Published:Updated:

மொழி - சில்லாக்ஸ்!

மொழி - சில்லாக்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
மொழி - சில்லாக்ஸ்!

தீபா ராம்

மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் இருந்து வெளிவர மேற்கொள்ளும் ஒரு சிறிய இளைப்பாறலே Chillaxing.  ‘chilling’, ‘relaxing’ என்ற வார்த்தை களின் திரிபுதான் Chillaxing.  

மொழி - சில்லாக்ஸ்!

போலி வலைதள முகவரியுடன் இயங்கும் ஓர் ஏமாற்று நிறுவனத்தின் வலைப்பக்கம்தான் Flog. A fake blog என்பதன் சுருக்கம்தான் Flog.

சாப்பிட்ட சுவையான உணவைப் பற்றி சிலாகித்து அதைப் பற்றிய விரிவான சமையல் குறிப்புடன் தங்களது தனிப்பட்ட அனுப வங்களைத் தொகுத்து எழு தும் கட்டுரைதான் Foodoir (‘food’ and ‘memoir’).

தொலைக்காட்சி நிகழ்ச்சி களைச் சிறிய காணொலிக் காட்சியாக (Short video) இணையத்தில் ஒளிபரப்பு செய்வதே Webisode (Web ப்ளஸ் episode).  பிரபலமான தொலைக்காட்சி சீரியல்கள் இன்றைக்கு நேயர்களுக்காக Webisode-களாக உலவு வதை நாமறிவோம்.

Skort... பெண்கள் அணி யும் ஒரு வித்தியாசமான ஆடையான இது, பார்ப்பதற்கு Skirt போல இருக்கும். ஆனால், Shorts போல நடுவில் ஒரு பிரிவு இருக்கும். இன்றைய பெண்கள் இதை Palazzo என்கிற பெயரில் அணி கிறார்கள்.   

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மொழி - சில்லாக்ஸ்!

Icon என்பது கணினியில் காணப்படும் சிறிய அடையாளப் படம். எடுத்துக்காட்டாக Facebook எனும் முகநூலின் Icon F எனும் வெள்ளை எழுத்தில் இருப்பதை நாம் அறிவோம். ஒருவருக்கு மிகவும் பிடித்த
Favourite icon-தான் Favicon. உங்களுக்குப் பிடித்த வலைதளத்தை bookmark செய்ய Favicon-ஐப் பயன்படுத்தலாம்.

வேலை ஏதும் செய்யாமல் விளையாட்டு வேடிக்கைகளில் பொழுதைக் கழித்து சுகம் காணும் சிலரை Funemployed என்று கேலியாகச் சொல்வதுண்டு. ‘fun’ and ‘unemployed’ ஆகிய இரு வேறு வார்த்தைகளின் கலவையே Funemployed.