Published:Updated:

ஆஹா...ஆர்ஜே !

ஆஹா...ஆர்ஜே !

உங்கள்

 

Rajaனி...
Ra
jaனி...
Ra
jaனி...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

முகம் காட்டாம குரலாலயே நம்மள கலகலப்பாக்கற குயில் பார்ட்டிகள்... 'ஆர்ஜே'னு செல்லமா சொல்லப்படற ரேடியோ ஜாக்கிகள்! அழகான தமிழ், தமிழிங்கிலீஷ், கிறக்கமான குரல், நிமிஷத்துக்கு நூறு வார்த்தைகள் கொட்டும் எக்ஸ்பிரஸ் ஸ்பீட், டைமிங் ஜோக்ஸ்னு ஒவ்வொரு ஆர்ஜே-வுக்கும் ஒவ்வொரு சிறப்பு! ஸ்டேட் முழுக்க கலக்கிட்டு இருக்கற அப்படி சில ஆர்ஜே-க்கள் 'அவள் 16’ல இனி தொடர்ந்து அணிவகுக்கப் போறாங்க!

ஆஹா...ஆர்ஜே !
##~##

அந்த தொடரோட்டத்தை 'பொங்கல் சிறப்பிதழ்’ல பச்சைக் கொடி பிடிச்சபடி தொடங்கறாங்க, கிராமத்துக் குயில் ரஞ்சனிதேவி. கிராமத்து மக்கள் விரும்பிக் கேட்கற அகில இந்திய வானொலியோட 'காரைக்கால் எஃப்.எம்.' மூலமா நாகை, திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், பெரம்பலூர் மாவட்ட மக்களை தன்னோட காந்தக் குரலுக்கு அடிமையாக்கி இருக்கற ஆர்ஜே!  

ஸ்டே ட்யூன்டு வித் ரஞ்சனி!

''சொந்த ஊரு நாகப்பட்டினம். இயல்பாவே ரொம்ப துறுதுறு, லொடலொட பொண்ணு நான். இசையில டிப்ளமா முடிச்சவொடன, 'மீடியாவுக்கு போகப் போறேன்’னு சொல்லிட்டுத் திரிஞ்ச எனக்கு, 'அதெல்லாம் ஊரு பக்க பொண்ணுங்களுக்கு வொர்க் அவுட் ஆகாது’னு சுத்தியிருக்கறவங்க இலவச அறிவுரை தந்தாங்க. 'பி.பி.சி-ய அப்பறம் பார்த்துக்கலாம்... மொதல்ல லோக்கல் டி.வி. சேனல் செய்தி எடிட்டரா சேருவோம்...’னு சேர்ந்தேன். அங்க செய்தி எடிட்டர் மற்றும் செய்தி வாசிப்பாளர் நான்தான். என்னோட ஒரே இலக்கு, 'எப்படியாச்சும் காரைக்கால் பண்பலையில சேர்ந்துடணும்’ங்கறதுதான். என் விருப்பத்துக்கு தோதா அங்க ஆள் தேர்வு நடக்க, ஊருல இருக்கற சாமிய எல்லாம் வேண்டிட்டு போனேன். 200 பேர் கலந்துகிட்ட அந்த தேர்வுல, ’கண்ணகியின் அடிச்சுவட்டில்’ங்கற ஸ்கிரிப்ட்டை நான் படிச்ச விதம் என்னை தேர்வு செய்ய வெச்சது!

ஆறு வருஷமா கலகலனு போயிட்டிருக்கு பொழுது. 'காதோடு பேசுவோம்’, 'ஹலோ உங்கள் விருப்பம்’, 'மகளிர் விருப்பம்’னு இப்போ ஒரு நாளைக்கு மூணு நிகழ்ச்சிகள் இந்த ரஞ்சனிதான் பண்றா! மூணுமே நேயர்களோட விருப்பமான நிகழ்ச்சிகள். 'கரும்புத் தின்னக் கூலி...’னு நான் நெனைக்கற அளவுக்கு என்னோட வேலையை சுவாரஸ்யமாக்கறது, என் நேயர்கள்தான். கும்பகோணத்தில் இருந்து தினமும் எனக்குப் பேசற பெரியவர், பல நல்ல கருத்துக்களைப் பகிர்ந்துக்கற வேதாரண்யத்தைச் சேர்ந்த பெண்மணினு ஒவ்வொரு நேயரும் ஒவ்வொரு ரகம், சுகம்.

நிகழ்ச்சிக்காக புத்தர், காந்தி, பாரதியோட கருத்துக்களையெல்லாம் நான் குறிப்பெடுத்துட்டுப் போனா, எந்தத் தயாரிப்பும் இல்லாம பேசற நேயர்கள் என்னை அசத்திடுவாங்க. அவங்களோட அந்த வெகுளித்தனமும், கிராமத்துப் பேச்சும்தான் எனக்கான டானிக்.

சும்மா வார்த்தைக்காக சொல்லல. நடுவுல என்னோட காதல் திருமணத்துக்கு ஏற்பட்ட பிரச்னைகளால கிட்டத்தட்ட ஒரு வருஷம் வேலைக்கு வர முடியாமப் போச்சு. 'ரஞ்சனிக்கு என்ன ஆச்சு..?’னு அக்கறையா அலுவலகத்துக்கு போன் பண்ணி விசாரிச்ச நேயர்கள், என் போன் நம்பரை வாங்கி எனக்குச் சொன்ன ஆறுதல், அறிவுரை, நம்பிக்கை எல்லாம் என்னோட பாக்கியம். ஒருவழியா காதலிச்சவரையே கல்யாணம் பண்ணி செட்டிலாகி, மறுபடியும் வேலைக்கு சேர்ந்தப்போ, நான் இழந்த பலம், சந்தோஷமெல்லாம் திரும்ப கிடைச்சது மாதிரி உணர்ந்தேன். இப்போ என் கணவர், மூணு வயசுக் குழந்தை, என் நேயர்கள்... இந்த மூணு அச்சாணியிலதான் சுவாரஸ்யமா சுழன்றுட்டு இருக்கு என் வாழ்க்கை'' என்று எஃப்.எம். ஸ்டைல்லயே வார்த்தைங்கள அள்ளிவிட்ட  ரஞ்சனி,

'என்னதான் நாம லோக்கல்ல பிரபலமா இருந்தாலும், சிட்டியில இருக்கிறவங்களைத்தான் பேட்டி எடுப்பாங்க. நம்ம பேட்டி எல்லாம் எப்ப புக்ல வர்றது..?’னு நிறைய நாள் நான் ஏங்கியிருக்கேன். ஆனா, 'அவள் விகடன்’, தன்னோட தனித் தன்மையைக் காட்டி, இந்த கிராமத்துக்காரியோட ஏக்கத்தைப் போக்கிடுச்சு.

மீண்டும் இதுபோன்ற ஒரு சந்தர்ப்பத்தில் சந்திக்கும்வரை உங்களிடமிருந்து விடை பெறுவது, ர.... ஞ்... ச... னி!''

- கரு.முத்து