Published:Updated:

இனியும் இது தொடரக்கூடாது!

இனியும் இது தொடரக்கூடாது!
பிரீமியம் ஸ்டோரி
இனியும் இது தொடரக்கூடாது!

பெற்றோர் கவனத்துக்கு... - கு.ஆனந்தராஜ்

இனியும் இது தொடரக்கூடாது!

பெற்றோர் கவனத்துக்கு... - கு.ஆனந்தராஜ்

Published:Updated:
இனியும் இது தொடரக்கூடாது!
பிரீமியம் ஸ்டோரி
இனியும் இது தொடரக்கூடாது!

‘`குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்  அதிகரிச்சுட்டே இருக்கு. குழந்தைகளின் பால்யத்தில் நிகழும் இந்த மாதியான குற்றங்கள் அவங்களோட மனசை ரணமாக்கி, திருமண வாழ்க்கையின் சந்தோஷத்தைப் பறிச்சு, ஆயுசுக்கும் அவங்களைத் துரத்தும் துயரமா அமைஞ்சிடுது. அப்படி நான் பார்த்த, கேட்ட, ஆதங்கப்பட்ட, இந்தப் பிரச்னையைதான்  ‘பேர்ட்ஸ் ஆஃப் ப்ரே’ (Birds of Prey)’ நாவல்ல எழுதியிருக்கேன்’’ - அழுத்தமாகப் பேசும் அர்ச்சனா சரத், தூத்துக்குடியில் பிறந்து, இப்போது மும்பையில் வசிக்கும் எழுத்தாளர். 

இனியும் இது தொடரக்கூடாது!

‘`தூத்துக்குடியில் பிறந்தாலும் ஸ்கூல், காலேஜ் படிச்சதெல்லாம் சென்னையிலதான். சின்ன வயசுல இருந்தே எழுத்து மேல ரொம்ப ஆர்வம். பி.காம்., சார்ட்டட் அக்கவுன்டன்ட் பயிற்சி முடிச்சுட்டு, கல்யாணத்துக்குப் ப்ிறகு கணவரோட வேலை காரணமா மும்பைல செட்டில் ஆகிட்டேன்.  அந்த நேரத்துல நான் படிச்ச குழந்தைக் கடத்தல், சைல்டு அப்யூஸ் பற்றிய செய்திகள் ரொம்ப ஆற்றாமையா உணர வெச்சது. எழுத்தையே இதற்கான ஆயுதமாக்கி என் பணியைத் தொடங்கினேன்’’ என்கிற அர்ச்சனா, தன் நாவலைப் பற்றியும் கூறுகிறார்.

``இதுக்கு முன்னாடி குடும்பப் பிரச்னைகள், சமூகக் குற்றங்கள் பற்றி மூன்று புத்தகங்களை எழுதியிருக்கேன். நான்காவதாக, குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறைகள் பற்றி் நான் எழுதிய புத்தகம்தான்... ‘பேர்ட்ஸ் ஆஃப் ப்ரே’.

என் தோழிகள் சிலர், அவங்க சின்ன வயசுல பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்பட்டதையும் அதை பெற்றோர்கிட்ட சொல்லவும் முடியாம, மறக்கவும் முடியாம தவிச்சதையும் சொல்லி இருக்காங்க. நம்ம சமூகத்துல தொடர் கதையான அந்தக் குற்றம் பற்றி ஒரு மெசேஜ் சொல்லும் விதமாகத்தான் இதை எழுதினேன். 

இனியும் இது தொடரக்கூடாது!

கதைப்படி, சின்ன வயசுல இருந்து இளம் பருவம் வரை தன் வளர்ப்புத் தந்தையால பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு, அச்சம்பவங்களால் மனமுடைந்து திருமணமே செய்துகொள்ளாமல், ஒரு பள்ளியில் கேன்டீன் ஊழியரா வேலை பார்க்குறாங்க ஒரு பெண். தனக்கு நடந்த அதே கொடுமையை நிறையக் குழந்தைகள், பெண்கள் எதிர்கொள்வதைப் பார்த்துக் கவலைப்பட்டு, இனியும் இது தொடரக்கூடாதுன்னு நினைக்கிறாங்க. அதன் தொடர்ச்சியா மூன்று ஆண்களைக் கடத்திடுறாங்க. பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதால ஏற்பட்ட மனப்போராட்டம் ஒரு பெண்ணை எந்த நிலைக்குத் தள்ளுது என்பதை த்ரில்லராகச் சொல்லியிருக்கிறேன்’’ என்று சொல்லும் அர்ச்சனா,

‘`இந்த நாவலைப் படித்த பெண்கள் பலர், ‘எங்களுக்கும் இதுபோல சின்ன வயசுல நடந்திருக்கு. அதிலிருந்து வெளிவர முடியாம இருந்தோம். ஆனா, இதைப் படிச்ச பிறகு நல்ல தெளிவு கிடைச்சிருக்கு’னு சொன்னாங்க. இதை எழுதியதில், இரண்டு குழந்தைகளின் அம்மா என்கிற முறையில், எனக்குப் பெருமையும் கூட!’’ என்கிறார். இந்த நாவலை விரைவில் தமிழிலும் வெளியிட இருப்பதைக் கூறும்போது  அர்ச்சனாவின் முகத்தில் பளிச்சிடுகிறது பூரண திருப்தி!

தினமும் பேசுங்கள்...

‘`குழந்தைகள் ஏதேனும் பாலியல் சீண்டலை எதிர்கொள்ளும்பட்சத்தில், அது சரியா, தப்பா, தன் உடல் உறுப்புகளை எந்தப் பெயர் சொல்லிச் சொல்வது, நடந்த சம்பவத்தை யாரிடம் சொல்வது, எப்படிச் சொல்வது... இப்படிப் பல குழப்பங்களில் திணறுவார்கள். பெற்றோர் ரெண்டு பேருமே வேலைக் குச் செல்லும் குடும்பங்களில் குழந்தைகளுடனான உரையாடல் குறைஞ்சுட்டே வருது. பேசினாலும் அது குழந்தைகள் நலன் சார்ந்ததாக இருப்பதில்லை.

ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைங்களிடம் ‘இன்னிக்கு என்னவெல்லாம் நடந்துச்சு, புதுநபர் யாராவது பழகினாங்களா, என்ன பேசினாங்க, எப்படி நடந்துகிட்டாங்க’ன்னு பக்குவமாகக் கேட்கணும். உடலில் ஏற்படும் மாற்றங்கள் பற்றியும் பாலியல் கல்வியை எல்லாம் அவங்க வயசுக்குப் புரியும்படியும் சொல்லிக் கொடுக்கணும். குறிப்பா, நெருங்கிய உறவினரே ஆனாலும், குழந்தையைத் தொட்டுப் பேசவோ, முத்தம் கொடுக்கவோ அனுமதிக்கக் கூடாது. இயல்புக்கு மாறா ஒரு விஷயம் நடந்தால், அதை உடனே அப்பா, அம்மாகிட்ட வந்து சொல்ற இணக்கமான சூழலைப் பெற்றோர்தான் உருவாக்கணும்...” என்கிறார் அர்ச்சனா சரத்.