தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

சேவை இங்கே தேவை!

சேவை இங்கே தேவை!
பிரீமியம் ஸ்டோரி
News
சேவை இங்கே தேவை!

முகங்கள்த.ராம் -

மூக சேவைக்காக பத்மஸ்ரீ விருது பெற்றவர் விவேகானந்தா கேந்திராவின் அகில இந்திய துணைத் தலைவர் நிவேதிதா ரகுநாத் பிடே. இந்திய கலாசாரம், கல்வி, பண்பாடு, ராமகிருஷ்ணர், ஏக்நாத், விவேகானந்தர், பெண்கள் முன்னேற்றம் குறித்தெல்லாம் எட்டுப் புத்தகங்களை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். அவை தமிழ், இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. கன்னியாகுமரி, விவேகானந்தா கேந்திராவில் அவரைச் சந்தித்தோம். அவர் பேச்சில்  மழலைத் தமிழ் கொஞ்சியது.

சேவை இங்கே தேவை!

‘`என் பூர்விகம் மகாராஷ்டிர மாநிலம் வார்்தா. ஏழு குழந்தைகள் கொண்ட நடுத்தரக் குடும்பம். அப்பா ரகுநாத் போஸ்ட் ஆபீஸ் வேலையில் இருந்தார். அவர் பல்வேறு அமைப்புகளுடன் சேர்ந்து சமூக சேவையில் ஈடுபட்டு வந்ததோடு, ஏழை மாணவர்களுக்கு இலவச ட்யூஷனும் எடுத்து வந்தார். மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்கிற என் பெற்றோரின் எண்ணமே, என்னையும் சமூக சேவையின் பக்கம் திருப்பியது.

‘திருமணம் வேண்டாம்... சமூக சேவைக்குப் போகிறேன்’ என்று நான் சொன்னபிறகு,  நீண்ட காலத்துக்கு என் அம்மா அழுதுகொண்டே இருந்தார். இன்று என் பெற்றோர் உயிருடன் இல்லை. உடன்பிறந்தவர்களும் வேறு வேறு இடங்களில் வசிக்கிறார்கள். இப்போது என் குடும்பம், விவேகானந்த கேந்திராவும் நாட்டு மக்களும்தான்” என்றவர், தான் சேவைக்கு வந்ததைப் பற்றி்யும் பகிர்ந்துகொண்டார்.

``நான் 11-வது படிக்கும்போதே சேவைதான் என் எதிர்காலம் என்று முடிவெடுத்ததால், விவேகானந்தா கேந்திராவில் ஆயுள்கால உறுப்பினராகச் சேர முடிவெடுத்தேன். ஆனால், டிகிரி முடித்திருக்க வேண்டும் என்பது அதற்கான தகுதி நிர்ணயம். அதனால், பி.எஸ்ஸி முடித்ததும், கேந்திராவுக்கு வந்து சேர்ந்தேன். பின்னர் எம்.ஏ, பி.எட் படித்தேன்.

19 வயதில் விவேகானந்தா கேந்திராவின் ஆயுள்கால தொண்டராகச் சேர்ந்தேன். 1978-ம் ஆண்டு கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தா கேந்திராவுக்கு வந்த பின், இந்த அமைப்பின் கிராம முன்னேற்றத் திட்டத்தில் பொறுப் பாளராகவும், அருணாசலப் பிரதேசம், அஸ்ஸாம், அந்தமான், நாகலாந்து மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் கேந்திர வித்யாலயா பள்ளிகளின் செயலாளராகவும் தொண்டாற்றினேன். 1999-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த யுனெஸ்கோ உலகக் கல்வி நிபுணர்கள் மாநாட்டில் இந்தியாவின் சார்பில் கலந்துகொண்டேன்'' என்கிற நிவேதிதா, 1999 முதல் 2005 வரை விவேகானந்தா கேந்திராவில் தேசிய அளவிலான ஆசிரியர்கள் அமைப்பின் பொதுக்குழு உறுப்பினராகவும், கல்வியறிவு இல்லாதவர்களுக்குக் கல்வி போதிக்கும் பணியாளராகவும்  செயல்பட்டிருக்கிறார். இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள  சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று இந்திய கலாசாரம், பண்பாடு குறித்து விழிப்புஉணர்வு ஏற்படுத்தியுள்ளார்.

‘‘முன்பெல்லாம் வீட்டில் ஏழு, எட்டு குழந்தைகள் இருப்பார்கள். இன்று ஒற்றைக் குழந்தையைக்  கொண்ட குடும்பங்கள் உருவாகிக் கொண்டிருப்பதால், சமூகத் தொண்டு செய்ய வருபவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.

இங்கே சம்பளம் கிடையாது என்பதால் சேவைக்கு வருகிறவர்களுக்குக் குடும்பப் பொறுப்பு இருக்கக் கூடாது. 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். சுவாமி விவேகானந்தர் சொன்ன சமூக முன்னேற்றம், பொருளாதார முன்னேற்றம், ஆன்மிக முன்னேற்றம் ஆகியவற்றை அனைவரின் மனதிலும் கொண்டுவர வேண்டும். ஜல்லிக்கட்டுப் போராட் டத்தின்போது ஏற்பட்ட இளைஞர் எழுச்சி நாட்டின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் எழ வேண்டும்.”

கைகள் கூப்பி சேவைக்கு அழைக்கிறார் நிவேதிதா.