Published:Updated:

வாழ்க்கை வாழ்வதற்கே! - கலை வாழ்வில் கலக்கம் எதற்கு?

வாழ்க்கை வாழ்வதற்கே! - கலை வாழ்வில் கலக்கம் எதற்கு?
பிரீமியம் ஸ்டோரி
News
வாழ்க்கை வாழ்வதற்கே! - கலை வாழ்வில் கலக்கம் எதற்கு?

வே.கிருஷ்ணவேணி - யாழ் ஸ்ரீதேவி - ஷோபனா எம்.ஆர் - மு.பார்த்தசாரதி

மிழ்த் திரைப்பட நட்சத்திரங்களான ஷோபா, சில்க் ஸ்மிதா, மோனல் உள்ளிட்ட நடிகைகளின் தற்கொலைகளில் ஆரம்பித்து, சமீபகாலமாகச் சின்னத்திரையிலும் வெள்ளித்திரையிலும் நடிகர், நடிகைகள் பலர் மன அழுத்தம் காரணமாகத் தற்கொலை செய்துகொள்வது அதிகரித்து வருகிறது.  வைஷ்ணவி, சபர்ணா, சாய் பிரசாந்த், முரளி மோகன் என அடிக்கடி நீளும் அந்தப் பட்டியல் அதிர்ச்சியளிக்கிறது.    

வாழ்க்கை வாழ்வதற்கே! - கலை வாழ்வில் கலக்கம் எதற்கு?

நடிகைகள் ஈட்டிய புகழும் பணமும் ஏன் அவர்கள் பிரச்னைக்குத் தீர்வைத் தருவதில்லை? நட்சத்திர வாழ்வை வெறுத்து, தற்கொலை செய்துகொள்ள அவர்களைத் தூண்டுவது எது?

காரணங்களையும் தீர்வுகளையும் முன் வைக்கிறார் உளவியல் நிபுணர் சுரேகா... ``பொதுவாகக் கலைஞர்கள் உணர்வுரீதியாக முடிவெடுப்பதாலேயே உணர்ச்சிவசப்பட்டு வாழ்வையே முடித்துக்கொள்கிறார்கள். உளவியல் ஆலோசனைக்காகச் சின்னத்திரை நடிகர், நடிகைகள் பலர் என்னை அணுகுவதுண்டு. பெரும்பாலும் பாலியல் தொந்தரவுகளை அவர்கள் மனதிடத்துடன் கையாண்டுவிடுகிறார்கள். ஆனால், அவர்களிடம் பொதுவான மூன்று பிரச்னைகளைப் பார்க்க முடிகிறது. தொழில்ரீதியான அழுத்தம், பொருளாதார அழுத்தம், சமூக மற்றும் குடும்ப உறவுச் சிக்கல்கள் என ஏதேனும் ஒரு பாதிப்பு இருக்கிறது.  

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
வாழ்க்கை வாழ்வதற்கே! - கலை வாழ்வில் கலக்கம் எதற்கு?

பொருளாதாரச் சிக்கல் சின்னத்திரை நடிகர் - நடிகைகளின் வாழ்வில் மிகப்பெரிய அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. எளிமையான வாழ்க்கையை அவர்கள் வாழ முடியாது. அது வரவுக்கு மீறிய செலவாகி, கடன் வாங்கவைத்து, அதைத் திருப்பித்தர முடியாமல் திணறவைக்கிறது. வாய்ப்பில்லாத நேரத்தில் புதிய வாய்ப்பு தேடவும் செலவாகும்.

`என்றாவது ஒருநாள்  எப்படியேனும் பெரிய திரை நட்சத்திரம் ஆகிவிட வேண்டும்' என்கிற அழுத்தம் ஒரு பக்கம்... யதார்த்தம் தரும் வலி மறுபக்கம். இவையெல்லாம் திரண்டு வரும் நேரம் அவர்கள் தற்கொலை எண்ணத்துக்குத் தள்ளப் படுகிறார்கள்.

இவற்றையெல்லாம்விட உறவுச் சிக்கல்கள்தான் நடிகைகள் தற்கொலை முடிவெடுக்கப் பிரதான காரணமாக அமைகின்றன. காதல் விஷயத்தில் நடிகைகள் சட்டென உடைந்துபோகக் கூடியவர்களாக இருப்பார்கள். பொது சமூகத்திலும் காதல், துரோகம் போன்ற விஷயங்கள் எல்லாம் இருக்கின்றன என்றாலும், அவற்றை நடிகைகள் எதிர்கொள்ளும்போது துரோகத்தைக் கடக்க முடியாமல் இருப்பதற்குக் காரணம், சம்பந்தப்பட்டவர்கள்மீது வைத்த அதீத நம்பிக்கையே.

எல்லோரையும்போல அனைத்து உணர்வுகளுடனும் வாழ நடிகைகளுக்கும் உரிமை  இருக்கிறது.   அவர்களின் வாழ்க்கையை ஊடகங்கள் பெரிதுபடுத்தாமல் இருக்க வேண்டும். `ஊடகங்களில் நம் பெயர் தவறாக வந்துவிடுமே' என்கிற அழுத்தமும், சில நேரங்களில் தற்கொலை எண்ணத்தை அதிகரிக்கிறது.    

வாழ்க்கை வாழ்வதற்கே! - கலை வாழ்வில் கலக்கம் எதற்கு?

இதற்குத் தீர்வுதான் என்ன?

ஒரு பிரச்னை என்றால், `அதை யாரிடமும் சொல்லாமல் நாமே சமாளித்துவிடலாம்' என்று எண்ணி அதிக மன அழுத்தத்தை உருவாக்கிக் கொள்ளக் கூடாது. நடிப்புத்துறைக்கு அப்பாற்பட்ட ஓர் உண்மையான நட்பை தனக்கென்று வைத்திருக்க வேண்டும். பிரச்னை என்று வரும்போது தனக்குள் மருகாமல், நம்பிக்கையானவர்களிடம் பகிர்ந்துகொண்டு, ஆறுதலும் ஆலோசனை யும் பெறலாம். மிகச் சிக்கலான பிரச்னை எனில் மனநல ஆலோசகர் அல்லது மனநல மருத்துவரை அணுகலாம்.
நம்மைக் காதலிப்பதாகச் சொல்லி, அன்பாகப் பழகிய ஒருவர் இப்போது விலகு கிறார் என்றால், ஒன்று அவரிடம் தவறு இருக்கிறது அல்லது அது நம்மிடம் இருக்கிறது என்று அர்த்தம். அதை மூளை பலத்தால் அணுகிச் சரிசெய்ய முயற்சிக்க வேண்டும். அதுவும் கைமீறிப்போனால் வேலைக்கு ஒரு பிரேக் விட்டுச் சொந்த ஊருக்கோ, நண்பர்களின் வீடுகளுக்கோ சென்று பத்து நாள்கள் இருந்துவிட்டு வந்தால் புதிதாக உணரலாம். போதைப் பழக்கங்கள் இருந்தால், அதை உடனடியாக கைவிட வேண்டும்''  என்கிறார் சுரேகா.  

வாழ்க்கை வாழ்வதற்கே! - கலை வாழ்வில் கலக்கம் எதற்கு?

``காதல், திருமணம், குழந்தை பிறப்பு, பிரேக்-அப், விவாகரத்து, வன்கொடுமை... எல்லாத் தரப்பினருக்கும் நடக்கிற இந்த விஷயங்கள்தான், நடிகைகளின் வாழ்க்கையிலும் நடக்குது. இங்கே நம்மை கைதூக்கிவிட்டு காப்பாற்ற யாரும் வர மாட் டாங்க. எந்தப் பிரச்னையா இருந்தாலும் அதற்குத் தற்கொலை தீர்வு ஆகாது. நடிகைகள் தங்களை தாங்களே எம்பவர் பண்ணிக்கணும். அதுதான் தீர்வு’’ என்கிறார் நடிகை வினோதினி.

``பிரச்னைகள் இல்லாத மனிதர்கள் யாரும் இல்லை. நடிகைகள்தான் அதிகமா உளவியல் சிக்கலுக்கு ஆளாகறாங்கன்னு சொல்ல முடியாது'' என்கிறார் நடிகை நீலிமா ராணி.

``சின்னத்திரைத் தொழில்ல ஏழு, எட்டு மாசம்கூட வேலையில்லாமல் இருக்கும். திடீர்னு பிஸியாகிடுவோம். ஏழு வருஷம் ஃபீல்டை விட்டுப்போனவங்க எல்லாம் மீண்டும் வாய்ப்பு கிடைச்சுக் கலக்கிட்டு இருக்காங்க. `நமக்கும் வாய்ப்பு வரும்... நம்முடைய திறமையை நிரூபிக்கக்கூடிய சந்தர்ப்பம் வரும்' என்ற பாஸிட்டிவ் எனர்ஜியோட இருந்தாலே தற்கொலை எண்ணம் அண்டாது'' என்கிறார்  சின்னத்திரை நடிகர்கள் சங்கத் தலைவர் சிவன் ஸ்ரீனிவாஸ்.

``தற்கொலைக்கு முயன்றேன்...  இப்போது மாறிவிட்டேன்!''

“மிகவும் கஷ்டப்பட்டு மீடியாவுக்குள்ள வந்தேன். ‘நாதஸ்வரம்’, ‘வள்ளி’, ‘சொந்த பந்தம்’, ‘சரவணன் மீனாட்சி’ என நல்லா போயிட்டிருந்த என் கரியர் ஒரு கட்டத்தில் பிரேக் ஆகிடுச்சு. இயக்குநர்கள் பலரைத் தேடிப்போனேன். ஆனா, யாருமே வாய்ப்பு கொடுக்கல. டப்பிங் சீரியல்கள் என்ட்ரி, என்னை மாதிரியான நடிகர்களின் வாய்ப்பு களை எல்லாம் சுரண்டிடுச்சு. சபர்ணா, சாய் பிரசாந்த் போன்றவர்களின் தற்கொலை சம்பவங்களும் என்னை உலுக்கியிருந்த நேரம் அது. மன உளைச்சல், தனிமை. மூளையும் மனசும் என் பேச்சைக் கேட்கலை. பக்கத்தில் இருந்து நம்பிக்கை தரவும் யாரும் இல்லாத சூழலில்தான் தற்கொலைக்கு முடிவெடுத்தேன். இந்நேரம் என் முதலாமாண்டு நினை வஞ்சலியே முடிஞ்சிருக்கும்” என்கிறார் சின்னத்திரை நடிகர் சாய் சக்தி. கடந்த வருடம் மன உளைச்சல் காரணமாக தற்கொலைக்கு முயன்றவர்.  

வாழ்க்கை வாழ்வதற்கே! - கலை வாழ்வில் கலக்கம் எதற்கு?


``இப்போ நான் ரொம்பவே மாறிட்டேன். சக கலைஞர்களுக்கு என்னோட அட்வைஸ்... யாருமே தனிமையில இருக்காதீங்க. குடும்பத்தோடு இருக்கப் பழகுங்க. தனிமையில இருந்ததுனால தான் யாரோட அட்வைஸும் எனக்குக் கிடைக்காமப் போயிடுச்சு” என்று அனுபவப் பாடம் சொல்கிறார் சாய் சக்தி.

வாழ்க்கை வாழ்வதற்கே!

ஸ்விட்ச் ஆஃப் செல்போன்!  

வாழ்க்கை வாழ்வதற்கே! - கலை வாழ்வில் கலக்கம் எதற்கு?

``கடுமையான மன அழுத்தத்தில் இருப்பவர் களுக்கு இந்தக் காலத்தில் பரிந்துரைக்கப்படும் முக்கிய சிகிச்சை - ஸ்விட்ச் ஆஃப் செல்போன். ஆம்... நான்கு நாள்களுக்கு செல்போனைப் பயன்படுத்தாமல் இருந்தால் 40% மன அழுத்தம் குறையும். பெரும்பாலான தற்கொலைகளுக்கு முன்னால் அத்தனை பேச்சு வார்த்தைகள், சண்டைகளும் போனில்தான் நடந்திருக்கும்'' என்கிறார் சுரேகா.