Published:Updated:

தரணியெங்கும் தாவணி!

தரணியெங்கும் தாவணி!
பிரீமியம் ஸ்டோரி
News
தரணியெங்கும் தாவணி!

ஃபேஷன்ஸ்ரீலோபாமுத்ரா

பாரம்பர்யமான தாவணி களை லேக்மே ஃபேஷன் வீக் வின்டர் ஃபெஸ்டிவலில் ட்ரெண்டியாகக் காட்சிக்குவைத்து கவனம் ஈர்த்தவர் சன்ஜீக்தா தத்தா. கற்பனைத்திறன், திறமை மற்றும் புதியனவற்றை அறிந்துகொள்ளும் ஆர்வம்... இவற்றினால் ஃபேஷன் உலகில் அடியெடுத்து வைத்து இன்று பல கோடி ரூபாயில் வியாபாரம் செய்யும் வெற்றிப் பெண். அசாமில் வசிக்கும் அவரை அவள் விகடனுக்காகச் சந்தித்தோம். ‘`வாவ்... தாவணி ஸ்பெஷல் தமிழ்நாடு!” என்று மகிழ்ச்சியுடன் வரவேற்றார். 

தரணியெங்கும் தாவணி!

‘`சிறுவயதில் தாவணியின் அழகும் வனப்பும் என்னைக் கிறங்கடித்தன. எட்டாம் வகுப்பு படிக்கும்போது முதன்முதலில் தாவணி அணிந்தேன். நான் பொறியியல் பட்டம் பெற்றபின் பல ஆண்டுகள் அசாம் மாநிலப் பொதுப் பணித்துறையில் பொறியாளராகப் பணிபுரிந்தேன். திருமணம், குழந்தை என அடுத்த கட்டத்துக்குப் பயணித்த வேளையில், திடீரென ஒரு ஸ்பார்க் மனதில் உதித்தது. `மறைந்துகொண்டே வந்த தாவணியை, இன்றைய பெண்களின் விருப்பத்துக்கு ஏற்ப அப்டேட் செய்து கொடுத்தால் ஹிட் ஆகும்’ என்று எண்ணினேன். அதனால், தாவணியில் புதுமைகளைச் சேர்த்து டிசைன் செய்வதுடன் தயாரித்து விற்பனைச் செய்வதை முழுநேரத் தொழிலாகச் செய்ய உத்தேசித்தேன். கைநிறைய சம்பளம் கிடைக்கும் அரசு வேலையை நான் ராஜினாமா செய்வதை என் உறவினர்கள் பலரும் ஏற்கவில்லை. ஆனால் என் கணவரும் மகளும் என் முடிவுக்கு ஆதரவு தெரிவித்து, என்னுடன் இணைந்து பணிபுரிந்து தொழில் வளர்ச்சியில் இன்றுவரை உதவுகின்றனர்’’ எனும்போது அவர் முகத்தில் அளவில்லாத மகிழ்ச்சி. 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
தரணியெங்கும் தாவணி!

‘`2012-ல் பதினைந்து லட்சம் ரூபாய் முதலீட்டில் மூன்று தறிகளுடன் தொழிலைத் தொடங்கினேன். நானும் என் கணவரும் நெசவாளர்களை நேரடியாகச் சந்தித்து அவர்களுக்குத் தேவையான உணவு, உறைவிடம், ஊதியம், மருத்துவச் செலவு மற்றும் குழந்தைகளின் கல்விச் செலவு ஆகியவற்றை ஏற்றுக்கொள்ள உத்தரவாதம் அளித்தோம். நெசவாளர்கள் மகிழ்ச்சியுடன் பணிபுரிய சம்மதித்தனர். நல்ல அனுபவம் பெற்ற பெண்கள் பலரும் கலைநயத்துடன் நல்ல டிசைன்களை உருவாக்கு
வதில் கவனம் செலுத்து கின்றனர்’’ - தன் வெற்றியை  தொழிலாளர்களுக்கும் பகிர்ந்தளிக்கிறார் சன்ஜீக்தா.  

தரணியெங்கும் தாவணி!

‘`தரத்தில் சிறந்த தாவணி களைத் தயாரிக்க வேண்டும் என்பதால் மூலப்பொருள்களை அசாமில்  உள்ள குறிப்பிட்ட ஒரு கிராமத்தில் இருந்து கொள்முதல் செய்வதை ஒரு கொள்கையாகவே பின்பற்றுகிறோம்’’ என்பவர், தொடர்ந்து சினிமா பிரபலங்களை அழைத்துவந்து பல நகரங்களில் ஃபேஷன் ஷோக்களை நடத்தி, புத்தம் புதிய டிசைன்களை அறிமுகம் செய்து வருகிறார்.  

தரணியெங்கும் தாவணி!

‘`லேக்மே ஃபேஷன் வீக்கில் பட்டுத் தாவணிகளைக் காட்சிக்கு வைத்தது பெரிய திருப்புமுனையாக அமைந்தது. தாவணிகள் நம் கலாசாரத்தோடு பின்னிப் பிணைந்தவை. அவற்றில் கூடுதல் வசீகரம் சேர்த்து, அணிவதற்கும் வசதியான வகையில் டிசைன் செய்தபோது, வீட்டு விசேஷங்கள், பண்டிகைகள், திருவிழாக்கள் போன்ற பல நிகழ்வுகளுக்கும் பெண்கள் அதை `டிக்’ செய்ய ஆரம்பித்தனர். பெங்களூரு, டெல்லி, மும்பை போன்ற பெருநகரங்களில் வசிப்
பவர்கள்கூட தாவணிகளை விரும்பி வாங்கி உடுத்துகின்றனர். பல்வேறு மாநிலக் கலாசாரங்களுக்கும் பொருந்தும் வகையில் எங்கள் தாவணி டிசைன்கள் இருப்பதே இதற்குக் காரணம்’’ என்று சொல்பவர், அசாம் மாநிலச் சுற்றுலாத் துறையின் உதவியோடு உலகெங்கும் தாவணியைக் கொண்டு சேர்க்கிறார். அதோடு, www.sanjuktasstudios.com என்கிற வலைதளத்தில் தாவணிகளைக் காட்சிப்படுத்துகிறார்.  

தரணியெங்கும் தாவணி!
தரணியெங்கும் தாவணி!

``ஆரம்பித்த ஐந்து வருடங் களுக்குள் விற்பனை பல மடங்கு பெருகியிருப்பதால், இப்போது நூற்றுக்கும் அதிக தறிகளை  ஏராள மான பணியாளர்களுடன் நடத்தி வருகிறேன்” என்கிறார் சன்ஜீக்தா, தாவணியின் பார்டரில் எக்ஸ்ட்ரா வேலைப்பாடுகள் சேர்க்கும் தன் புதிய டிசைனைக் கணினியில் மெருகேற்றியபடி!