Published:Updated:

78 இயர்ஸ் யங்!

78 இயர்ஸ் யங்!
பிரீமியம் ஸ்டோரி
78 இயர்ஸ் யங்!

ஆர்.வைதேகிஉற்சாகம் -

78 இயர்ஸ் யங்!

ஆர்.வைதேகிஉற்சாகம் -

Published:Updated:
78 இயர்ஸ் யங்!
பிரீமியம் ஸ்டோரி
78 இயர்ஸ் யங்!

ஷா சோமன்... பிரபல பாலிவுட் நடிகர் மிலிந்த் சோமனின் அம்மாவாகப் பலருக்கும் பரிச்சயமானவர். சமீபகாலமாக அதைத் தாண்டிய இன்னொரு அடையாளத்துடன் கவனம் ஈர்க்கிறார். `தி கிரேட் இந்தியா ரன்' ஓட்டத்தில் மகன் மிலிந்த் சோமனுடன் உஷா சோமனும் சேர்ந்து ஓடிய செய்தியும் படங்களும் வைரலான பிறகே உஷாவின் ஃபிட்னெஸ் வரலாறு வெளியே தெரிய வந்திருக்கிறது. அவரைத் தேடிப் பிடித்துத் தொடர்புகொண்டால், அநியாயத்துக்குக் கூச்சப்படுகிறார்.

78 இயர்ஸ் யங்!

``மும்பையில ஒரு காலேஜ்ல பயோகெமிஸ்ட்ரி புரொஃபசரா இருந்து ரிட்டயர் ஆனேன். வேலை பார்த்துட்டிருந்தவரைக்கும் வாக்கிங் போறதைத் தவிர ஃபிட்னெஸ் பத்தி நினைச்சதுகூட இல்லை. ரிட்டயர்மென்ட்டுக்குப் பிறகு எனக்கு ஃபிசிக்கல் ஆக்டிவிட்டி எதுவும் இல்லை யோனு தோணினது. ஃபிட்னெஸ் விஷயத்துல என்னை மிலிந்த்தான் என்கரேஜ் பண்ணினான். மிலிந்த் `பிங்க்கத்தான்' ஆரம்பிச்சபோது அதுல நான் வாக் பண்ணினேன். அப்புறம் ட்ரெக்கிங்ல ஈடுபாடு வந்தது...'' - சொல்லும்போது குழந்தையைப் போலக் குதூகலிக்கிறார் உஷா சோமன்.

78 இயர்ஸ் யங்!

``ட்ரெக்கிங்ல ஆர்வம் உள்ளவங்களை என்கரேஜ் பண்ணிக் கூட்டிட்டுப் போகிற அட் வென்ச்சர் கம்பெனி மூலமா ட்ரெக்கிங் போறேன். 14 ஆயிரம் அடி உயரமுள்ள தபோவன்தான் நான் ட்ரெக்கிங் பண்ணின முதல் இடம். அடுத்த வருஷம் எவரெஸ்ட் பேஸ் கேம்ப், அதுக்கடுத்த வருஷம் அன்னபூர்ணா பேஸ் கேம்ப், அப்புறம் கிளிமாஞ்சாரோ வரைக்கும் போனேன். ட்ரெக்கிங் பண்ணும்போது கிடைக்கிற எனர்ஜி வேற லெவல்!'' என்கிற உஷா, `60 பிளஸ்'ஸில் மிகவும் ஆக்டிவாக மாறியது பற்றி என்ன நினைக்கிறார்?

78 இயர்ஸ் யங்!

``ட்ரெக்கிங் பத்திக் கேள்விப்பட்டபோது ரொம்ப உற்சாகமா இருந்தது. மலைகளோட படங்களைப் பார்த்தேன். அந்த இயற்கை அழகு என்னைக் கவர்ந்திழுத்தது. உடனே கிளம்பிடலாமான்னு நினைக்க வெச்சது. அதுவரைக்கும் எனக்கு ட்ரெக்கிங் பத்தி எதுவும் தெரியாது. எனக்கு அப்போ வயசு 60-க்கு மேல். என்கூட ட்ரெக்கிங் பண்ணப்போறவங்களுக்கு என்ன வயசு, எப்படிப்பட்ட பின்னணியிலேருந்து வரப்போறாங்கன்னு எந்த ஐடியாவும் இல்லை. அவங்களே என்னைக் கூட்டிட்டுப் போகத் தயாரா இருந்தபோது எனக்கென்ன தயக்கம்?  ட்ரெக்கிங் க்ரூப்ல இப்பவும் நான்தான் வயதில் மூத்தவள். எனக்கு அதைப் பத்தியெல்லாம் எந்தக் கவலையும் இல்லை. சட்டுனு மாறும் வானிலையையும், மாறிக்கிட்டே இருக்கிற மலைகளோட உயரங்களையும்,  கடந்து போகிற பாதையில உள்ள தாவரங்களையும் விலங்குகளையும், பறவைகளோட சத்தங்களையும் ரசிச்சபடி நடக்கும்போது வேற எந்தச் சிந்தனையுமே தோணாது. உலகமே மறந்துடும்...'' - உஷாவின் விவரிப்பில் நமக்கும் அந்த ஆர்வம் பற்றிக்கொள்கிறது.

உஷாவின் இத்தனை உற்சாகத்தின் பின்னணியிலும் இருப்பவர்கள் அவரது மகனும் மகள்களும்.

``எனக்கு நாலு பசங்க. மிலிந்த் தவிர எனக்கு நேத்ரா, நேதா மற்றும் அனுபமான்னு மூணு மகள்கள். என் கணவர் சோமன் 1996-ல தவறிட்டார். நானும் என் நாலு குழந்தைங்களும் நல்ல ஃப்ரெண்ட்ஸ்.  எல்லாரும் கல்யாணமாகி செட்டிலாயிட்டாங்க.

வாக்கிங் போறது எனக்கும் என் மகள்களுக்கும் ரொம்பப் பிடிக்கும். ஆக்ஸ்ஃபாம்னு ஒரு புராஜெக்ட். ஒவ்வொரு வருஷமும் அவங்க ஒரு நிகழ்ச்சி நடத்தறாங்க. 48 மணி நேரத்துல 100 கிலோமீட்டர் தூரம் நடக்கணும். அது குழுவா சேர்ந்து நடக்கற புரோகிராம். நானும் என் மூணு மகள்களும் அதுல கலந்துப்போம். நேரமிருக்கும்போது மிலிந்தும் எங்ககூட சேர்ந்துப்பான். இன்னிக்கு நீங்க என்னைத் தேடிப் பிடிச்சுப் பேசறதுக்கும், மீடியாவுல என் பெயர் பிரபலமானதுக்கும் காரணமே என் மகன்தான். `வயசைப் பொருட்படுத்தாம புதுசு புதுசான விஷயங்களை முயற்சி பண்ணு'ன்னு என்னை என்கரேஜ் பண்றவன் அவன்தான்...'' - மீண்டும் மீண்டும் மகன் புகழ் பேசுபவர், மகனுடன் ஓடி வைரலான அந்த போட்டோ பற்றியும் விளக்குகிறார். 

78 இயர்ஸ் யங்!

````தி கிரேட் இந்தியா ரன்' நிகழ்வுக்காக மிலிந்த் அந்தமான்லேருந்து மகாராஷ்டிரா பார்டர்ல வந்திட்டிருந்தபோது நான் அவனைப் பார்க்கப் போயிருந்தேன். அப்பதான் மழை பெய்த ஈரத்தோடு, சுத்தமா, அழகா இருந்த சாலை என்னைக் கவர்ந்தது. நானும் என் மகனோடு சேர்த்து ஓட ஆரம்பிச்சுட்டேன். அப்ப நான் சேலை கட்டிக்கிட்டிருந்தேன். காரை ஓரமா நிறுத்திட்டு, செருப்பைக் கழற்றி வீசிட்டு, வெறும் கால்களோடு ஓட ஆரம்பிச்சேன். அந்த போட்டோ மீடியாவுல பரவி என்னைப் பிரபலமாக்கிடுச்சு...'' என்கிறவரின் வார்த்தைகளில் கூச்சம் கலந்திருந்தது.

ஓய்வுக்காலத்தைச் சிரமமானதாக நினைக்கிற சீனியர் சிட்டிசன்களே அதிகம். உஷாவோ அது வரம் என்கிறார். எப்படி?

78 இயர்ஸ் யங்!

``நான் நிறைய படிக்கிறேன். படங்கள் பார்ப்பேன். ட்ராவல் பண்றேன். வேலைக்குப் போயிட்டிருந்தபோது இருந்ததைவிட அதிக உற்சாகத்தோட இருக்கேன்; பிஸியா இருக்கேன்.

ரிட்டயர்மென்ட் வரப்போகுதுங்கிற யதார்த்தத்தை முன்கூட்டியே ஏத்துக்கணும். வேலைக்குப் போயிட்டிருக்கும்போது பண்ண முடியாத விஷயங்களில், பொழுதுபோக்குகளில் ரிட்டயர்மென்ட்டுக்குப் பிறகு முழுமூச்சா ஈடுபடலாம். உங்க மனசையும் நேரத்தையும் செலுத்தற மாதிரியான விஷயங்கள் ஏராளமா இருக்கு. `இத்தனை வயசுக்குப் பிறகு என்ன செய்ய முடியும்?'னு நினைக்க வேண்டாம். ஒரு விஷயத்தை முயற்சியே பண்ணாம, அது முடியாதுன்னு நினைக்கிறது சரியில்லை.

78 இயர்ஸ் யங்!

இளமைங்கிறது வயசு சம்பந்தப்பட்டது இல்லை; மனசு சம்பந்தப்பட்டது. நீங்க இளமையா இருக்கிறதா உங்க மனசு நம்பணும். அதுதான் முக்கியம். நாளையப் பத்திக் கவலைப்படாதீங்க. அது நிச்சயமில்லாதது. இன்னிக்கு... இந்த நிமிஷம்தான் நிஜமானது. அந்த நிஜப்பொழுதை ரசிச்சு வாழப் பழகுங்க...''

- சந்தோஷ வாழ்க்கைக்கான சீக்ரெட்ஸ் சொல்பவரிடம் அந்தக் கேள்வியையும் தவிர்க்க முடியாமல் கேட்டோம்....

``ஹவ் ஓல்டு ஆர் யூ மேடம்?''

``78 இயர்ஸ் யங்'' என வருகிறது பதில்.