தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

நீங்கதான் ராஜா... நீங்கதான் ராணி!

நீங்கதான் ராஜா... நீங்கதான் ராணி!
பிரீமியம் ஸ்டோரி
News
நீங்கதான் ராஜா... நீங்கதான் ராணி!

மாடலிங்பரிசல் கிருஷ்ணா - படங்கள் : ஆ.முத்துக்குமார்

மாடலிங் என்றாலே பெங்களூரு, டெல்லி என்று மற்ற மாநிலத்தவர்கள்தான் என்ற நினைப்பைத் தகர்க்க, சென்னையைச் சேர்ந்தவர்களுக்குப் பயிற்சி அளித்து ஊக்குவிக்கத் திட்டமிட்டுள்ளது சென்னையின் முன்னணி மாடலிங் நிறுவனங்களுள் ஒன்றான ‘சென்னை மாடல்ஸ்’. அதன் ஒரு கட்டமாக ‘மிஸ்டர் அண்ட் மிஸ் ஃபேஷன் ஐகான் ஆஃப் சென்னை 2017’ போட்டியை நடத்தியது. தகுதியும் திறமையும் கொண்ட மாடல்களைத் தேர்ந்தெடுப்பதோடு, புதியவர்கள் மாடலிங் துறையில் ஈடுபட ஊக்குவிக்கும் வகையிலும் இந்தப் போட்டி நடைபெற்றது.

நீங்கதான் ராஜா... நீங்கதான் ராணி!

‘மிஸ் சவுத் இந்தியா 2016’ பட்டம் வென்றவரும், இந்தப் போட்டியின் பிராண்ட் அம்பாசிடருமான மீரா மிதுன்,  விஜய் உள்ளிட்ட பல ஹீரோக்களுக்கு காஸ்ட்யூம் டிசைன் செய்துதரும் என்.ஜே.சத்யா, மாதவன், அனிருத் உள்ளிட்ட பிரபலங்களின் ஹேர் ஸ்டைலிஸ்ட் தனசேகர் ஆகிய மூவரும் வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுத்தனர்.

‘மிஸ்டர் ஃபேஷன் ஐகான் ஆஃப் சென்னை 2017’ ஆக கமருதீன், ஃபர்ஸ்ட் ரன்னர்-அப்பாக தீபன் மோகன், செகண்ட்-ரன்னர் அப்பாக ராஜேஷ் குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். ‘மிஸ் ஃபேஷன் ஐகான் ஆஃப் சென்னை 2017’ ஆக ஹர்ஷிதா, ஃபர்ஸ்ட் ரன்னர்-அப்பாக சுஜு வாசன், செகண்ட் ரன்னர்-அப்பாக ஜெய்குமாரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

நீங்கதான் ராஜா... நீங்கதான் ராணி!

சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நடிகர் ஷாம், ’ராம்ப்’-பில் செம ஸ்டைலிஷாக நடந்து கைதட்டல்களால் அரங்கை அதிரவைத்தார். அத்தனை தன்னம்பிக்கை அவர் உடல் மொழியில். அது பற்றிக் கேட்டபோது அவர் சொன்ன வார்த்தைகள், மாடலிங்கில் ஜெயிக்க நினைப்பவர்கள் மனதில் இருத்திக் கொள்ள வேண்டியவை... “இங்க நடக்கறப்ப நீங்கதான் ராஜா இல்லன்னா ராணினு நினைச்சுக்கணும். அல்லது ‘எவன் ராஜாங்கறதப் பத்தி எனக்கு அக்கறை இல்லை’ன்ற மாதிரி நடக்கணும்” என்கிற ஷாம், தானும் மாடலிங் ஃபீல்டில் இருந்து சினிமாவுக்கு வந்ததை நினைவுகூர்ந்த தோடு, ``உடலையும் மனதையும் ஃபிட் ஆக வைத்திருக்க மாடலிங் உதவும்'' என்றார்.

“மாடலிங் என்றாலே மக்களுக்குத் தவறான கண்ணோட்டம் இருக்கிறது. அதை மாற்றுவதோடு, மாடலிங் துறையில் நுழைய விரும்புவர்களுக்குச் சரியான வழிகாட்டுதல்களை எங்கள் நிறுவனம் மேற்கொள்ளும். தமிழ்நாட்டு மாடல்களை, இந்திய அளவில் கொண்டு செல்வதற்கான பணிகளையும் செய்ய இருக்கிறோம்” என்றார் ‘சென்னை மாடல்ஸ்’ நிறுவனத்தின் சிஇஓ சி.காவேரி மாணிக்கம்.