Published:Updated:

‘ஸ்கூபி’ என்றொரு மாயக்காரன்!

‘ஸ்கூபி’ என்றொரு மாயக்காரன்!
பிரீமியம் ஸ்டோரி
News
‘ஸ்கூபி’ என்றொரு மாயக்காரன்!

கற்போம்சாஹா - படங்கள்: கே.ராஜசேகரன் மாடல்: அக்‌ஷயா

``ஆங்கிலத்தில் ‘அன்கண்டிஷனல் லவ்’ என்பார்கள். அந்த வார்த்தைக்கு மிகச்சரியான உதாரணம் நாய்க்குட்டிகள். `லஸாஅப்ஸோ’ இனத்தைச் சேர்ந்த ஸ்கூபியை என் பிறந்தநாள் பரிசாக மகன்கள் என் கையில் கொடுத்தபோது, அவனுக்கு ஒரு வயது. பொம்மைபோலவே இருப் பான். அதிகம் வளர மாட்டான்’’ என்கிற டாக்டர் ப்ரியா பகிரும் தகவல்கள் செல்லப் பிராணி வளர்க்க நம்மையும் தூண்டுகின்றன.  

‘ஸ்கூபி’ என்றொரு மாயக்காரன்!

``இப்போது ஸ்கூபிக்கு 5 வயது. வீட்டில் அவனுக்கான சாப்பாட்டை எடுத்து வைத்துவிட்டுப் போய்விடுவோம். அவனும் சமர்த்தாகச் சாப்பிட்டு, தூங்கி, பொம்மைகளுடன் விளையாடிக்கொண்டு தனிமையில் இருப்பான். பிள்ளைகள் வந்ததும் அவர்களுக்குத் துணை யாவான்... விளையாட்டுத் தோழனாக மாறுவான்.

மருத்துவமனை டென்ஷனுடனும் களைப்புடனும் வரும் என்னை, நிமிட நேரத்தில் உற்சாகமாக்கிவிடுவான் இந்த மாயக்காரன். பிலிப்பைன்ஸில் இருக்கும் கணவரைப் பார்க்கச் செல்லும்போது ஸ்கூபியை அவனுக்கான ஹாஸ்டலில் விட்டுச் செல்வோம். `அவசரமான, அவசியமான தேவைக்காகத்தான் நம்மைவிட்டுச் செல்கிறார்கள்’ என்பது அவனுக்குத் தெளிவாகப் புரியும். ‘நான் பத்திரமா இருக்கேன்’ என்பதுபோல வழியனுப்பி வைப்பான். திரும்பி வந்ததும் பயங்கரமாக அழுவான். அவனைச் சமாதானப்படுத்தி, சகஜநிலைக்குக் கொண்டுவருவது பெரிய சவாலாக இருக்கும்.

எந்தச் சூழலிலும் அன்பைத் தவிர வேறெந்த உணர்ச்சியையும் காட்டத் தெரியாத அற்புதப் பிறவிகள் நாய்க்குட்டிகள். வாழ்கிற கடைசி நொடி வரை அன்பையும் நன்றியையும் மட்டுமே கொடுக்கும் ஜீவன்களிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கின்றன. கற்போம்!’’ என்று வியக்க வைக்கிறார் ப்ரியா.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz