Published:Updated:

செல்லங்கள் இல்லாத வாழ்வென்ன வாழ்வு!

செல்லங்கள் இல்லாத வாழ்வென்ன வாழ்வு!
பிரீமியம் ஸ்டோரி
News
செல்லங்கள் இல்லாத வாழ்வென்ன வாழ்வு!

பேரனுபவம்கு.ஆனந்தராஜ் - படங்கள்: ரா.வருண் பிரசாத்

‘`என் வீட்டுல 23 குழந்தைங்க இருக்காங்க. ஒருநாள்கூட இவங்களை விட்டு என்னால பிரிஞ்சிருக்கவே முடியாது’’ என நெகிழ்ச்சியாகக் கூறும் மல்லிகா ஏஞ்சலா சவுத்ரி,  தான் வளர்த்துவரும் 23 நாய்களையும் குழந்தைகள் என்றே அன்போடு அழைக்கிறார். ``எல்லாரும் ஓடிவாங்கடா... உங்களை போட்டோ எடுக்க வந்திருக்காங்க” என்கிறவரின் குரல் கேட்டு,  ஓடிவந்து சூழ்ந்துகொள்கின்றன அவரின் செல்லக் குழந்தைகள்.   

செல்லங்கள் இல்லாத வாழ்வென்ன வாழ்வு!

“நான் பிறந்தது கேரளான்னாலும், வளர்ந்ததெல்லாம் கனடாவுலதான். அங்கே தியேட்டர் ஆர்ட்டிஸ்டா இருந்தேன். நிறைய படங்கள்லயும், ஷார்ட் ஃபிலிம்கள்லயும்கூட நடிச்சிருக்கேன். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி சென்னை வந்து செட்டில் ஆனேன். இப்ப சினிமா, மாடலிங் வேலைகள்ல பிஸியா இருக்கேன். சின்ன வயசுலயே எங்க வீட்டுல ரெண்டு, மூணு நாய்களை வளர்த்து வந்ததால, இவங்க மேல எப்பவுமே ஒரு பாசம் இருந்துட்டே இருக்கும். இவங்க மேல எனக்கிருந்த அக்கறையைப் பார்த்து தெரிஞ்சவங்க நிறையபேர், அவங்களோட நாய்களைப் பராமரிக்க முடியாம என்னைத் தத்தெடுத்துக்கச் சொல்லிக் கேட்டாங்க. அப்படி வளர்க்க ஆரம்பிச்சதுதான் இந்த செல்லக் கூட்டணியின் ரகசியம்” எனச் சிரிக்கும் மல்லிகா, செல்லங்களுக்காகத் தன் வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்ட விதம் பற்றிக் கூறுகிறார்... 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
செல்லங்கள் இல்லாத வாழ்வென்ன வாழ்வு!

``ஒரு ரூமுக்கு ஆறு, ஏழு செல்லங்கள்னு மொத்தம் மூணு ரூம்ல 23 பேரை வளர்க்கிறேன். நான் இல்லாத நேரம், ரூமுக்கு ஒரு பராமரிப் பாளர்னு மூணு பேர் அவங்களைப் பார்த்துக்கு வாங்க. அதுங்களுக்குக் கோபம் வந்தா, சில நாள்களுக்குச் சரியா சாப்பிடாம, பேசாம(!) இருந்திடுவாங்க. அதுதான் எனக்குப் பெரிய தண்டனை’’ என்கிறவர்  செல்லங்களைக் குளிப்பாட்டுவது தொடங்கி, கழிவுகளைச் சுத்தம் செய்வது வரை அத்தனை வேலைகளையும் சந்தோஷமாகச் செய்கிறார்.

“ரெண்டு, மூணு நாளைக்கு ஒருமுறை இவங்க எல்லோரையும் குளிப்பாட்டிவிடுவது, ஒருநாள்விட்டு ஒருநாள் எல்லோரையும் வாக்கிங் கூட்டிட்டுப்போறது, பீரியட்ஸ் டைம்ல  அதற்கேற்ப பராமரிக்கிறதுனு எல்லா வேலைகளையும் செய்வேன். இதனால, தாய்ப்பாசம்னா என்னன்னு என்னால கல்யாணத்துக்கு முன்பே உணர முடியுது. 

செல்லங்கள் இல்லாத வாழ்வென்ன வாழ்வு!

`நாய்களைக் கடிப்பதற்குப் பழக்கப் படுத்தணும்’னு சொல்வாங்க. ஆனா, அதை நான் விரும்பறதில்லை. நானும் என் உதவியாளர்களும் எங்களோட தனிப்பட்ட மனநிலையை இவங்க மேல காட்டவே மாட்டோம். நாம பாசமா இருந்தா,  இவங்களும் அதேமாதிரி நடந்துக்குவாங்க’’ என்கிறவர், `கூண்டுக்குள் அடைத்து வைப்பது, சங்கிலியால் கட்டிவைப்பது போன்ற செயல்கள் நாய்களுக்குக் கோபக்குணத்தை அதிகரிக்கும்' என்பதால், எல்லாவற்றையும் தனித் தனியே ஏ.சி-யுடன் கூடிய அறைகளில் சுதந்திரமாக உலவவிட்டிருக்கிறார். இந்தச் செல்லங்களை எவ்வித வணிக நோக்கத்துக்கும் இவர் பயன்படுத்துவதில்லை.

“உருவத்துல சிறியதா இருக்கிற `பாப்பிலான்’ நாய் வகையை அமெரிக்க நண்பர் ஒருவர் என்னிடம் பாது காக்கச்சொல்லி கொடுத்தார். அந்தச் செல்லக்குட்டியை இந்தியாவுக்கு கொண்டுவரவே ரெண்டரை லட்சம் செலவாச்சு. அறுபது கிலோ எடைகொண்ட `செயின்ட் பெர்னார்டு’ங்கிற பெயர் கொண்ட வரோட விலைகூட லட்சங்கள்லதான். இவர் கொரியாவுல இருந்து வந்தவர். இன்னும் சைபீரியன் ஹஸ்கி, கோல்டன் ரெட்ரைவர், பிரெஞ்சு புல்டாக்னு விலையுயர்ந்த பலரும் இருக்காங்க.

செல்லங்களோட பழகுறதே ஒரு பேரனுபவம்தான். பிரபலங்கள், ஐ.டி ஊழியர்கள் உள்பட பலரும் அவங்களோட மன அழுத்தம் குறையதுக்காக எங்க வீட்டுக்கு வந்து விளையாடிட்டுப் போவாங்க. ‘பெட் தெரபி’ நல்ல பலனைக் கொடுக்கும் என்பதால் ஆட்டிஸம் குறைபாடுள்ள குழந்தைகளையும் இங்க அழைச்சுட்டு வருவாங்க. இந்த மாதிரியான விஷயங்கள் எல்லாம் எதையோ சாதிச்ச உணர்வை எனக்குக் கொடுக்குது.   கடவுள் புண்ணியத்துல என்னால இத்தனை குழந்தைகளையும் மகிழ்ச்சியான சூழல்ல வளர்க்க முடிஞ்சிருக்கு. வெளிநாட்டுல இருந்து தமிழ்நாட்டுக்கு வந்த எனக்கு, இப்போ இத்தனை பாசக்காரப் புள்ளைங்க கிடைச்சிருக்காங்க. இந்தச் செல்லங்கள் இல்லாத வாழ்க்கையை இனி என்னால நினைச்சுக்கூடப் பார்க்க முடியாது.’’

செல்லங்கள் இல்லாத வாழ்வென்ன வாழ்வு!

நெகிழ்ச்சியுடன் தன் செல்லக் குழந்தைகளைக் கட்டியணைத்து முத்தமிடுகிறார் மல்லிகா ஏஞ்சலா சவுத்ரி.