொரு டெக்னீஷியனுக்கும் ஒட்டுமொத்தப் படத்துலயும் பங்கு இருக்கும். கதையைப் புரிஞ்சு வொர்க் பண்ண வைக்கிறதுதான் அவரோட ஸ்டைல். நம்ம வொர்க் பிடிச்சிருந்தா, ஒரு சின்ன ஸ்மைலோட, முதுகுல தட்டிக் கொடுப்பார்.

கனவா, நனவான்னு தெரியாமல் மிதக்கிறேன்!
கனவா, நனவான்னு தெரியாமல் மிதக்கிறேன்!

இதுவரை நான் பண்ணினதுலயே ‘காற்று வெளியிடை’ சவால்கள் அதிகமுள்ள படமும்கூட. படம் முழுக்க லே, லடாக்ல ஷூட் பண்ணினாங்க. மைனஸ் 20 டிகிரி குளிர்ல, புடவை கட்டிக்கிட்டு நடிச்ச அதிதிக்குத்தான் அந்தக் கஷ்டம் தெரிஞ்சிருக்கும். டிசைன் பண்ணிக் கொடுக்கிறதோட எங்க வேலை முடிஞ்சுடுது. ஆனா, மாறாத சிரிப்போட அந்த காஸ்ட்யூமைப் போட்டுக்கிட்டு நடிக்கிற சவால்தான் பெரிசுன்னு நினைக்கிறேன். ‘வான்... வருவான்’ பாட்டு எனக்கு மட்டுமல்ல... அதிதி, கார்த்திக்குக் கூட ரொம்பவே ஸ்பெஷல். அதிதி தேவதை மாதிரி இருப்பாங்க. கார்த்தியோட லுக் பத்தி நான் சொல்லவே வேண்டாம். கிளீன் ஷேவ் லுக்குல வித்தியாசமான காஸ்ட்யூம்ல அவரும் அவ்வளவு ஹேன்ட்சம்மா இருக்கார்...’’ - மணிரத்ன மாயையில் இருந்து வெளியே வராதவராகவே பேசுகிறவர், அடுத்து ‘ஹசீனா’, ஏ.ஆர்.ரஹ்மான் தயாரிப்பில் ஒரு படம் என எக்கச்சக்க பிஸி!