தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

லட்ச ரூபாய்க்கு ஷாப்பிங் பண்ணுவேன்! - ஐஸ்வர்யா ராஜேஷ்

லட்ச ரூபாய்க்கு ஷாப்பிங் பண்ணுவேன்! - ஐஸ்வர்யா ராஜேஷ்
பிரீமியம் ஸ்டோரி
News
லட்ச ரூபாய்க்கு ஷாப்பிங் பண்ணுவேன்! - ஐஸ்வர்யா ராஜேஷ்

பயணங்களின் ரசிகை நா.சிபிச்சக்கரவர்த்தி, படம்: கார்த்திக் சீனிவாசன்

“சின்ன வயசுல இருந்தே எனக்கு  ஒரு கனவு உண்டு. இந்த உலகத்துல உள்ள எல்லா நாடுகளையும் என் கண்ணால பார்க்கணும்...’’ - கனவுக் கண்களால் பார்த்தபடி பேசத் தொடங்குகிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்!

“பயணம் என்பது  ஒரு வகையான காதல்தான். ஒரு தடவை இந்த ஸ்வீட் மெமரி கிடைச்சுடுச்சுன்னா... வானத்துல இருந்து பெய்கிற மழை மாதிரி அடிக்கடி தேவைப்பட்டுக்கொண்டே இருக்கும். சின்ன வயசுல டூர் போவதற்கெல்லாம் எங்க வீட்ல வசதி இல்லை. அதுக்கப்புறம் காலேஜ் வந்தேன். சூழல் மாறிடுச்சு. நாடு விட்டு நாடு பறக்க ஆரம்பிச்சுட்டேன்” என்கிற ஐஸ்வர்யா, தன் உலகப் பயணத்தை நம் கண்முன்னே திரையிடுகிறார்!

லட்ச ரூபாய்க்கு ஷாப்பிங் பண்ணுவேன்! - ஐஸ்வர்யா ராஜேஷ்

துபாய்

“நான் முதன்முதலில் இந்தியாவைத் தாண்டி பறந்து சென்று பார்த்த நாடு துபாய்... இதுவரை அஞ்சு தடவை துபாய்க்கு ஜாலி ட்ரிப் அடிச்சுருக்கேன். எக்கச்சக்க மான என்டர்டெயின்மென்ட் கொட்டிக்கிடக்கும் நாடு அது. ஒவ்வொரு தடவையும் நான் மறக்காம போகிற இடம் புர்ஜ் கலிபா. வான் உயரக் கட்டடம். வெச்ச கண்ணு வாங்காம பார்த்துட்டே இருக்கலாம். உச்சிக்குப் போய் கீழே பார்த்தால் மெர்சல் ஆகிடும்!
‘டெசர்ட் சஃபாரி’... பாலைவன மணலில் ரோலர் கோஸ்டர் ரைடு போற மாதிரி மேடு, பள்ளங்களில் வேகமா ஏறி இறங்குவாங்க. த்ரில்லா இருக்கும். அப்புறம் துபாயில் விதவிதமான தங்க, வைர ஆபரணங்கள் கிடைக்கும். நிறைய அட்வெஞ்சர் பார்க் இங்கே இருக்கு. ஒவ்வொரு ரைடும் ‘மரண பயத்தை காட்டீட்டாங்க பரமா...’ ரேஞ்ச்ல இருக்கும். உலகத்தில் உள்ள எல்லா நாடுகளின் உணவுகளும் இங்கே கிடைக்கும். டயட் எல்லாம் மறந்து சாப்பாட்டிலும் ஒருபிடி பிடிச் சுட்டுதான் வருவேன்!”

லட்ச ரூபாய்க்கு ஷாப்பிங் பண்ணுவேன்! - ஐஸ்வர்யா ராஜேஷ்

மலேசியா

“‘முலுகேவ் நேஷனல் பார்க்’ கண்டிப்பா பார்க்க வேண்டிய இடம். உலகின் மிகப்பெரிய குகை இருக்கிற இடம். இருளும் அமைதியும் கலந்த கலவை. வேற ஒரு உலகத்துக்குப் போய்ட்டு வந்த ஃபீலிங் கிடைக்கும். ‘சாரவாக் சாம்பர்’னு தண்ணீருக்கு அடியில் இருக்கும் இன்னொரு உலகத்தையும் ரசிக்கலாம். இங்கே வெரைட்டியான மீன்கள், கடல்வாழ் உயிரினங்கள் நிறைய இருக்கு. கோலாலம்பூர்ல ஷாப்பிங் பண்ணவும் சுத்திப் பார்க்கவும் இன்னும் நிறைய இடங்கள் இருக்கு!”

லட்ச ரூபாய்க்கு ஷாப்பிங் பண்ணுவேன்! - ஐஸ்வர்யா ராஜேஷ்

சிங்கப்பூர்

“குறைவான செலவில், நிறைவான டிராவல் அனுபவம் வேணும்னா சிங்கப்பூர்தான் பெஸ்ட். ரொம்பச் சுத்தமான ரோடு, கடுமையான போக்குவரத்து விதிமுறைகள்னு பல விஷயங்கள். ஆச்சர்யப்பட்டுட்டே இருக்கலாம். ‘ஜுராங்’ பறவைகள் சரணாலயம் பிரமாதம். அந்தப் பறவைகளின் சத்தமே மெஸ்மரிசம் பண்ற மாதிரி இருக்கும். இங்குள்ள பொட்டானிக்கல் கார்டன் நம்ம ஊட்டியில் இருப்பது போல பல மடங்கு பெரிசு. எல்லாத்தையும் நிதானமா சுத்திப் பார்க்கணும்னா, அதுக்குத் தகுந்தாற்போல ப்ளான் பண்ணிப் போறது ரொம்ப நல்லது!”

லட்ச ரூபாய்க்கு ஷாப்பிங் பண்ணுவேன்! - ஐஸ்வர்யா ராஜேஷ்

பாங்காக்

“தாய்லாந்தின் தலைநகரம் பாங்காக்... இங்க போறோம்னு திட்டம் போட்டாலே கையில ஒரு லட்ச ரூபாய் எடுத்து வெச்சுப்பேன்... ஷாப்பிங் செய்யத்தான்! இங்க கிடைக்காத பொருள்களே இல்லை. எல்லாமே சீஃப் அண்ட் பெஸ்ட்! இப்ப நான் அணிகிற நிறைய உடைகள் இங்கே இருந்து வாங்கிட்டு வந்தவைதாம். ஒவ்வொரு முறையும் ஹேண்ட் பேக், ஷூ ரெண்டையும் மறக்காமல் வாங்கிட்டு வந்துடுவேன்.

இங்கு நிறைய கோயில்களும் இருக்கு. ஒவ்வொரு கோயில் கட்டுமானமும் ஆச்சர்யப் படுத்தும். எந்த நாட்டுக்குப் போனாலும், அங்கே இருக்கிற கோயில்களைப் பார்க்காமல் வரமாட்டேன்.

இந்தியாவிலும் முக்கியமான நகரங்களுக்கும், தமிழ்நாட்டில் உள்ள கோயில்களுக்கும் போயிருக்கேன். `பயணங்களால் ஆனதுதான் வாழ்க்கை'னு நான் நினைக்கிறேன். ஆகவே, பயணம் செய்து வாழ்க்கையைக் கொண்டாடுவோம்!”

“திட்டம் ரெடி!”

“ஏற்கெனவே சுவிட்சர்லாந்து போய் இருக்க வேண்டியது... அந்த நேரத்தில்தான் ‘ரம்மி’ படத்துல நடிக்கற வாய்ப்பு வந்தது. இந்த ஆண்டு முடியறதுக்குள்ள லண்டன், சுவிட்சர்லாந்து போகணும்னு ப்ளான் பண்ணிட்டு இருக்கேன். ” 

“பயணங்களுக்கு எப்படித் தயாராவீங்க?”

“போற இடத்துல நிச்சயம் டிரெஸ், காஸ்மெட்டிக் ஐட்டம் வாங்குவேனே! அதனால, முடிஞ்ச அளவுக்குக் குறைவான உடைகளைத்தான் எடுத்துப்பேன்.

ஆன்லைன்ல எல்லாத்தையும் செக் பண்ணிட்டு, எந்த நாள் எங்கே போறோம்னு ப்ளான் செஞ்சுப்பேன். அந்தத் திட்டப்படிதான் எல்லாமே நடக்கும்.”

“மறக்க முடியாத அனுபவம்?”

``கோவாவில் ஒருதடவை கேம்ப்ளிங் ஆடினேன்.

20 ஆயிரம் ரூபாய் போட்டு ஒரு லட்சம் ரூபாய் ஜெயிச்சேன். ஆனா, இது கொஞ்சம் ரிஸ்க் கேம்தான். இருந்தாலும், இப்ப வரை மறக்க முடியல. காசு... பணம்... துட்டு... மணி... மணி!”