தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

``எனக்கு சினிமா வாய்ப்பு வேண்டாம்!’’ - `விஜே’ ரேஷ்மா!

``எனக்கு  சினிமா  வாய்ப்பு வேண்டாம்!’’ - `விஜே’ ரேஷ்மா!
பிரீமியம் ஸ்டோரி
News
``எனக்கு சினிமா வாய்ப்பு வேண்டாம்!’’ - `விஜே’ ரேஷ்மா!

ஹோம் தியேட்டர் - வே.கிருஷ்ணவேணி

கேப்டன் டி.வி-யில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 11:30 - 12:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் `சமையல் டாட்காம்’ நிகழ்ச்சியைக் கடந்த ஓராண்டாகத் தொகுத்து வழங்கிவருபவர் ரேஷ்மா. போட்டோகிராபி முதல் டீச்சிங் வரை பல்வேறு திறமைகளை உள்ளடக்கிய அவரிடம் பேசியபோது...

``எனக்கு  சினிமா  வாய்ப்பு வேண்டாம்!’’ - `விஜே’ ரேஷ்மா!

‘’உங்களுக்கு என்னென்ன தெரியும்?’’

‘’சின்ன வயசுல இருந்து எதையாவது புதுசா கத்துக்கணும்னு ஆசை. அதுக்காக நிறைய விஷயங்களைத் தேடித்தேடி கத்துக்கிட்டேன். பெயின்ட்டிங் பண்ணுவேன். எப்போ தோணுதோ அப்போல்லாம் கேமராவைத் தூக்கிட்டுக் கிளம்பிடுவேன். இயற்கையைப் படம்பிடிக்கிறது ரொம்பப் பிடிக்கும். ஒருமுறை தேனீ, தான் சேகரித்த தேனை, தன்னோட தேனடையில் வைக்கிறதை போட்டோ எடுத்தேன். க்ளோசப்ல எடுக்க வேண்டியிருந்ததாலே... அதனால, ஆடாம அசையாம அப்படியே கேமராவை வெச்சுட்டு ரெடியா இருந்தேன். உள்ளுக்குள்ள பயமா இருந்தாலும் ஒருவழியா எடுத்துட்டு வந்துட்டேன். வீட்டுக்கு வந்து பார்த்தப்போ எனக்கு அவ்வளவு சந்தோஷம். இப்பவும் அந்த போட்டோ என் கண்ணுக்குள்ளயே இருக்கு.’’

‘’போட்டோகிராபராகப் போகாம இந்தப் பக்கம் எப்படி வந்தீங்க..?’’

‘`கேப்டன் டி.வி தொகுப்பாளர் கார்த்தி நடத்துற ஒரு ஷோவுக்கு ஆடியன்ஸா போனேன். அங்க என்னைப் பார்த்துட்டு, ‘ஒரு நிகழ்ச்சி யைத் தனியா தொகுத்து வழங்க முடியுமா’னு கேட்டாங்க. நானும் `ஓகே’ சொன்னேன். அப்படித்தான் யதேச்சையா மீடியா வாய்ப்பு கிடைச்சது. நான் படிச்சதுக்கும் பார்க்கிற வேலைக்கும் சம்பந்தமே இல்ல.’

``எனக்கு  சினிமா  வாய்ப்பு வேண்டாம்!’’ - `விஜே’ ரேஷ்மா!

‘’அப்படியா... என்ன படிச்சிருக்கீங்க?’’

‘’நான் எம்.ஏ, பி.எட் படிச்சிருக்கேன். பி.எட் படிக்கும்போது ஒரு அரசுப் பள்ளியில் நாற்பது நாள்கள் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித் தரணும். நான் அங்கே போனதும் குழந்தைகள் என்கூட நல்லா மிங்கிள் ஆகிட்டாங்க. பயிற்சி முடிஞ்சதும் ஸ்டூடண்ட்ஸ்கிட்ட `கிளம்புறேன்’னு சொன்னேன். ‘டீச்சர், நீங்க போக வேண்டாம் இங்கேயே இருங்க'ன்னு சொன்னாங்க. `நான் இங்கே வேலை பார்க்க முடியாது'ன்னு எவ்வளவு சொல்லியும் கேட்கல. ஹெச்.எம்-கிட்டயும் போய் என்னை இருக்க வைக்க சொல்லியிருக்காங்க. அந்த அளவுக்கு என் மேல ஸ்டூடண்ட்ஸ் உயிரா இருந்தாங்க. காரணம், நான் பாடம் சொல்லிக் கொடுக்கிற விதம். பெரும்பாலும் பணத்துக்காக மட்டுமே தனியார் பள்ளிக்கூடங்களை நடத்துறாங்க. நானும் ஒரு தனியார் பள்ளியில் ஒரு வருஷம் வேலை பார்த்திருக்கேன். வேலை பிடிக்காம கிளம்பி வந்துட்டேன். ஆசிரியர் பணி என்றால், அது கண்டிப்பா அரசுப் பள்ளியில்தான் என்பதில் உறுதியா இருக்கேன்.’’

``உங்க குடும்பம்...’’

‘`திருமணம் ஆகிடுச்சு. என் கணவர் பெயர் ஹுமாயூன் பாஷா. அவர் தனியார் கம்பெனியில் வேலை பார்க்கிறார். எங்களுக்குப் பத்து மாதத்தில் அயான் என்கிற ஆண் குழந்தை இருக்கு.’’

``சினிமா வாய்ப்பு வந்ததா?’’

``நிறைய வாய்ப்புகள் வந்தன. ஆனா, எனக்கு சினிமாவுல நடிக்கிற ஆர்வம் இல்லை. வேண்டாம்னு சொல்றதுக்கு ஆடைக்குறைப்பு, பாதுகாப்பின்மை என நிறைய காரணங்கள் இருக்கு. அதனால முன்னெச்சரிக்கையாக விலகிட்டேன். என்னைப் பொறுத்தவரை வாழ்க்கை நிம்மதியா இருந்தா போதும்’’ என்கிறார் ரேஷ்மா.

``முதலையோட சண்டை போட்டிருக்கேன்!’’

``எனக்கு  சினிமா  வாய்ப்பு வேண்டாம்!’’ - `விஜே’ ரேஷ்மா!

ன் டி.வி-யில் ஒளி பரப்பாகிவரும் `விதி’ சீரியலில் பாசிட்டிவ் ரோலில் நடித்துவருகிறார் தேவிப்ரியா.

``இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கு. எனக்கு அதிகமா வர்றதெல்லாம் வில்லி கதாபாத்திரம்தான். ஒரு சில சீரியலில் நெகட்டிவ் ரோலில் நடிச்சா, `இவங்களுக்கு இதுதான் வரும்’னு முடிவு பண்ணிட றாங்க. அதையும் தாண்டி நடிப்புத் திறமையால நிறைய வித்தியாசமான ரோல் கிடைச்சது.

எனக்கு போலீஸ் ரோல் என்றால் ரொம்ப பிடிக்கும். சன் டி.வி-யில் ஒளிபரப்பான ‘சொர்க்கம்’ சீரியலில் போலீஸா நடிச்சிருந்தேன். 2006-ம் வருஷம் அந்தக் கதாபாத்திரத்துக்காக மாநில விருதை கலைஞர் கையால வாங்கினேன். கலைஞர் டி.வி ‘ரோமாபுரி பாண்டியன்’ வரலாற்றுத் தொடரில் நடிச்சேன். குதிரையில் ஏறுவது, கையில் போர்வாள் வைத்து சண்டை போடுவது என பல விஷயங்களை அசால்ட்டா செய்திருக்கேன். வரலாற்று நாடகத்தில் ஆண் கதாபாத்திரத்திலும் நடிச்சிருக்கேன். முதலையோட சண்டைபோடுறது மாதிரி எல்லாம் நடிச்சிருக்கேன். அப்படி ஆர்வத்தோட நடிக்கும்போது நாமே அந்தக் கதாபாத்திரமா மாறிடுவோம். இன்னும் நிறைய வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கணும்... அசத்தணும்’’ என்கிறார் உற்சாகமாக.

சந்தானம் கொடுத்த ஸ்வீட் சர்ப்ரைஸ்! 

``எனக்கு  சினிமா  வாய்ப்பு வேண்டாம்!’’ - `விஜே’ ரேஷ்மா!

`ஜீ தமிழ்' சேனலில் ஒளிபரப்பான ‘ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ்’ டைட்டில் வின்னர் அஷ்வந்த். இந்தக் குட்டிப்பையன், அதே சேனலில் ஒளிபரப்பாகிவரும் ‘மெல்லத் திறந்தது கதவு’ சீரியலில் கலக்கிக்கொண்டிருக்கிறார். இவருக்கு ஆனந்த அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் நடிகர் சந்தானம். அவரது வீட்டுக்கு அஷ்வந்த் குடும்பத்தை அழைத்திருக்கிறார். அவர்களுடன் கலகலவெனப் பேசியவர், அஷ்வந்துக்கு டாக்கிங் ரோபோ பொம்மையை கிஃப்ட்டாக கொடுத்ததோடு, தன் படத்திலும் வாய்ப்பு அளித்திருக்கிறாராம். தினமும் அந்தப் பொம்மையோடுதான் அதிக நேரம் செலவிடுகிறாராம் அஷ்வந்த். அந்தச் சந்தோஷத்தில் திக்குமுக்காடுகிறது அஷ்வந்த் குடும்பம்!

வாசகிகள் விமர்சனம்

கேட்டு ரசிக்க!


வி
ஜய் டி.வி-யில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 5.30க்கு முனைவர் சுந்தர ஆவுடையப்பனும் முனைவர் இறையன்பும் ’வாழ்க்கையே ஒரு வழிபாடு’ என்ற தலைப்பில் வாழ்க்கையை எப்படி வாழ்ந்தால் அது வழிபாடாக அமையும் என்று பல அரிய கருத்துகளை முன் வைக்கிறார்கள். எல்லோரும் பார்த்துப் பயன்பெற வேண்டிய நிகழ்ச்சி இது!

- எஸ்.மங்கையர்கரசி, நெய்வேலி-3

திக்.. திக் சூப்பர்!

`ஜீ தமிழ்’ தொலைக்காட்சியில்் வருகிற `டான்ஸிங் கில்லாடிஸ்’ நிகழ்ச்சி பிரமாதமாக இருக்கு.  கிட்டு டான்ஸ் பண்ணியது த்ரில்லிங்காக இருந்தது. அப்பப்பா கரணம் தப்பினால் மரணம் என்பார்களே... அதுபோல இருந்தது. பார்க்ப் பார்க்க அந்த நான்கு நிமிடங்களும் திக்.. திக் சூப்பர் கில்லாடிஸ்!

- ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி-6