Published:Updated:

நாய் கடிச்சா லட்சாதிபதி!

 நாய் கடிச்சா லட்சாதிபதி!
பிரீமியம் ஸ்டோரி
News
நாய் கடிச்சா லட்சாதிபதி!

இது புதுசுமோ.கிஷோர்குமார்

செல்லப்பிராணிகளில் நாய்கள் எப்பவுமே ஸ்பெஷல்தான். மனிதனின் முதல் நண்பன் நாய் என்று கிட்டத்தட்ட எல்லா மொழிகள்லயும் சொல்லப்பட்டிருக்காம். மேற்கத்திய நாடுகளில் நாய்கள் வளர்ப்புக்கு எத்தனை  சட்டங்கள், சலுகைகள் இருக்கின்றன, என்று தெரியுமா?   

 நாய் கடிச்சா லட்சாதிபதி!

இங்கிலாந்தில் நாய் வளர்ப்புக்கும் பராமரிப்புக்கும் பயன்படும் வகையிலான சட்டங்கள் நிறையவே இருக்கின்றன. அப்படியான சுவாரஸ்யமான சட்டங்கள் குறித்து லண்டன்வாசிகள் சிலரிடம் திரட்டிய அதிரிபுதிரி தகவல்கள் இங்கே.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நாய்கள் பாஸ்போர்ட்!

குடும்பத்தோடு வெளிநாடுகளுக்கு டூர் போக வேண்டியிருக்கும் நேரத்துல நாயை என்ன பண்ணுறதுன்னு கவலைப்படத் தேவையில்லை. முறையா மருத்துவப் பரிசோதனை செஞ்சு, நாய்க்கு எந்த நோயும் இல்லைன்னு உறுதி செஞ்சபிறகு பாஸ்போர்ட் அப்ளை பண்ணலாம். நம்ம வீட்ல ஒருத்தனைக் கையோட கூட்டிட்டுப் போறதுதானே புத்திசாலித்தனம்.

நாய் கடிச்சா ஃபீல் பண்ணாதீங்க!


நாய் கடிச்சாலோ, கடிக்க முயற்சி செஞ்சாலோ, நாய் கடிச்சுடும்னு எதிரே வருபவர் பயந்தாலோகூட  சில பல லட்சங்களை நஷ்டஈடா கேட்டு வாங்க முடியும். ஹாஹா... இப்ப தெரியுதா?  பக்கத்து வீட்டு நாய் கடிச்சுட்டா ஃபீல் பண்ணாதீங்க. அது கடிச்ச அடுத்த செகண்டே  நீங்க லட்சாதிபதி ஆகிடுவீங்க!

இங்கே மாட்டுக்கு ஆதார்!  அங்கே நாய்களுக்கு மைக்ரோ சிப்!


லண்டனில் எங்கேயுமே தெரு நாய்கள் கிடையாது. அதனால எல்லா வீட்டு நாய்களுக்கும் மைக்ரோ சிப் பொருத்தணும்னு விலங்குகள் நலவாரியம் அறிவிச்சிருக்கு.  நாய்களுக்கு வலிக்காம, மைக்ரோ சிப் பொருத்த கோடிகளை செலவழிச்சிருக்கு இங்கிலாந்து அரசாங்கம். இந்த மைக்ரோ சிப் மூலமா நாய்கள் திருட்டுப்போவதைத் தடுக்க முடியுதாம். வாவ் ஸ்வீட்!

தடை செய்யப்பட்ட நாய்களை வெச்சிருந்தா ஜெயிலு ஜெயிலுதான்!

சில வகை நாய்களைத் தடை செய்யப்பட்ட நாய்களாக அரசு சொல்லியிருக்கு. Pit Bull Terrier, Japanese Tosa, Dogo Argentino, Fila Brasiliero போன்ற நாய்களை வைத்திருந்தாலோ, இவற்றோடு மற்ற சாதாரண ரக நாய்களை இனப்பெருக்கம் செய்ய வைத்தாலோ கடுமையான தண்டனைகள் கிடைக்குமாம். கொஞ்சம் போனஸாக, வாரண்ட் எதுவும் இல்லாமல் நாயோடு சேர்த்துக் கைது செய்து ஜெயிலுக்கு அனுப்பவும் சான்ஸ் இருக்கு.

பீ கேர்ஃபுல்!

இன்ஷூரன்ஸ் !


நாய்களுக்கும் மனிதர்களைப் போலவே ஏகப்பட்ட இன்ஷூ ரன்ஸ் சலுகைகள் இருக்கு. சிறு விபத்து நடந்தாலோ, நாய் சம்பந்தப்பட்ட உடைமைகள் எதுவும் தொலைந்து போனாலோ தாராளமாக க்ளைய்ம் பண்ணிக் கலாம். வாரே வாவ்!

நாய்களுக்கு ஷாப்பிங் !


மாசத்துல இருக்கிற நாலு வீக்கெண்டுல ஒரு வீக்கெண்டை நாய்களுக்கு ஷாப்பிங் போக ஒதுக்கிடுவாங்க. நாய்களுக்கான  உணவுப்பொருள்கள், விளை யாட்டுப் பொருள்கள், குளிக்க சோப்பு, ஷாம்பு, குளிர்காலத்துல ஸ்வெட்டர், புதுத்துணின்னு  ஒரே ஜமாய்தான்!  ஆனா, இதுக்கெல்லாம் பெரிய செலவு ஆகிடுமோன்னு பயப்பட வேண்டாம். நம்ம ஊர் கணக்குல  ஒரு மாசத்துக்கு சுமார் 25 ஆயிரத்துல இருந்து  50 ஆயிரம் ரூபாய் வரைக்கும் தான். கூல்!

இப்ப சொல்லுங்க... இந்த லண்டன் நாய்கள் மேல லைட்டா    பொறாமையா இருக்கா?!