Published:Updated:

வாழ்வை மாற்றிய புத்தகம் - சங்கச்சித்திரங்களும் இன்றைய காந்தியும்!

வாழ்வை மாற்றிய புத்தகம் - சங்கச்சித்திரங்களும் இன்றைய காந்தியும்!
பிரீமியம் ஸ்டோரி
News
வாழ்வை மாற்றிய புத்தகம் - சங்கச்சித்திரங்களும் இன்றைய காந்தியும்!

சாஹா - படம்: பா.காளிமுத்து

‘`எட்டு, ஒன்பது, பத்தாம் வகுப்புகளிலேயே ஜெயகாந்தனின் அத்தனை புத்தகங்களையும் படித்திருந்தேன். லா.ச.ரா, ஜானகிராமன், சுந்தர ராமசாமி என சீரியஸ் எழுத்தாளர்களின் புத்தகங்களையும் படித்துக்கொண்டிருந்தேன். இன்ஜினீயரிங் படிப்பு, வேலை எனப் போன பிறகு வாசிப்பில் ஓர் இடைவெளி விழுந்தது. அந்தத் தொடர்பை மீண்டும் எனக்கு ஏற்படுத்தியது விகடனில் தொடராக இடம்பெற்றுப் புத்தகமாக வெளிவந்த ‘சங்கச்சித்திரங்கள்’. 

வாழ்வை மாற்றிய புத்தகம் - சங்கச்சித்திரங்களும் இன்றைய காந்தியும்!

அதைப் படிக்கிற வரை, சங்கப் பாடல்கள்மீது எனக்கு லேசான எள்ளல்கூட இருந்தது. திரும்பத் திரும்ப ஒரு தோழி வருகிறாள்... காதலன் வருகிறான் என நினைத்திருக்கிறேன். புறநானூற்றை எடுத்துக் கொண்டால், அதில் எவ்வளவு வன்முறை? எவ்வளவு ரத்தம்? இதனாலேயே அவற்றின்மீது  எனக்குப் பெரிய மரியாதை இருந்ததில்லை. `சங்கச்சித்திரங்கள்'தான்  இலக்கியத்தை எப்படி ரசிக்க வேண்டும் என்கிற பார்வையைக் கொடுத்தது. அதில் ஜெயமோகன் எழுதியிருப்பார்... ‘இலக்கியத்தில் இருந்து வாழ்க்கையைக் கற்கவே முடியாது. வாழ்க்கையில் இருந்துதான் இலக்கியத்தைக் கற்க வேண்டும்’ என்று. ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் வாழ்க்கையில் நடக்கிற விஷயங்களை அந்தப் பாடல்களோடு பொருத்திப் பார்க்கிறபோது, இரண்டாயிரம் வருடங்களாக மானுட உணர்ச்சி கள், ஒரு விஷயத்தைப் பற்றி நாம் நினைக்கிற சிந்தனைகள்... இவை  எவையுமே மாறவில்லை என்கிற திறப்பை அந்தப் புத்தகம்தான் ஏற்படுத்தியது.    

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
வாழ்வை மாற்றிய புத்தகம் - சங்கச்சித்திரங்களும் இன்றைய காந்தியும்!

அதில், ‘யாயும் ஞாயும் யாராகியரோ’ என நாமெல் லாம் படித்த ஒரு பாடலைப் பற்றி ஜெயமோகன் எழுதி இருந்தார். அதில் ‘செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே’ என்ற வரியை ஒரு கல்யாணப் பத்திரிகையில் அச்சடித் திருந்தார்களாம். அதைப் பார்த்த சாத்தூர் விவசாயி ஒருவர், தமிழாசியர் ஒருவரிடம், ‘அப்படியென்றால் என்ன அர்த்தம்?’ எனக் கேட்டாராம். உடனே அவர்      செம்மை நிலத்தில் நீர் வழிகிறபோது, அந்த  நீர், சிவப்பு நிறத்தைக் கொள்வதுபோல தலைவன் மனமும் தலைவியின் மனமும் கலந்துவிட்டன என விளக்கம் சொல்லியிருக்கிறார். விவசாயிக்கு அந்த விளக்கம் பிடிக்கவில்லையாம். ‘அதெப்படி... சிறிது நேரம் கழித்து அந்தத் தண்ணீரின் நிறம் மாறிவிடுமே’ என விவசாயி யோசிக்கிறாராம். அதற்கு ஜெயமோகன் கேட்கிறார்... ‘செம்புலம் என்பதை பாலை நிலம் என நாம் வைத்துக் கொள்ளலாமா? சிவப்பான மண் என எடுத்துக் கொள்ள வேண்டாம். செம்புலம் என்றால் பாலை. ஒரு பாலை நிலத்தில் மழை பெய்தால், அது எப்படி ஆக்ரோஷமாக அதை உள்வாங்குமோ... அதுபோல அவர்கள் இருவரின் மனமும் கலந்திருந்தது என இதைச் சொல்லலாம் இல்லையா?’ என எழுதிவிட்டு, ‘கலித்தொகைக்கு உரை எழுதிய அனந்தராம ஐயர் இப்படித்தானே விளக்கம் சொல்கிறார்’ என்றும் எழுதியிருந்தார் ஜெயமோகன். அந்த வரிகள் என்னை உலுக்கின. ஏனெனில், அனந்தராம ஐயர்தான் என் கொள்ளுத்தாத்தா. கலித்தொகைக்கு அவர் உரை எழுதியது தெரியுமே தவிர, அந்தப் புத்தகத்தின் ஒரு பிரதிகூட எங்கள் குடும்பத்தில் யாரிடமும் இல்லை. என் இலக்கியத் தேடலுக்கு எங்கள் குடும்பத்திலேயே ஒருவர் இருந்திருக்கிறார் எனத் தெரிந்ததும், அவர் யார், அவர் வாழ்ந்த வாழ்க்கை என்ன, அவர் எழுதியது என்ன என்றெல்லாம் தேடிப் போன பயணத்துக்கும் அந்த வரிதான் காரணமாக இருந்தது.

என் வாழ்க்கையை மாற்றிய  இன்னொரு புத்தகம், ஜெயமோகனின் ‘இன்றைய காந்தி’.

நானும் என் கல்லூரி நாள்களில், இந்த நாட்டின் எல்லா பிரச்னைகளுக்கும் காரணம் காந்திதான் என்று பேசிக் கொண்டிருந்தேன். நம் நாட்டில் மிக அதிகம் விமர்சிக்கப்பட்ட தலைவர் அவர். அவரின்ம்ீது வைக்கப்பட்ட பல விமர்சனங் கள் ஒருதலைப்பட்சமானவை, அவரைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் வைக்கப்பட்ட கருத்துகள்.    

வாழ்வை மாற்றிய புத்தகம் - சங்கச்சித்திரங்களும் இன்றைய காந்தியும்!

காந்தியம் என்பது முழுவதும் காலாவதியாகிவிட்ட தத்துவம் என நினைக்கிற காலகட்டத்தில், ஒரு தேசத்தின்  வரலாறு, ஒரு தனி மனிதரால் எப்படி முழுமையாக, புதிதாகச் சமைக்கப்பட்டது எனத் தெரிந்துகொள்ள விரும்பு வோர், இந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டும். நம்முடைய சில பார்வைகளுக்கான மறு பரிசீலனைகளுக்காக எப்போதும் கதவுகளைத் திறந்தே வைத்திருக்க வேண்டும். எதுவுமே முடிந்த முடிவல்ல. 20 வயதில் மிகத் தீவிரமாக நினைக்கிற ஒரு விஷ யம் குறித்து 40 வயதில் `சரியில்லை' என்கிற முடிவுக்கு வரலாம். அது தவறல்ல... இயல்பானது.  அப்படித்தான் காந்தியின்மீது நான் வைத்திருந்த எதிர்மறை விமர்சனங்களை முழுமையாக மாற்றி, அவர் மேல் ஒரு பிரமிப் பையும் பெரிய மரியாதையை யும் ஏற்படுத்தியது ‘இன்றைய காந்தி’ புத்தகம். வரலாற்றை எப்படித் திறந்த மனதுடன் படிக்க வேண்டும் என்கிற கருத்தாக்கத் தையும் கொடுத்தது இந்தப் புத்தகம்தான்!''