தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

``அந்த ரெண்டு மாசம்... என் வாழ்க்கையின் பொற்காலம்!’’

``அந்த ரெண்டு மாசம்... என் வாழ்க்கையின் பொற்காலம்!’’
பிரீமியம் ஸ்டோரி
News
``அந்த ரெண்டு மாசம்... என் வாழ்க்கையின் பொற்காலம்!’’

அப்பாவின் நினைவுகள் கு.ஆனந்தராஜ்

ண்மையில் நடிகை அனுஹாசனின் தந்தையும், நடிகர் கமல்ஹாசனின் அண்ணனுமாகிய சந்திரஹாசன் காலமானார். தந்தையிடம் தான் கற்றதும் பெற்றதுமான விஷயங்களைப் பகிர்ந்தார் அனுஹாசன்...

“இதுவரை எங்கப்பாவைப் போன்ற ஓர் அற்புதமான மனிதரை நான் பார்த்ததில்லை. என்னை தைரியத்தோடும் சுதந்திரத்தோடும் வளர்த்தவர். நல்லா சிந்திக்க வெச்சு முடிவுகளைச் சுயமாகவும் தீர்க்கமாகவும் எடுக்க உதவுற விதத்துல நிறைய விஷயங்களைச் சொல்லிக்கொடுத்திருக்கார். இவை எல்லாவற்றையும்விட என்னை ஒரு நல்ல மனுஷியா மாத்தினதுல அவரோட பங்கு மகத்தானது!’’ என்கிற அனு, அப்பாவிடம் பொய் சொல்லி மாட்டிக்கொண்ட ஒரு நிகழ்வை உணர்வுபூர்வமாகச் சொன்னார்...

``அந்த ரெண்டு மாசம்... என் வாழ்க்கையின் பொற்காலம்!’’

“அப்போ எனக்கு ஆறு வயசு இருக்கும். ‘ஸ்கூல்ல ரெண்டு பிள்ளைங்க கீழே விழுந்துட்டாங்க. நான் அவங்களைக் காப்பாத்தினதுக்காக, அசெம்ப்ளியில என்னைப் பாராட்டி, சோளம் கொடுத்தாங்க’ன்னு வீட்டுக்கு வந்து அம்மாகிட்ட சொன்னேன். ஏதோ குழந்தை சொல்லுதுன்னு அம்மா அதை அரைகுறையா நம்பியிருக்காங்க. ஆபீஸ்ல இருந்து வீட்டுக்கு வந்ததும் அப்பாகிட்ட, நான் சொன்ன விஷயத்தை அம்மா

``அந்த ரெண்டு மாசம்... என் வாழ்க்கையின் பொற்காலம்!’’

சொன்னாங்க. உடனே மெள்ளத் திரும்பி என்னைப் பார்த்து மென்மையான சிரிப்போட, ‘நீ சொன்ன பொய் யைக் கண்டுபிடிச்சுட்டேன்’கிற மாதிரி அப்பா ஒரு ரியாக்‌ஷன் கொடுத்தார். ஆறு வயசுக் குழந்தைக்குப் புரிகிற மாதிரி அவர் கொடுத்த ரியாக்‌ஷன்ல, நான் பொய் சொன்னதை உடனே ஒப்புக்கிட்டேன்.

ஒருவேளை நான் பொய் சொன்னாலும், அதை ரொம்பவே மென்மையா, அன்பா பேசி ‘ஏம்மா இப்படி சொல்றே’ன்னு பியூட்டிஃபுல்லா பொய்யை ஒப்புக்க வெச்சுடுவாரு. அந்த மாதிரியான தருணங்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஏன்னா, என்னிக்குமே என்னோட அப்பாவை நான் ஏமாத்தக்கூடாதுங்கறதுல உறுதியா இருக்கேன்.

என் வாழ்க்கையில இதுவரை நான் எடுத்த எல்லா முடிவுகள்லயும் அப்பாவோடு வழிகாட்டுதல் இருக்கு. ஒரு விஷயத்தின் பின்னணி, விளைவுகள் எப்படியெல்லாம் இருக்கும்னு ஆழமா எனக்குப் புரிய வைப்பார். அதன் பிறகுதான் எனக்கு ஒரு தெளிவு பிறக்கும். அதையும் மீறி, நான் எடுத்த ஒரு முடிவு தப்பாப்போச்சுன்னாலும், அதையும் எளிதா கடக்க உதவிசெய்வாரு. ‘நான் சொன்னேன்ல... என் பேச்சைக் கேட்காம போனதாலதானே இப்படியெல்லாம் ஆச்சு’ன்னு ஒருபோதும் அவர் சொன்னதேயில்லை. ‘உன்னோட முடிவை நீ சுதந்திரமா எடுக்கணும். அதனால் வரக்கூடிய விளைவுகளையும் நீ சமாளிக்கக் கத்துக்கணும்’ என்பதுதான் அப்பாவோட நிலைப்பாடு. அதுதான் என்னோட அப்பா... வொண்டர்ஃபுல் அப்பா!

``அந்த ரெண்டு மாசம்... என் வாழ்க்கையின் பொற்காலம்!’’

போன வருஷக் கடைசியில, `அம்மா கீதாமணிக்கு  ஹார்ட் அட்டாக்’னு போன் வந்துச்சு. நான் பதறியடிச்சு லண்டன்ல இருந்து சென்னைக்கு வந்தேன். ஜனவரி மாசம் எங்களைத் தவிக்க விட்டுட்டு, அம்மா விடைபெற்றுப் போயிட்டாங்க. ஆனா, அப்பவும் சரி, அதுக்குப் பிறகும் சரி... நான் நினைச்சுக்கூடப் பார்க்கல, ரெண்டே மாசத்துல அப்பா தவறிடுவார்னு... அம்மா இறந்த பிறகு அப்பா லண்டனுக்கு வந்து என்கூடவே இருந்தார். இந்த ரெண்டு மாசக் காலமும் என்னால மறக்க முடியாது. இது என் வாழ்க்கையின் பொற்காலம்னுதான் சொல் வேன். அப்பாகூடவே இருந்து மகிழ்ச்சியா ஒவ்வொரு நாளையும் கழிச்சேன். ஆனா, எனக்கு அப்பாவோட அதிக நாள் இருக்க கொடுத்து வைக்கலை. ஐ வெரி மச் மிஸ்யூப்பா... மிஸ்யூம்மா...’’ - உணர்ச்சி வசப்பட்டுக் கலங்குகிறார் அனு.