Published:Updated:

மொழி - அன்று முதல் இன்று வரை!

மொழி - அன்று முதல் இன்று வரை!
பிரீமியம் ஸ்டோரி
News
மொழி - அன்று முதல் இன்று வரை!

தீபா ராம்

மொழி - அன்று முதல் இன்று வரை!

கடவுளே கதாபாத்திரமாக!

கிரேக்க மற்றும் ரோமானிய காலத்து நாடகங் களிலிருந்து, இன்று வரை திரைக்கதைகளிலும் நாவல்களிலும் இருப்பவைதாம் இந்த Deus ex Machina. அம்மன் போன்ற தெய்வங்கள் தோன்றும் படங்களை நாம் நிறையவே பார்த்திருப்போம். தீர்க்கவே முடியாத பிரச்னைகளைக் கடவுளே மனித உருவம் எடுத்துவந்து தீர்த்துவைப்பார். அதுபோல கடவுளே நேரே இறங்கிவந்து அருளும் கதாபாத்திரத்துக்கு Deus ex Machina என்ற பெயருண்டு.

அந்தக் காலத்து ஆங்கில நாடகங்களில் Deus ex Machina-வாக வரும் கடவுள் கதாபாத்திரத்தைக் கூப்பிட்ட உடனே பறந்துவருவது போன்ற காட்சி அமைப்புக்காக என்ன செய்வார்கள் தெரியுமா? மேடையின் மேலிருந்து கயிறு கட்டி நாடக மேடையில் தோன்றச் செய்வார்கள். பெருமாள் ஜடாயுவின் முதுகில் ஏறி முதலையிடம் சிக்கிய யானையைக் காப்பாற்ற வருவதை போல!

இது முழுமையான உடை!

ர்தா போலவே உடல் முழுவதும் மறைக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட ஒரு நீச்சல் உடைதான் Burkini or Burquini. இந்த வார்த்தை ‘burqa’ and ‘bikini’ என்பதன் கலவையே. Burkini-ல் கூந்தல் மற்றும் கழுத்துப்பகுதியை மூடுவதற்குக்கூட hood எனப்படும் அரைத்தொப்பி அமைப்பு இருக்கும்.

படமே கதை சொல்லும்!

சார்ட் வரைபடம் அல்லது கிராபிக்ஸ் வரைபடம் மூலம் முக்கியமான புள்ளிவிவரங்களை அலசும் மிகச்சிறிய செய்தித்தொகுப்புக்குப் பெயர் Charticle. ‘chart’ மற்றும் ‘article’ ஆகிய இரு வார்த்தைகளின் சங்கமம் இது.