தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

நமக்குள்ளே!

நமக்குள்ளே!
பிரீமியம் ஸ்டோரி
News
நமக்குள்ளே!

நமக்குள்ளே!

ன்று மட்டும் எப்போதுமே விளங்காததாகவே இருக்கிறது...

நமக்குள்ளே!அந்த அமைப்பு அரசாங்கத்தின் ஓர் அங்கம்; மக்களைக் காப்பாற்றுவதற்காக உருவாக்கப்பட்டது. ஆனால், மக்களை அடித்து நொறுக்குவது, அடித்துத் தூக்கில் தொங்கவிடுவது, பெண்களைப் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்குவது போன்ற விஷயங்களை அசராமல் செய்துகொண்டே இருக்கிறது. என்னதான் அரசாங்கத்துக்குக் கட்டுப்பட்ட, ஆட்சியாளர்களின் உத்தரவுகளுக்கு ஏற்ப நடைபோடுகிற ஒரு துறையாக இருந்தாலும், அந்தத் துறையினர் அணியும் காக்கி உடைகளுக்குள் இருப்பதும் மனித இதயம்தானே... அது இத்தனை கடினமான கல்லாகவா மாறும்?!

திருப்பூரில் டாஸ்மாக் மதுக்கடையைத் தங்கள் குடியிருப்புப் பகுதிக்குள் அமைக்கக் கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்து நடந்த போராட்டத்தில் பங்கேற்ற  ஈஸ்வரி என்ற பெண்ணின்  கன்னத்தில், அந்தப் பகுதியின் கூடுதல் போலீஸ் கமிஷனர் பாண்டியராஜன் ஓங்கி அறையும் காட்சி... திரும்பத் திரும்ப உலுக்கி எடுக்கிறது. `இவரெல்லாம் பெண்ணின் வயிற்றில்தான் பிறந்தாரா?' என்று கொந்தளிக்க வைக்கிறது.

அந்தப் பெண்ணும் அங்கே கூடியவர்களும் வைத்த கோரிக்கை... `எங்களின் நிம்மதியான வாழ்க்கையை உறுதிப்படுத்துங்கள்' என்பது மட்டும்தானே? குடிமக்களின் வாழ்வுரிமைக்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் `நாடெங்கிலும் உள்ள தேசிய, மாநில நெடுஞ்சாலைகளின் இருபுறமும் 500 மீட்டர் தொலைவுக்குள் இருக்கும் மதுபானக் கடைகளை அகற்ற வேண்டும்' என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் நிலையில்தான், இந்த மக்களும் தங்கள் கோரிக்கையை வலுவாக முன்னெடுத்தனர். பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பைப் பற்றி  கொஞ்சம்கூட நினைத்துப் பார்க்காமல்... குடியிருப்புப் பகுதிகள், பள்ளிக்கூடங்கள், வழிபாட்டுத் தலங்கள், பொதுவழிகள் என்று புதிதாக மதுக்கடைகளை அரசாங்கம் திறக்க ஆரம்பித்திருப்பதுதான் பிரச்னைக்குக் காரணம்.

`ஒரு நபர் குடிப்பது, அவருடைய தனிமனித சுதந்திரம்' என்று சொல்லிக்கொண்டாலும், அவருடைய தாய், மனைவி, பிள்ளைகள் என அத்தனை பேரும் துயரத்துக்கு ஆளாகும்போது, இதை `தனிநபர் சுதந்திரம்' என்பது ஏமாற்று வேலையே! ஒட்டுமொத்தக் குடும்பத்தின் சுதந்திரத்தை மட்டுமல்லாமல், வாழ்க்கையையே சீரழித்துவிடுகிறது இந்தக் குடி. இத்தகையக் கொடுமைக்குக் காரணமாக இருக்கும் டாஸ்மாக் கடைகளை எதிர்க்காமல், பெண்கள் அனைவரும் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களோ ஆட்சியாளர்கள்?! 

உரிமையுடன்,

நமக்குள்ளே!

ஆசிரியர்