Published:Updated:

தாய்மையை மீட்கும் தருணங்கள்!

தாய்மையை மீட்கும் தருணங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
தாய்மையை மீட்கும் தருணங்கள்!

சாஹாகலை

தாய்மையை மீட்கும் தருணங்கள்!

சாஹாகலை

Published:Updated:
தாய்மையை மீட்கும் தருணங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
தாய்மையை மீட்கும் தருணங்கள்!
தாய்மையை மீட்கும் தருணங்கள்!

யிருக்குள் உயிர் சுமக்கும் தாய்மைத் தருணங்கள் திரும்ப வராதவை. தாய்மை நினைவுகளைக் காலத்துக்கும் அசைபோடச் செய்யவே ‘பிரெக்னென்சி போட்டோகிராபி’ அறிமுகமானது. வெளிநாடுகளில் பிரபலமான இந்தப் புகைப்பட ஆர்வம், சமீப காலமாக நம்மூரிலும் பரவத் தொடங்கியிருக்கிறது.

பிரெக்னென்சி போட்டோகிராபியே அரிதாக இருக்கிற நிலையில், அரிதினும் அரிதாக அதில் அசத்திக்கொண்டிருக்கிறார் ஓர் ஆண். சவால்கள் நிறைந்திருந்தாலும் அவை ரசனைக்குரியவையாகவே இருப்பதாகச் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் விவேக் யுவராஜ்,

தாய்மையை மீட்கும் தருணங்கள்!

``படிச்சது கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங். அப்புறம் கொஞ்ச நாள் நண்பர்களோட பிசினஸ் பண்ணிட்டிருந்தேன். பிறகு சினிமா தேடல். என் நண்பர்களில் சிலர் போட்டோகிராபியில ஆர்வம் உள்ளவங்க.  அவங்ககூட வெளியூர்களுக்குப் போகும்போது, அவங்க  போட்டோ எடுக்கிற நுணுக்கங்களைக் கவனிச்சதாலே, போட்டோகிராபி பத்தின ஐடியா கிடைச்சது. வெடிங் போட்டோகிராபி பண்ற ஃப்ரெண்ட்கூட ஒரு கல்யாணத்துக்குப் போயிருந்தேன். அந்தக் கல்யாணத்தை  போட்டோ எடுத்துக்கிட்டிருந்த என் நண்பன், அஞ்சு நிமிஷம் கேமராவை என் கையில கொடுத்துட்டுப் போயிருந்தான். அப்போ சும்மா இருக்காமா, அங்கே நடந்த சில காட்சிகளை நான் எடுத்துட்டிருந்தேன். அந்த அஞ்சு நிமிஷம் என் வாழ்க்கையில பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திச்சு. வெடிங் போட்டோகிராபியில பிசியா இருந்த நேரம்... நான் வெடிங் போட்டோஸ் எடுத்த ஒரு தம்பதி, அவங்களோட கர்ப்ப காலத்தை போட்டோ எடுத்துத் தர முடியுமானு கேட்டாங்க. அப்போ அதைப் பத்தி எனக்கு எந்த ஐடியாவுமே இல்லை. அதெல்லாம் என்னால பண்ண முடியுமானு யோசிச்சேன். அவங்க ரொம்ப வற்புறுத்திக் கேட்டதால தயக்கத்தோடவே சம்மதிச்சேன். சாதாரண ஆட்களை இப்படி போஸ் பண்ணுங்க, அப்படிப் பண்ணுங்கன்னு சொல்லலாம். கர்ப்பிணிகிட்ட எப்படிச் சொல்றதுன்னு கொஞ்சம் பயமாகவும் இருந்தது. ஆனா, அவங்க ரொம்ப நல்லா ஒத்துழைச்சாங்க.  அந்த அனுபவம் அடுத்தடுத்து பிரெக்னென்சி போட்டோகிராபியில ஸ்பெஷலைஸ் பண்ற ஆர்வத்தையும் அதிகரிச்சுடுச்சு...கர்ப்ப காலத்தையோ, பிறந்த குழந்தையையோ போட்டோ எடுக்கக்கூடாதுங்கிற சென்ட்டி மென்ட் இன்னும் நம்ம மக்களுக்கு இருக்கு. காலப்போக்குல இது மாறும்...’’ - வருத்தப்படாத வாலிபராகச் சொல்கிறார் விவேக். 

தாய்மையை மீட்கும் தருணங்கள்!

``குழந்தையை எதிர்பார்க்கிற அந்தப் பயணம் கணவன், மனைவி ரெண்டு பேருக்குமே இனிமையானது. அதனால கர்ப்ப கால போட்டோகிராபியிலயும் அவங்க ரெண்டு பேரும் இருக்கிற மாதிரி எடுக்கிறதைத்தான் நான் விரும்புவேன். அப்படி ஜோடியா எடுக்கும்போது நானே எதிர்பார்க்காத அளவுக்கு அருமையான ஷாட்ஸ் கிடைக்கிறதுண்டு.

இந்த உலகத்துலயே அற்புதமான உறவு தாய். பிரெக்னென்சி போட்டோகிராபி பண்ண ஆரம்பிச்ச பிறகு, எனக்கு எங்கம்மா மேலயே மரியாதையும் அன்பும் அதிகரிச்சுருக்குனுதான் சொல்வேன்... ஒவ்வொரு தாயும் தெய்வம்னு உணரச் செய்திருக்கிற அருமையான அனுபவம் இது...’’ மனதிலிருந்து சொல்கிறார் மாண்புமிகு மகன்.