Published:Updated:

வாழ்க்கையைக் கொண்டாடுகிறாள் புதுமைப்பெண்!

வாழ்க்கையைக் கொண்டாடுகிறாள் புதுமைப்பெண்!
பிரீமியம் ஸ்டோரி
வாழ்க்கையைக் கொண்டாடுகிறாள் புதுமைப்பெண்!

பெண் மனம்யாழ் ஸ்ரீதேவி

வாழ்க்கையைக் கொண்டாடுகிறாள் புதுமைப்பெண்!

பெண் மனம்யாழ் ஸ்ரீதேவி

Published:Updated:
வாழ்க்கையைக் கொண்டாடுகிறாள் புதுமைப்பெண்!
பிரீமியம் ஸ்டோரி
வாழ்க்கையைக் கொண்டாடுகிறாள் புதுமைப்பெண்!

பெண், தன் எண்ணங்களை எல்லாம் பேசிவிட முடிகிறதா? எல்லாம் தெரிந்திருந்தாலும் எதுவும் தெரியாததுபோல பெண்ணை மௌனம் காக்கச் செய்வது எது? ‘நான் ஏன் இதெல்லாம் பேசக் கூடாது?’ என்று கேட்கும் நவீனப் பெண்ணின் குரலைத் தன் திரைப்பாடல் பயணத்தில் கவிப்பேரரசு வைரமுத்து பதிவு செய்து வருகிறார். 

வாழ்க்கையைக் கொண்டாடுகிறாள் புதுமைப்பெண்!

`அலைபாயுதே' படத்தில் ‘சினேகிதனே’ பாடலில் ‘சின்னச் சின்னதாய் கோரிக்கைகள் செவி கொடு சினேகிதனே’ என்று தொடங்கும் பெண், காதலில் அவனுக்கும் தனக்குமான மென்யுத்தத் தேவைகளை, கோரிக்கைகளாக வைக்கிறாள். ‘சின்னச் சின்ன அத்துமீறல் புரிவாய்... என் செல் எல்லாம் பூவாய் பூக்கச் செய்வாய்... மலர்களில் மலர்வாய்... பூப்பறிக்கும் பக்தன் போல மெதுவாய்... நான் தூங்கும்போது விரல் நகம் களைவாய்... சத்தமின்றித் துயில்வாய்...’ என நீளும் பாடலில், தன் தேவைகளை அவன் மனதெங்கும் பரப்புகிறாள்.

`ஓகே கண்மணி' படத்தின் ‘பறந்து செல்லவா' பாடலில் இரு இதழ்களால் முத்தச்சிறகுகட்டி வானம்முட்டி விளையாட அழைக்கிறாள்... ‘நீ நீ நீங்காதே தீண்டாதே’, ‘மிதந்து செல்லவா மேகத்துண்டு போல்... கரைந்து செல்லவா காற்று வீதியில்...’ என்பது ஆண்-பெண் இறுக்கங்களில் இருந்து விடுபட்டு, பால் மாற்றி பறக்கும் அனுபவமாக மாறுகிறது. காமத் தேடலில் ஆணின் வேட்கை அடைதலுக்கானது... பெண்ணின் எதிர்பார்ப்போ பறத்தலுக்கானது. ‘மறந்து போகவா என்ன பாலினம், மறந்து போகவா எண்ணம் என்பதே’ என்று பறந்து பறந்து தன்னை மறந்து போகிறாள். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வாழ்க்கையைக் கொண்டாடுகிறாள் புதுமைப்பெண்!

`ஆனால், இவையெல்லாம் நம் பெண்களுக்கு வாய்த்துவிடுகிறதா? இதோ... சுதந்திரப் பெண்மையைக் காற்று வெளியில் உலவவிட்டிருக்கும் கவிப்பேரரசு வைரமுத்து தனது `காற்று வெளியிடை' பாடலில் தொடங்கி, பலவும் பேசுகிறார் நம்மோடு...

‘‘அந்தக் கதாநாயகன் விமானம் ஓட்டி. அவன் ஒரு பெண்ணைக் காதலிக்கிறான். அவனை, அவள் `வான்வெளிக்கு என்னை அழைத்துச் செல்வாயா?’ என்று கேட்கிறாள். காதல் என்கிற உணர்வு மனித இனம் இருக்கும் வரை இருக்கும். அன்பு, பக்தி, பாசம், கருணை இப்படிக் காதலுக்குப் பல முகங்கள். ஹார்மோன்கள் சத்தமிடுகிற வயதில், இளமை தனது நர்த்தனத்தைத் தொடங்குகிற வயதில், இனக்கவர்ச்சிக்குப் பின் அதை ஒட்டிப்பிறப்பது காதல் என்று கருதப்படுகிறது. மன வேட்கையையும், அது சார்ந்த உடல் வேட்கையையும் இந்தப் பாடல் பேசுகிறது. பொத்திவைத்த காதலாக இல்லாமல் பூத்துவிட்ட காதலாக, பழைய கயிறுகளை அறுத்தெறிகிற காதலாக, வெட்கத்தை உடைத்துப் போடுகிற காதலாக, அச்சத்தை நசுக்கிப் போடுகிற காதலாக நான் இதைப் பதிவு செய்துள்ளேன். 

வாழ்க்கையைக் கொண்டாடுகிறாள் புதுமைப்பெண்!

பெண் மனம்விட்டுப் பேசுகிற மரபு சங்ககாலத்தில் இருந்தே இருக்கிறது. அவ்வையாரின் `முட்டுவேன் கொல்...' பாட்டிலேயே ஒரு பெண் தன் விரகதாபத்தைப் புரிந்துகொள்ளாமல் இந்த ஊர் உறங்குகிறதே என்று புலம்புவதாக எழுதியிருக்கிறார். இப்படி வெளிப்பட்ட உணர்வுகள் சுருங்கிப் போய்விட்டன. சாதிகளின் இறுக்கத்தால், மதங்களின் தாக்கத்தால், வாழ்க்கை முறையில் ஏற்படுத்தப்பட்ட அழுத்தங்களால் பெண்ணின் உணர்வுகள் உறைந்து போயின. இடைக்காலத்தில் பெண் அடிமையாகத்தான் இருந்தாள். அதை உடைத்துகொண்டு வெளிப்பட்ட ஆண்டாளின் பாடல்கள்  நவீனப் பெண்ணின் குரலாகவே ஒலிக்கின்றன. 

‘புதுமைப் பெண்’ படத்தில் `ஓ... ஒரு தென்றல் புயலாகி வருதே’ பாடலில் `அடுக்களை துடைப்பதும் படுக்கையை விரிப்பதும் அது பெண்ணின் தொழில் இல்லையே, தரித்திரம் துடைக்கவும் சரித்திரம் படைக்கவும் வருவதில் பிழையில்லையே’ என்று புரட்சிக் கருத்துகள் பதிவு செய்யப்பட்டிருக்கும். அது பெண்ணடிமைத்தன விலங்குகளை உடைப்பதாகவே இருக்கும். 

வாழ்க்கையைக் கொண்டாடுகிறாள் புதுமைப்பெண்!

எனது சிந்தனையும் பாத்திரப் படைப்பும் ஒரே நேர்கோட்டில் அமைகிறபோது நவீனப் பெண்ணுக்கான பாடல்கள் கிடைக்கின்றன. இன்றைய நவீனப் பெண்ணின் உணர்வுகளை வெளிப்படுத்தும் பாத்திரப் படைப்புகள் அமையும்போது பெண்ணின் ஆழமான வலிகளையும் துயர்களையும் எழுத முடியும். பெண் விடுதலைக்கான பயணத்தில் திரைப்பாடல்களுக்கும் பங்குண்டு என்பதை இந்தச் சமூகம் நம்பத் தொடங்கும். அப்படியான வாய்ப்புக்காகக் காத்திருக்கிறேன்” என்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து.

ஆம்... இன்றைய நவீனப் பெண்கள் மரபின் மேன்மைகளை விட்டுவிடாமல் புதுமைகளைக் கொண்டாட வேண்டும்!