Published:Updated:

ஆரம்பத்தில் தடா அப்புறம் ஆஹா!

ஆரம்பத்தில் தடா அப்புறம் ஆஹா!
பிரீமியம் ஸ்டோரி
ஆரம்பத்தில் தடா அப்புறம் ஆஹா!

ஹோம் தியேட்டர்வே.கிருஷ்ணவேணி, படம்: மீ.நிவேதன்

ஆரம்பத்தில் தடா அப்புறம் ஆஹா!

ஹோம் தியேட்டர்வே.கிருஷ்ணவேணி, படம்: மீ.நிவேதன்

Published:Updated:
ஆரம்பத்தில் தடா அப்புறம் ஆஹா!
பிரீமியம் ஸ்டோரி
ஆரம்பத்தில் தடா அப்புறம் ஆஹா!

ப்போது விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகிவரும் ‘மாப்பிள்ளை’ சீரியலிலும், ‘ஜி தமிழ்’ சேனலில் ஒளிபரப்பாகிவரும் ‘லட்சுமி வந்தாச்சு’ சீரியலிலும் தன்னுடைய நடிப்பால் அசரவைத்துக் கொண்டிருப்பவர், வைஷாலி தனிகா. பிரபுதேவா - லட்சுமி மேனன் நடிக்கும் ‘யங் மங் சங்’ படத்தில், லட்சுமி மேனனின் தங்கையாகவும் நடித்துவருகிறார். ஷூட்டிங்கில் பிஸியாக இருந்தவரிடம் பேசினோம்.

நடிப்பு வாய்ப்பு எப்படி கிடைச்சது?

``நான் பி.டெக் படிச்சுட்டு இருக்கும்போதே நடிக்க வாய்ப்பு வந்தது. அதை மிஸ் பண்ணாமல் பயன்படுத்திக்கிட்டேன். தொடர்ந்து மாடலிங், சினிமா எனக் கலைத்துறையிலும், புராஜெக்ட், எக்ஸாம் எனப் படிப்பிலும் கவனம் செலுத்தினேன். கடந்த ஆண்டுதான் காலேஜ் படிப்பை முடிச்சேன். தொடர்ந்து சினிமா மற்றும் சீரியல் வாய்ப்புகள் வந்துட்டே இருக்கு...''

ஆரம்பத்தில் தடா அப்புறம் ஆஹா!

`மாப்பிள்ளை’ சீரியல் வாய்ப்பு எப்படி?

``விஜய் டி.வி-யின் ‘பகல் நிலவு’ சீரியல்ல நடிக்கும் சிவா, எனக்கு நல்ல நண்பர். அவர் மூலமாகத்தான் இந்த வாய்ப்பு கிடைச்சது. நான் எப்பவுமே கலகலன்னு பேசிட்டே இருப்பேன். ஆனா, `மாப்பிள்ளை’ சீரியல்ல எனக்கு வில்லி ரோல். ஸ்ரீஜாவோட கடைசி தங்கச்சியா நடிக்கிறேன். கோபம், வில்லத்தனம் எல்லாம் சேர்ந்திருக்கணும். அதுக்காக நிறையப் பயிற்சி எடுக்க வேண்டியிருந்தது. ஆரம்பத்துல கஷ்டமா இருந்தது. போகப் போகப் பழகிடுச்சு. அதே மாதிரிதான் `ஜீ தமிழ்' சேனலின் ‘லட்சுமி வந்தாச்சு’ சீரியல். ஹீரோவுக்குக் கல்யாணமான பிறகும் அவரை லவ் பண்ற கேரக்டர். இப்படி எந்த கேரக்டரா இருந்தாலும், மக்கள் மனசுல பதியும் வகையில நடிக்கணும்கிறதுதான் என்னோட ஆசை!’’

படிக்கும்போதே நடிக்கிறதுக்கு உங்க வீட்ல ‘தடா’ போடலையா?

``ஹைய்யோ... அதை ஏன் கேட்கறீங்க... ஆரம்பத்துல என் அப்பாவுக்கு நான் நடிக்கிறதே பிடிக்கலை. அம்மாவுக்குப் பிடிச்சிருந்தது. அதனால், அப்பாகிட்ட எடுத்துச் சொன்னாங்க. கொஞ்சம் சமாதானம் ஆனவர், ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து எப்படி இருக்குன்னு பார்த்த பிறகுதான் எனக்கு முழுச் சுதந்திரம் கொடுத்தார். இப்போ, நடிப்பு சம்பந்தமான டிப்ஸும் கொடுக்க ஆரம்பிச்சுட்டார்.’’

உங்களோட ஃப்ரீ டைம்ல என்ன பண்ணுவீங்க?

``எனக்கு மெலடி சாங்ஸ் கேட்கப் பிடிக்கும். ட்ராவல், ஷூட்டிங் பிரேக் டைம்களில் ஹெட் செட்ல பாட்டு கேட்க ஆரம்பிச்சுடுவேன். என் செல்போன்ல சாங்ஸ் கலெக்‌ஷன் நிறைய இருக்கு.’’

இப்போதான் சீரியலுக்குள்ளே நுழைஞ்சிருக்கீங்க... எப்படி இருக்கு? அடுத்த திட்டம்?

``செமையா இருக்கு. சீரியல், என்னோட இரண்டாவது வீடு. ‘மாப்பிள்ளை’ சீரியல் டீம்ல நான்தான் சின்னப் பொண்ணு. அதனால், எல்லாருக்குமே நான் தங்கச்சி மாதிரி. ஒரு சின்ன வருத்தம்... `ஜீ தமிழ்' சேனலின் இரண்டு சீரியலில் லீடு ரோலில் நடிக்க சான்ஸ் கிடைச்சது. ஆனால், ‘லட்சுமி வந்தாச்சு’ சீரியல்ல நடிச்சுட்டு இருக்கிறதால கைவிட்டுப் போச்சு. மத்தபடி, லைஃப் ஜாலியாப் போகுது. இன்னும் நிறையப் பண்ணணும். எல்லார் மனசுலயும் இடம்பிடிக்கிற மாதிரியான ரோல்கள்ல நடிக்கணும். சினிமாவில் ஹீரோயின் வாய்ப்பும் வருது. நல்ல கதாபாத்திரமா கிடைச்சா கண்டிப்பா நடிப்பேன்’’ என்கிறார் நம்பிக்கைச் சிரிப்புடன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மீண்டும் ரம்பா!

கார்த்திக், விஜய், அஜித் உள்பட பல முன்னணி ஹீரோக்களுடன் திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர், நடிகை ரம்பா. ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளையடித்த ரம்பா, கலைஞர் டி.வி-யின் ‘மானாட மயிலாட’ நடன நிகழ்ச்சிக்கு நடுவராக இருந்துவந்தார். பிறகு, வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் இருந்து விலகியிருந்தார். 

இப்போது, விஜய் டி.வி-யின் புதிய நிகழ்ச்சி ஒன்றுக்கு மீண்டும் நடுவராக வரவிருக்கிறார். அதேபோல, தெலுங்கு `ஜீ' சேனலில் நடன நிகழ்ச்சிக்கும் நடுவராக வரவிருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு இவரோடு நடுவராக வரப்போவது சிநேகா.

இப்போ, ரம்பா ரொம்ப பிஸி!

ஆரம்பத்தில் தடா அப்புறம் ஆஹா!

அலமாரியில் இடம் இல்லை!

‘ஜீ தமிழ்' சேனலில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 10 முதல் 10:30 மணி வரை ஒளிபரப்பாகி வரும் ‘டார்லிங் டார்லிங்’ சீரியலில், காமெடி மாமியாராக அசத்திவருபவர் முன்னணி நடிகையான நளினி. இவருடைய ஒவ்வொரு ரியாக்‌ஷனையும் இன்றைக்கும் பல புதுமுக நடிகர், நடிகைகள் கற்றுக்கொண்டு வருகிறார்கள். அந்த அளவுக்கு நடிப்புக்கான முன்னோடியாக இருந்து வருபவர் இவர்.

நளினி வீட்டு அலமாரியில் இப்போ இடம் இல்லையாம். என்ன காரணம் எனக் கேட்டால்,  ``நானூறுக்கும் அதிகமான பட்டுப்புடவைகளை அடுக்கி வெச்சாச்சு... இனிமேல் புடவை எடுத்தால், எங்கே வைக்கிறது எனத் தெரியவில்லை'' என்கிறார்.

இரண்டு மாதங்களுக்கு ஒருமுறையாவது காஞ்சிபுரம் சென்று பட்டுப்புடவைகள் வாங்குவது இவர் வழக்கம். சில வேளைகளில், முன்பு எடுத்த கலரிலேயே எடுத்துவிடுவாராம். வீட்டுக்கு வந்த பிறகுதான் இதேபோல ஏற்கெனவே இருப்பது நினைவுக்கு வருமாம். எந்த அளவுக்கு ஆர்வமோ, அதே ஆர்வத்தை அந்தப் பட்டுப் புடவைகளைப் பாதுகாப்பாக வைப்பதிலும் காட்டுகிறார்.

அசத்துங்க நளினி!

வாசகியர் விமர்சனம்

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ.100


நெகிழ்ச்சி! மகிழ்ச்சி!

சன் டி.வி-யில் ஒளிபரப்பாகி வரும்  `தெய்வ மகள்' சீரியலில் வெளியான ஒரு காட்சி மனதை நெகிழ வைத்தது. அறுவைசிகிச்சை செய்ய மூன்று லட்சம் ரூபாய் வேண்டுமென வற்புறுத்திய இடத்தில், அங்கே இருந்த மருத்துவர், `நானும் ஒரு தொழிலாளிதான்' என்று சொன்ன இடம் பரிதாபமாக இருந்தது. கதையை இப்படிச் சூழலுக்கேற்பச் சொல்வது அருமை!

எஸ்.ரேவதி சம்பத்குமார்
ஈரோடு - 12


வரதட்சணையை ஊக்கப்படுத்துவதா?

விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகும் ‘நீயா நானா?’ நிகழ்ச்சியில் திருமணத்துக்குச் சீர்வரிசை எதிர்பார்க்கும் இளம்பெண்களின் பேச்சு ஒளிபரப்பப்பட்டது. பேசிய பெண்கள் சிலரின் எதிர்பார்ப்பு அதிர்ச்சியையும் வேதனையையும் அளித்தது. வரதட்சணையை அங்கீகரிக்கும் இதுபோன்ற தலைப்புகளை ரியாலிட்டி ஷோக்களில் தவிர்க்கலாமே!

விஜயலட்சுமி
மதுரை - 9